நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஒருவழியாக பொதுபங்கு வெளியிடத் தயாராகிவிட்டது. 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னாளில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியாக மாறியது.

சில ஆண்டு காலமாகவே இந்த வங்கியின் ஐ.பி.ஓ குறித்த சிக்கல் நிலவிவந்த சூழலில், தற்போது இதன் பங்குதாரர்கள் ஐ.பி.ஓ வெளியிட ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள். மொத்தம் 26,000 பங்குதாரர்கள் உள்ள வங்கியில் 75% பங்குதாரர்கள் இந்த ஐ.பி.ஓ-வுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த 28-ம் தேதி வங்கியின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. 2015-16-ம் நிதியாண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்துக்கு மொத்தமாக சேர்த்து இந்தக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஐ.பி.ஓ குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தகவல்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டதை இந்த வங்கியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை உறுதிப்படுத்தி இருக்கிறார். அடுத்த 12 மாதங்களில் இந்த ஐ.பி.ஓ வெளியாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வங்கி ஐ.பி.ஓ வருவது குறித்து கடந்த 2016-ம் ஆண்டே விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான பங்குதாரர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இனியாவது ஐ.பி.ஓ வரட்டும்!

- வா.கா