Published:Updated:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி - தூத்துக்குடியில் நடைபெற்ற வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

தூத்துக்குடியில் உள்ள AVM கமலவேல் மஹாலில் வைத்து 11 நவம்பர் 2021 அன்று கொண்டாடப்பட்டது. இந்த நிறுவனர் தின விழாவிற்கு கோபால் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழாவை மிகச் சிறப்பா தூத்துக்குடியில் உள்ள AVM கமலவேல் மஹாலில் வைத்து 11 நவம்பர் 2021 அன்று கொண்டாடப்பட்டது. இந்த நிறுவனர் தின விழாவிற்கு கோபால் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

TMB
TMB

நிறுவனர் தின விழாவில் ஒரு பகுதியாக வங்கி பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்தியது. வங்கியின் நிறுவனங்களுக்கு வங்கியின் தலைமை அலுவலகத்தில் மரியாதை செய்யப்பட்டது. மேலும் செயல்பாடுகள் பின்வருமாறு:

⦁ நிறுவனர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது

⦁ வங்கியின் 100வது E-lobbyயை தூத்துக்குடிய் மாநகராட்சி ஆணைய T. சாருமதி ஐஏஎஸ் தொடக்கி வைத்தார்.

⦁ ரத்த தான மற்றும் மருத்துவ முகாம் மூலமாக 60 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

⦁ ஸ்ரீ லக்ஷ்மி ஹாலில் வைத்து கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஐஏஎஸ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்குக் கடன் தொகைக்கான கடிதங்களை வழங்கினார்கள். பொது மேலாளர் சூரியராஜ் வரவேற்புரை வழங்க, துணைத் தலைவர் சிதம்பரநாதன், சிறப்பு விருந்தினரைப் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். துணைப் பொது மேலாளர் K.விஜயன் நன்றியுரை வழங்கினார். இவ்வாறான கடன் வழங்கும் முகாம் வங்கியில் உள்ள அனைத்து 12 மண்டலங்களிலும் நடைபெற்றது. தூத்துக்குடி முகாமில் 200 பயனாளிகளுக்கு ரூ.103 கடன் உதவி வழங்கப்பட்டது.

TMB
TMB

⦁ நிறுவனர் குடும்ப உறுப்பினர்கள், வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராமமூர்த்தியால் கௌரவிக்கப்பட்டனர்.

⦁ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர் கோபால் ஸ்ரீனிவாசனை கௌரவித்து சிறப்புரையாற்றினார்.

⦁ வங்கியின் முன்னாள் தலைவர் எஸ். அண்ணாமலை, முன்னாள் இயக்குனர் சி.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

⦁ வங்கியின் சமூகப் பொறுபு நிகழ்வுகள் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

100 ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக வங்கியின் பல்வேறு நிகழ்வுகள் 100 நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. அவை...

⦁ முன்களப் பணியாளர்கள் 100 நபர்களுக்கு நாடு முழுவதும் மரியாதை செய்யப்பட்டது. இதில் 5 நபர்களுக்கு மட்டும் விழா மேடையில் கௌரவம் செய்யப்பட்டது.

⦁ கோவிட் 100 சதவிகித தடுப்பூசி இலக்கினை அடையும் விதமாக 161 கிராமங்களில் 100 சதவிகித மக்களுக்கு முழுவதுமாக தடுப்பூசி வழங்கப்பட்டது. மொத்தமாக 11,726 நபர்கள் பயனடைந்தனர்.

⦁ 100 தனி நபர்களுக்கு இந்தியா முழுவதுமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இந்த விழாவிலேயே வழங்கப்பட்டது.

⦁ 100-வது கிளையாக சாத்தூர் கிளைக்கு ISO 9000:2015 சான்றிதழ் இந்த நன்னாளில் பெறப்பட்டது.

⦁ முன்களப்பணியாளர்களான தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரொக்க உதவி 4 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

⦁ சிறப்பு விருந்தினர் வங்கியின் மெய்நிகர் அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்தார்.

⦁ பல்வேறு தரப்பட்ட போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இந்தியா முழுவதும் நடத்தப்பட்டன. இதன் மூலமாக ஒவ்வொரு போட்டியிலும் மூவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

⦁ சிறப்பு விருந்தினர் கோபால் ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பொது மேலாளர் இன்பமணி நன்றியுரை வழங்கினார். வங்கியின் நிறுவனர் நூற்றாண்டு தின விழா மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது.

இவ்விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குனர், தலைமை நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி, இயக்குனர்கள் குழுவினர், துணைத் தலைவர், பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, துணைப் பொது மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் வங்கி நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு