இந்தியா முழுவதும் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கால் அனைத்து நிறுவனங்களும் வருமான இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

இதனால் பலருக்கும் 10-50% வரை சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுக்க 10 கோடிக்கும் அதிகமானவர்கள் வருமானம் ஈட்ட முடியாத நிலையை அடைந்திருக்கிறார்கள். பல லட்சம் பேர் வேலையைக்கூட இழந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் கார் கடன், இரு சக்கர வாகனக் கடன், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கடன் எனப் பல கடன்களை வாங்கியவர்கள், மாதச் சம்பளம் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் எந்தத் தவணையை முதலில் செலுத்துவது என்று தெரியாமல் குழம்பிப்போயிருக்கிறார்கள். இந்தத் தவணைகளில் எதை முதலில் செலுத்த வேண்டும், எதைப் பிறகு செலுத்திக்கொள்ளலாம் என்பது குறித்து நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“மாதச் சம்பளத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாதபோது, நீங்கள் வாங்கிய கடனுக்கான தவணையைத் தள்ளிப்போட வேண்டாம். சம்பள பாதிப்பு இருப்பவர்கள் மட்டுமே தவணையைத் தள்ளிப்போடுவது குறித்துச் சிந்திக்க வேண்டும். உங்களால் முடியும்பட்சத்தில், வீட்டுக் கடனுக்கான அசலை வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிடுங்கள். வீட்டுக் கடனை இப்போது செலுத்தவே முடியாது என்பவர்கள் அது பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். காரணம், அதற்கு மூன்று மாத கால அவகாசம் தரப்பட்டிருக்கிறது.

உங்களுக்குத் தனிநபர் கடன், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கடன் மற்றும் வாகனக் கடன் போன்றவை இருந்து, உங்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பணம் இருந்தால், தனிநபர் கடனுக்கான தவணையைச் செலுத்த முன்னுரிமை கொடுங்கள். ஏனெனில், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் மற்ற கடன்களைவிடச் சற்று அதிகமாக இருக்கும். அதிகமாக வட்டியுள்ள கடன்கள்தான் எப்போதும் முதலில் அடைக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை விதிமுறை. இதன்படி, பொதுத்துறை வங்கிகளில் 14-18% வரையும், தனியார் வங்கிகளில் 16-20% வரையும் உள்ள தனிநபர் கடன்களுக்கான மாதத் தவணைகளை முதலில் செலுத்திவிடுங்கள். தனிநபர் கடன்களுக்கான தவணையைத் தள்ளிவைக்கும் வாய்ப்பை அரசு வழங்கியிருந்தாலும்கூட, அப்படித் தள்ளிச் செலுத்துவதால் நீங்கள் செலுத்த வேண்டிய மீதித் தவணைக்கான வட்டி விதிக்கப்படும் என்பதால் கடன் சுமை அதிகரிக்கவே செய்யும்.

கார் கடனுக்கான மாதத் தவணை, வீட்டு உபயோகப் பொருள்களுக்கான மாதத் தவணைகளில் 99 சதவிகிதமானவை தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கப்பட்டிருப்பதால், `அவற்றை இந்தக் கஷ்ட காலத்தில் செலுத்தாமல் இருக்கலாம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த மாதத் தவணைகளுக்கான முழுத் தொகையையும் செலுத்த முடியவில்லை யென்றாலும், ஒரு பகுதி பணத்தைச் செலுத்தி, மீதிப் பணத்தை அடுத்தடுத்த மாதங்களில் செலுத்தலாமா என்பது குறித்துக் கடன் வாங்கிய நிறுவனத்திடம் பேசிப் பாருங்கள். இதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், மாதத் தவணை முழுவதையும் செலுத்தியாக வேண்டும் என்ற நிர்பந்தத்திலிருந்தும் தப்பிக்கலாம். அதிகரிக்கும் கடன் சுமையிலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.

இந்தக் கடன்களுக்கான மாதத் தவணையை செலுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள், புதிதாக வேறொரு கடனை அதிக வட்டிக்கு வாங்கிச் செலுத்துவதைவிட வேறு சில எளிய வழிகளைப் பின்பற்றலாம்.

நீங்கள் ஆயுள் காப்பீடு பாலிசிதாரராக இருந்தால், பாலிசிக்கான பிரீமியம் செலுத்தத் தொடங்கி ஏழு ஆண்டுக்காலத்துக்கு மேல் ஆகியிருக்கும்பட்சத்தில், நீங்கள் செலுத்திய பிரீமியம் நல்லதொரு தொகையாகச் சேர்ந்திருக்கும். எனவே, அதிலிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று, அதிக வட்டியுள்ள மாதத் தவணைகளைச் செலுத்தலாம்.

உங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியின் முதிர்வுக்கான கால அளவு இன்னும் 2-3 ஆண்டுகள் இருக்கும்பட்சத்தில் அந்த பாலிசியை சரண்டர் செய்துவிட்டு, அந்தத் தொகையைக் கொண்டு மாதத் தவணையைச் செலுத்தலாம். ஆயுள் காப்பீட்டுக்கு பதிலாக, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்குக் குறைந்த பிரீமியத்தில் எடுக்கக்கூடிய டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த வாய்ப்பு இல்லாதவர்கள், தங்களிடம் இருக்கும் தங்க நகையை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்று, அந்தப் பணத்தை மாதத் தவணையாகக் கட்டலாம். தங்க நகைக் கடனுக்கும் வட்டி அதிகம்தான். எனவே, தங்க நகைக்கு நீங்கள் செலுத்தும் வட்டி, மாதத் தவணையுடன் கட்டும் வட்டியை ஈடுசெய்யும் அளவுக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளராக இருக்கும்பட்சத்தில், தற்போதுள்ள சூழலில், அதிலிருந்து பணத்தை எடுப்பதற்குப் பதிலாக அவற்றை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் பெற முடியுமா என்று முயன்று பாருங்கள்.

அந்த வாய்ப்பும் இல்லாதவர்கள் ‘அவசரகால சம்பளக்கடன்’ திட்டத்தின் மூலம் வங்கிக் கடன் பெறலாம். இந்த வங்கிக் கடனை, இந்தியன் வங்கி போன்ற சில வங்கிகள் வழங்குகின்றன. கடைசியாக வாங்கிய மொத்தச் சம்பளத்தைவிட 20 மடங்கு சம்பளம் அல்லது அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வங்கிக் கடன் பெறலாம்.

இந்த இக்கட்டான நிலையில், ஒரே ஓர் உண்மையை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை ‘எமர்ஜென்ஸி ஃபண்ட்’ என்ற கணக்கில் அவசியம் இருக்க வேண்டும். இந்த எமர்ஜென்ஸி பணத்தை எப்படிச் சேர்ப்பது என்று இனியாவது யோசிக்க ஆரம்பியுங்கள்.

நீங்கள் வாங்கும் சம்பளத்தில் 5% பணத்தை எமர்ஜென்ஸி ஃபண்டுக்கென தனியாக ஒதுக்கி வைத்துவிடுங்கள்.

இப்படி ஒவ்வொரு மாதமும் சேர்த்துவைப்பதன் மூலம் ஒரு சில ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவுக்குப் பணம் சேர்ந்திருக்கும். இப்படிச் செய்தால் கடன் வாங்கியோ, பொருள்களை அடமானம் வைத்தோதான் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற சங்கடத்திலிருந்து நம்மால் விடுபட முடியும்’’ என்றார் சுரேஷ் பார்த்தசாரதி.

மாதத் தவணை செலுத்த முடியாமல் தவிப்பவர்கள், நிதி நிபுணர் சொல்லும் ஆலோசனைகளைப் பரிசீலிக்கலாமே!