Published:Updated:

`Positive Pay, IMPS-ல் மாற்றம்!' - பல வங்கிகளில் பிப்ரவரி முதல் அமலான புதிய விதிமுறைகள் என்னென்ன?

Card (Representational Image) ( Photo: Unsplash )

பேங்க் ஆஃப் பரோடா (BoB), ICICI வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகியவை,  கார்டு கட்டணங்கள், ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகள் மற்றும் பணப் பரிமாற்றங்களுக்கான  சில விதிகளை பிப்ரவரி 1-ம் தேதி முதல் மாற்றியுள்ளன.

`Positive Pay, IMPS-ல் மாற்றம்!' - பல வங்கிகளில் பிப்ரவரி முதல் அமலான புதிய விதிமுறைகள் என்னென்ன?

பேங்க் ஆஃப் பரோடா (BoB), ICICI வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகியவை,  கார்டு கட்டணங்கள், ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகள் மற்றும் பணப் பரிமாற்றங்களுக்கான  சில விதிகளை பிப்ரவரி 1-ம் தேதி முதல் மாற்றியுள்ளன.

Published:Updated:
Card (Representational Image) ( Photo: Unsplash )

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா (BoB), ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை கார்டு கட்டணங்கள், ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகள் மற்றும் பணப் பரிமாற்றங்களுக்கான  சில விதிகளை பிப்ரவரி மாதத்திலிருந்து  மாற்றியுள்ளன.

புதிதாக பரிவர்த்தனைகளின் விதிகளை மாற்றிய வங்கிகளின் பட்டியல்:

பேங்க் ஆஃப் பரோடா (BoB): இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுபடி, பிப்ரவரி 1, 2022 முதல் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்கு `பாசிட்டிவ் பே' முறை கட்டாயமாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா

இது மோசடி செயல்பாடுகளைக்  கண்டறிய வடிவமைக்கப்பட்ட கருவி ஆகும். இதில் செக் எண், காசோலை தேதி, பணம் பெறுபவரின் பெயர், கணக்கு எண், தொகை மற்றும்  வழங்கப்பட்ட காசோலை தொடர்பான தகவல்களை காசோலை  வழங்குநரால் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.  

 இப்போது, காசோலை வைத்திருப்பவர் காசோலையின் சில குறைந்தபட்ச விவரங்களை எஸ்.எம்.எஸ்., மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், ஏ.டி.எம் போன்ற சேனல்கள் மூலம் டிராயி (Drawee) வங்கிக்கு மின்னணு முறையில் வழங்க வேண்டும். அந்த விவரங்கள் சி.டி.எஸ் முறையில் சரிபார்க்கப்பட்டு சரியாக இருந்தால் பரிவர்த்தனை நிகழும் . 

பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேலுள்ள பரிவர்த்தனைகளுக்கே இந்த முறை  பொருந்தும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்: வங்கி கிரெடிட் கார்டு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அனைத்து ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களும், முன்பணத்தில் 2.50% பரிவர்த்தனைக் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதாவது, குறைந்தபட்சமாக 500 ரூபாய் வரை செலுத்த வேண்டும். 

காசோலை அல்லது ஆட்டோ டெபிட் ரிட்டன்களின்போது, வங்கியிலுள்ள நிலுவைத் தொகையிலிருந்து 2% பணத்தை வங்கி வசூலிக்கும். கூடுதலாக, வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.50 மற்றும் ஜி.எஸ்.டி.யும்  பெற்றுக்கொள்ளப்படும்.

ICICI Bank
ICICI Bank

மேலும், கிரெடிட் கார்டில் லேட் பேமெண்ட் கட்டண விதிகளும்  திருத்தியமைக்கப்பட்டுள்ளது. செலுத்த வேண்டிய மொத்தத் தொகையின் அடிப்படையில்  கார்டில்  தாமதமாக  செலுத்தப்பட்ட கட்டணங்களை வங்கி கணக்கிடும். இதற்கான அதிகபட்ச கட்டணம் 1,200 ரூபாய்.  

கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைக் குறிப்பிட்ட  நேரத்திற்குள் செலுத்த முடியாவிட்டால்,  தொகையைக் கொடுத்து சரிசெய்யும்வரை கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.  

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் எமரால்டு கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் பேங்க்: உங்கள் டெபிட் கணக்கில் பணம் இல்லாதபட்சத்தில், ஒரு பரிவர்த்தனை தோல்வி அடைந்தால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.100-க்குப் பதிலாக ரூ.250 செலுத்த வேண்டும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI): பணப் பரிமாற்றம் தொடர்பான மாற்றங்களைச் செய்துள்ளது.  பிப்ரவரி 1 முதல், ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பரிவத்தனைகளுக்கு வங்கி உடனடி கட்டணச் சேவை (IMPS) என்ற  புதிய ஸ்லாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.  

State Bank of India
State Bank of India
Vikatan

இதன் மூலம் பணத்தை மாற்றுவதற்கான சேவைக் கட்டணமாக ரூ.20 மற்றும் ஜி.எஸ்.டி என நிர்ணயித்துள்ளது. ரூ.2 லட்சத்துக்கும் குறைவான பணத்தை மாற்றுவதற்கான சேவைக் கட்டணங்களில் மாற்றம் ஏதும் இருக்காது என அறிவித்துள்ளது.

இந்த வங்கிகளில் வாடிக்கையாளர்களாக இந்த மாற்றங்களை சரியாகத் தெரிந்துகொண்டு அவற்றைப் பின்பற்றுவதன்மூலம் பல ஆயிரம் ரூபாய் அபராதத்தைத் தவிர்த்து, பணத்தை மிச்சப்படுத்த முடியும்!