Published:Updated:

முதல் முறையாக மாநில அரசு தொடங்கும் `பேமென்ட் பேங்க்'; கைகொடுக்குமா தமிழக அரசின் முன்னெடுப்பு?

`பேமென்ட் பேங்க்' என்பது சிறிய அளவிலான வங்கிச் சேவை. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு ஆகியவற்றைத் தொடங்கலாம். இந்த வங்கியில் வாடிக்கையாளர் ஒருவர் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இதற்கான வட்டியும் வழங்கப்படும்.

தமிழக அரசு விரைவில் `பேமென்ட் பேங்க்' ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கான அனுமதி இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைக்குமானால், இந்தியாவிலேயே `பேமென்ட் பேங்க்' ஆரம்பிக்கும் முதல் மாநிலம் என்கிற பெருமை தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்.

`பேமென்ட் பேங்க்' என்பது சிறிய அளவிலான வங்கிச் சேவை ஆகும். இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு ஆகியவற்றைத் தொடங்கலாம். இந்த வங்கியில் வாடிக்கையாளர் ஒருவர் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இதற்கான வட்டியும் வழங்கப்படும்.

Money (Representational Image)
Money (Representational Image)
LIC-யின் பங்கு முதலீடு 10 ஆண்டு களில் இல்லாத அளவு குறைவு; என்ன செய்கிறது LIC?

நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஏ.டி.எம் கார்டு, மொபைல் பேங்கிங், ஆன்லைன் பேங்கிங் ஆகிய சேவைகளை பேமென்ட் பேங்க் வழங்கும்.

இந்த பேமென்ட் பேங்குகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) கணக்கு தொடங்க முடியாது. இந்த பேமென்ட் வங்கிகள் கடன் வழங்குதல் போன்ற சேவைகள் எதிலும் ஈடுபடாது. எனவே, கடன் பெற நினைப்பவர்கள் வழக்கமான வங்கிகளுக்குத்தான் செல்ல வேண்டும். இந்த வங்கியின் மூலம் கிரெடிட் கார்டும் வழங்கப்படாது.

``தமிழக அரசு அமைக்க இருக்கும் `பேமென்ட் பேங்க்' எளிமையான நடைமுறையைக் கொண்டிருக்கும் என்பதால், இந்த வங்கியை சாமான்ய மக்கள் எளிதில் அணுக முடியும். இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு எளியமுறையில் நிதிச் சேவை கிடைக்கும். மேலும், பேமென்ட் வங்கிகளால் நிதிப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்னும் அதிகமாகும்.

Money (Representational Image)
Money (Representational Image)
முதலீட்டாளர்களைக் கைவிடாத மியூச்சுவல் ஃபண்டுகள்; இவற்றுள் உங்களுக்கு ஏற்றது எது? - 39

குறிப்பாக, சேமிப்புக் கணக்குகள், பேமென்ட்ஸ் மற்றும் ரெமிட்டன்ஸ் (remittance ) சேவைகள் கூலித்தொழிலாளர்கள், குறைந்த வருவாய் உடையோர், சிறிய வியாபாரிகள் மற்றும் இதர அமைப்புசாரா துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்குக் கிடைக்கும். குறிப்பாக, பணமில்லாத பரிவர்த்தனையை மேற்கொள்வதே இந்த பேமென்ட் வங்கியின் முக்கிய நோக்கம்" என இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தற்போதைய நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், இந்தியத் தபால் துறை (இந்தியா போஸ்ட்), ஃபினோ பேடேக், என்.எஸ்.டி.எல் மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு பேமென்ட் பேங்க் ஆரம்பிப்பதற்காக அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு