Published:Updated:

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு... புதிய விதிமுறைகள் ஏன்? - அனைவரும் அறிய வேண்டியவை

டெபிட் கார்டு, 
கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு

இந்தியாவில் வழங்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை இனி நம் நாட்டில் உள்ள ஏ.டி.எம், பாயின்ட் ஆஃப் சேலில் மட்டுமே பயன்படுத்தலாம்!

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு... புதிய விதிமுறைகள் ஏன்? - அனைவரும் அறிய வேண்டியவை

இந்தியாவில் வழங்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை இனி நம் நாட்டில் உள்ள ஏ.டி.எம், பாயின்ட் ஆஃப் சேலில் மட்டுமே பயன்படுத்தலாம்!

Published:Updated:
டெபிட் கார்டு, 
கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு
ன்றைய காலகட்டத்தில் டெபிட், கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தாத மக்களின் எண்ணிக்கை சொற்பமே. ஆனால், நாம் மேற்கொள்ளும் டெபிட், கிரெடிட் கார்டு பணப் பரிவர்த்தனைகளில் தினமும் பல்வேறு குளறுபடிகள் நடந்தவண்ணம் உள்ளன.

ஆன்லைன் பரிவர்த்தனைகளிலும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. இவற்றைக் கவனத்தில் கொண்ட ரிசர்வ் வங்கி, டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய சில புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் கடந்த அக்டோபர்-1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

டெபிட் கார்டு, 
கிரெடிட் கார்டு
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள்

1. இந்தியாவில் வழங்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்தியாவில் உள்ள ஏ.டி.எம்கள் மற்றும் பாயின்ட் ஆஃப் சேல் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

2. வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்த விரும்பினால், அவர்கள் தங்கள் வங்கியிடம் அனுமதி பெற வேண்டும். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு முன், பெரும்பாலான வங்கிகள் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் கார்டுகளை வழங்கி வந்தன.

3. தற்போதுள்ள டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு, அதை வழங்கும் நிறுவனங்களே தங்கள் சந்தேகத்தின் அடிப்படையில், அட்டை இல்லாத (உள்நாட்டு மற்றும் சர்வதேச) பரிவர்த்தனைகள், தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகள் ஆகியவற்றை முடக்கலாமா என்ற முடிவை எடுக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

4. அனைத்து வங்கிகளுக்கும், அட்டை வழங்கும் நிறுவனங்களுக்கும் அனைத்து டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைனில் பணம் செலுத்துவதை முடக்கு மாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

டெபிட் கார்டு, 
கிரெடிட் கார்டு
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு

5. புதிய விதிமுறைகளின்படி, வாடிக்கை யாளர்களே இப்போது தாங்கள் விரும்பும் சேவைகளைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது அவற்றிலிருந்து விலகிக்கொள்ளலாம். ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேசப் பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் மற்றும் பிற சேவைகளைப் போன்ற விருப்பங்களை அவர்களே பதிவு செய்ய முடியும்.

6. மொபைல் பயன்பாடு, இணைய வங்கி, ஏ.டி.எம்கள், ஐ.வி.ஆர் சேவை உள்ளிட்டவற்றின் மூலம் 24 மணி நேரமும் பரிவர்த்தனை தொடர்பான சேவைகளைப் பெறலாம் அல்லது முடக்கலாம்.

7. பல வங்கிகள் அருகிலுள்ள களதொடர்பு (என்.எஃப்.சி) தொழில்நுட்பத்தின் அடிப் படையில் அட்டைகளை வழங்கி வருகின்றன. ஒரு வணிகர் அத்தகைய அட்டைகளை ஸ்வைப் செய்யவோ, விற்பனை முனையத்தில் பயன்படுத்தவோ தேவையில்லை. இவை தொடர்பு இல்லாத அட்டைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் என்.எஃப்.சி அம்சத்தைத் தொடரலாம் அல்லது முடக்கலாம்.

8. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனாளர்கள் தங்களின் பணப் பரிவர்த் தனையின் வரம்பை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.

டெபிட், கிரெடிட் கார்டுகள் தொலைந்து அல்லது திருடு போய், அவற்றை நம் நாட்டில் மற்றவர் பயன்படுத்தி வந்தால், அவர் மீது வழக்கு பதிவு செய்து, நம் கார்டையும் இழந்த பணத்தையும் திரும்பப் பெறலாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

9. புதிய விதிமுறைகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கு மட்டுமே பொருந்தும். ப்ரீபெய்டு பரிசு அட்டைகள் அல்லது மெட்ரோ அல்லது போக்குவரத்துக்கு மட்டும் பயன்படுத்தும் அட்டைகள் இதன்கீழ் வராது.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு... புதிய விதிமுறைகள் ஏன்? - அனைவரும் அறிய வேண்டியவை

10. ‘இந்த வழிமுறைகள் பரிவர்த்தனை மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007 (2007-ன் சட்டம் 51)-ன் பிரிவு 10 (2)-ன்கீழ் நடைமுறைப்படுத்தப் படுகின்றன’ என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பாதுகாப்பை முன்னிறுத்தி...

டெபிட், கிரெடிட் கார்டுகளின் பயன் பாட்டுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்தப் புதிய விதிமுறைகள் குறித்து நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் பேசினோம்.

“டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை களுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த விதிமுறைகள் அனைத்தும் பாதுகாப்பை முன்னிறுத்தியே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. சமீப காலங்களில் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளில் பல்வேறு குளறுபடிகளும் மோசடிகளும் நடப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இவற்றைத் தவிர்ப்பதற்காகவே இந்தப் புதிய விதிமுறைகள் கொண்டுவரப் பட்டுள்ளன.

இனி டெபிட், கிரெடிட் கார்டு களை இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் மையங்கள் மற்றும் பாயின்ட் ஆஃப் சேல் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இவற்றை இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்த விரும்பினால், அவர்கள் தங்கள் வங்கியிடம் அனுமதி பெற வேண்டும் என்றொரு புதிய விதி முறையை ரிசர்வ் வங்கி அறிவித் துள்ளதால், இனி வெளிநாட்டுக்குச் செல்லும்போது நம்மூர் டெபிட், கிரெடிட் கார்டுகளை மற்ற நாடுகளில் பயன்படுத்த முடியாது.

டெபிட் கார்டு, 
கிரெடிட் கார்டு
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு

டெபிட், கிரெடிட் கார்டுகள் தொலைந்தோ, திருடு போகும் பட்சத்தில் அவற்றை இந்தியாவுக் குள்ளேயே வேறு ஒருவர் பயன் படுத்திக்கொண்டிருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம். நம் கார்டையும், இழந்த பணத்தையும் மீட்டுவிடலாம். அதுவே திருடுபோன டெபிட், கிரெடிட் கார்டுகளை ஒருவர் வெளிநாட்டில் பயன்படுத்தி வந்தால், அவர் மீது வழக்கு பதிவது எளிதல்ல. அதற்கு சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதி உள்ளிட்ட பல்வேறு சட்டரீதியான விஷயங்களைக் கடந்தாக வேண்டும். இந்தச் சிக்கல்களைத் தவிர்க்கவே ரிசர்வ் வங்கி இந்த முக்கிய விதிமுறையை அறிவித்துள்ளது.

‘டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனாளர்கள் தங்களின் பணப் பரிவர்த் தனையின் வரம்பை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்’ என்ற மற்றொரு விதிமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு மாதத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு களின் வழியே பரிவர்த்தனை செய்துகொள் வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும். ஆனால், நீங்கள் பரிவர்த்தனை செய்யும் தொகை வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட தொகையைவிடக் குறைவாக இருக்கும் பட்சத்தில், உங்களின் பணப் பரிவர்த்தனை வரம்பை நீங்களே குறைத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு ஒரு மாதத்துக்கு உங்கள் கார்டுகளின் வழியே ரூ.50,000 எடுக்க முடியும் என்ற வரம்பை நிர்ணயித்துக்கொண்டீர்கள் என்றால், ஒருவேளை உங்கள் கார்டு தொலைந்து போனாலோ, ஆன்லைன் மோசடிக்கு உள்ளானாலோ அதிலிருக்கும் பணத்தை முழுவதுமாக யாராலும் எடுக்க முடியாது. உங்கள் பணம் காப்பாற்றப்படும்.

இவற்றைப்போல் என்.எஃப்.சி எனப்படும் தொடர்பு இல்லாத அட்டைகளுக்கான வசதியை அனைத்து வங்கிகளும் வழங்கி வந்தன. அதாவது, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வெளியில் செல்லும்போது எடுத்துச்செல்ல விரும்பாதவர்கள், தங்கள் மொபைலுடன் கார்டுகளை இணைத்துக் கொண்டால் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இதன்மூலம் பல ஆன்லைன் பண மோசடிகள் நடைபெற்று வந்தன. அதனால் என்.எஃப்.சி சேவையை விரும்புவோர் மட்டும் அதைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு என்னென்ன சேவை வேண்டும் என்பதை இந்தப் புதிய விதிமுறைகள் மூலம் இனி நீங்களே தேர்வு செய்யலாம்” என்றார்.

இந்தப் புதிய விதிமுறைகளை எல்லோரும் தெரிந்துகொண்டு நடப்பது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism