Published:Updated:

இ.எம்.ஐ செலுத்துவதில் சிக்கலா? - இதோ சில யோசனைகள்!

இ.எம்.ஐ
இ.எம்.ஐ

உங்களுக்குத் தனிநபர் கடன், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கடன் மற்றும் வாகனக் கடன் போன்றவை இருந்து, உங்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பணம் இருந்தால், தனிநபர் கடனுக்கான தவணையைச் செலுத்த முன்னுரிமை கொடுங்கள்

* மாதச் சம்பளத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாதபோது, நீங்கள் வாங்கிய கடனுக்கான தவணையைத் தள்ளிப்போட வேண்டாம்.

* சம்பள பாதிப்பு இருப்பவர்கள் மட்டுமே தவணையைத் தள்ளிப்போடுவது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

* உங்களால் முடியும்பட்சத்தில், வீட்டுக் கடனுக்கான அசலை வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிடுங்கள்.

* வீட்டுக் கடனை இப்போது செலுத்தவே முடியாது என்பவர்கள் அது பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். காரணம், அதற்கு மூன்று மாத கால அவகாசம் தரப்பட்டிருக்கிறது.

* உங்களுக்குத் தனிநபர் கடன், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கடன் மற்றும் வாகனக் கடன் போன்றவை இருந்து, உங்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பணம் இருந்தால், தனிநபர் கடனுக்கான தவணையைச் செலுத்த முன்னுரிமை கொடுங்கள். ஏனெனில், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் மற்ற கடன்களைவிடச் சற்று அதிகமாக இருக்கும்.

இ.எம்.ஐ
இ.எம்.ஐ

* அதிகமாக வட்டியுள்ள கடன்கள்தான் எப்போதும் முதலில் அடைக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை விதிமுறை. இதன்படி, பொதுத்துறை வங்கிகளில் 14-18% வரையும், தனியார் வங்கிகளில் 16-20% வரையும் உள்ள தனிநபர் கடன்களுக்கான மாதத் தவணைகளை முதலில் செலுத்திவிடுங்கள்.

* தனிநபர் கடன்களுக்கான தவணையைத் தள்ளிவைக்கும் வாய்ப்பை அரசு வழங்கியிருந்தாலும்கூட, அப்படித் தள்ளிச் செலுத்துவதால் நீங்கள் செலுத்த வேண்டிய மீதித் தவணைக்கான வட்டி விதிக்கப்படும் என்பதால் கடன் சுமை அதிகரிக்கவே செய்யும்.

- நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி கூறும் வழிகாட்டுதல்களின் சில துளிகள் இவை.

இந்தியா முழுவதும் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கால் அனைத்து நிறுவனங்களும் வருமான இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

இதனால் பலருக்கும் 10-50% வரை சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுக்க 10 கோடிக்கும் அதிகமானவர்கள் வருமானம் ஈட்ட முடியாத நிலையை அடைந்திருக்கிறார்கள். பல லட்சம் பேர் வேலையைக்கூட இழந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் கார் கடன், இரு சக்கர வாகனக் கடன், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கடன் எனப் பல கடன்களை வாங்கியவர்கள், மாதச் சம்பளம் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் எந்தத் தவணையை முதலில் செலுத்துவது என்று தெரியாமல் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

இந்தத் தவணைகளில் எதை முதலில் செலுத்த வேண்டும், எதைப் பிறகு செலுத்திக்கொள்ளலாம் என்பது குறித்து நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்ன அவர், பாலிசிகள் தொடங்கி அவசரக்கடன் வரையிலான சில வழிமுறைகளையும் அடுக்கினார். அவற்றில், உங்களுக்குப் பொருத்தமான யோசனையை முழுமையாக அறிய > செலுத்த வேண்டிய மாதத் தவணைகள்! - சிக்கலான காலத்தில் ஒரு வழிகாட்டல் Click Here https://bit.ly/35sUZY9

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு