Published:Updated:

5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி: ஒரே குடும்பத்தினரின் பல கடன்களும் தள்ளுபடியாகுமா?

தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6,000 கோடி ரூபாய் ஆகும் எனத் தெரிய வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி 5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைக் கடன், தகுதியானவர்களுக்குத் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்தார்.

அதன்பிறகு கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வாங்கியவர்களின் விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்து, அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு துரிதப்படுத்தியது. இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டபோது, கூட்டுறவு வங்கிகளில் பலர் முறைகேடாக நகைக்கடன்கள் பெற்றது தெரியவந்தது. இதனால், கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது.

 முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
நகைக்கடன்: விவரங்களைச் சேகரிக்கும் தமிழக அரசு; விரைவில் வருமா கடன் தள்ளுபடி அறிவிப்பு?

இந்தக் குழு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளிலும் பெறப்பட்ட நகைக்கடன்களை ஆய்வு செய்தது. அந்தக் குழு சமர்பித்த ஆவணங்களின் அடிப்படையில், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக் கடன் பெற்றவர்களுக்கான கடன், தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசின் தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது.

அரசாணை வெளியீடு!

இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, ``தமிழ்நாடு முதலமைச்சர் 13.09.2021 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன்கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நகைக்கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின்கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.

தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6,000 கோடி ரூபாய் ஆகும் எனத் தெரிய வருகிறது. இதற்காக கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளைச் செய்யும்.

கடன்
கடன்

முதலமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்த ஏதுவாக, கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி, ஒரு குடும்பத்தினர் 31.03-2021-ம் நாள் வரை 5 பவுனுக்கு உட்பட்டு (மொத்த எடை 40 கிராம் வரை) தங்க நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றதில் ஒரு சில கடன்தாரர்கள், தங்களது கடன் தொகையைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்தியது நீங்கலாக, 31-03-2021-ம் நாள் வரை நிலுவையில் இருந்த தொகை ரூ.17,114.64 கோடி என்றும், அதற்குப்பிறகு 01.04.2021 முதல் 30.09.2021 வரை பொது நகைக் கடன்களைப் பகுதியாகவோ அல்லது முழுவதுமாகத் திரும்பச் செலுத்தியது மற்றும் தகுதி பெறாத நகைக்கடன்கள் நீக்கியபின்னர் அசல், வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்டு நிலுவையாக ரூ.6,000 கோடி (தோராயமாக) உள்ளது. இந்த கடன் தொகை முழுவதும் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று தமிழக அரசாங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நகைக்கடன் தள்ளுபடியின் விதிமுறைகளின்படி, ஒரு குடும்பத்தில் ஒரு நபரின் ஆதார் கார்டை அடையாளமாக வைத்து, ஒரே ஒரு வங்கிக் கணக்கின் மூலம் 5 பவுன் வரை வாங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும்.

Gold
Gold
Photo by vaibhav nagare on Unsplash
Gold Loan: அடகுக்கடைகளில் நகைக்கடன் பெறப்போகிறீர்களா? இவற்றை நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்!

அதே போல, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலரும், பல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருந்தாலும், அவர்களின் மொத்த நகைக்கடனில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் மட்டும் தள்ளுபடி ஆகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நகைக்கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். மேலும், தமிழக அரசு நடத்திய விசாரணையின் மூலம் மோசடியில் ஈடுபட்டதாகக் கண்டுபிடிக்கப்படும் நபர்கள் அனைவரின் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு