Published:Updated:

நிதியாண்டை மாற்றிய ஆர்.பி.ஐ..! - ஏன் இந்த மாற்றம்..?

ஏப்ரல்
பிரீமியம் ஸ்டோரி
ஏப்ரல்

2021-22–ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி, மத்திய அரசின் நிதியாண்டோடு பொருந்திச் செல்லும்!

நிதியாண்டை மாற்றிய ஆர்.பி.ஐ..! - ஏன் இந்த மாற்றம்..?

2021-22–ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி, மத்திய அரசின் நிதியாண்டோடு பொருந்திச் செல்லும்!

Published:Updated:
ஏப்ரல்
பிரீமியம் ஸ்டோரி
ஏப்ரல்
ண்மையில் டெல்லியில் நடந்த ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில், `2021-22-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் நிதியாண்டுக் கணக்குடன் பொருந்திச் செல்வதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதியாண்டு எனப்படுவது ஓராண்டின் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டின் மார்ச் 31-ம் தேதி முடிவடையக்கூடிய கால அளவு.

ஏப்ரல்
ஏப்ரல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்.பி.ஐ-ன் நிதியாண்டு வரலாறு..!

இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ள ஆர்.பி.ஐ-யின் நிதியாண்டு வரலாற்றைப் பார்ப்பது சரியாக இருக்கும். ஆர்.பி.ஐ ஆரம்பிக்கப்பட்ட 1935-ம் ஆண்டில், அதன் நிதியாண்டு ஜனவரியில் தொடங்கி டிசம்பரில் முடிந்தது. அப்போது இந்திய அரசின் நிதியாண்டு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரலில் முடிந்தது. மேலும், வங்கிகளின் நிதியாண்டு மார்ச் – ஏப்ரலாக இருந்தது. வங்கிகள் அவற்றின் நிதிநிலை முடிவுகளை ஏப்ரல் கடைசியில் தாக்கல் செய்யும். அவற்றை அலசி ஆராய்ந்து, மத்திய அரசுக்கும், பொதுமக்களுக்கும் அறிக்கையாக அளிக்கும்விதமாக, 1940-ம் ஆண்டு ஆர்.பி.ஐ-யின் நிதியாண்டு ஜூலை முதல் ஜூன்-ஆக மாற்றப்பட்டது. இங்கிலாந்தில் நிதியாண்டு ஏப்ரலில் தொடங்கி மார்ச்சில் முடியும். அதே நடைமுறை நம் நாட்டிலும் பின்பற்றப்பட்டது. நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் இந்த நடைமுறையே தொடர்ந்தது.

ஹிந்து காலண்டர் ஏப்ரலில் தொடங்கும். அந்த வகையில் மத்திய அரசும் ஏப்ரல் மாதத்தை நிதியாண்டு தொடக்கமாகக் கொண்டிருந்தது. மேலும், இந்தியாவில் பயிர் சாகுபடிக் காலம் ஏப்ரல் தொடங்கி மார்ச்-ல் முடிவடையும் என்பதால், இதுவும் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டுக்கான ஒரு காரணமாக அமைந்தது. மேலும், இந்தியாவில் நவம்பர்-டிசம்பர் பண்டிகைக் காலம் (தீபாவளி, கிறிஸ்மஸ்). அந்த நேரங்களில் வர்த்தகம் அதிக அளவில் இருக்கும். அந்த பிஸியான காலத்தில் கணக்குவழக்குகளை முடிப்பது கஷ்டமாக இருக்கும் என்பதால், ஜனவரி - டிசம்பர் வரையிலான நிதியாண்டை யாரும் தேர்வு செய்யவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஏப்ரல்
ஏப்ரல்

இந்த நிலையில், இப்போது மத்திய அரசு பின்பற்றும் ஏப்ரல் – மார்ச் நிதியாண்டை ஆர்.பி.ஐ-யும் பின்பற்றுவதாக அறிவித்துள்ளது. ஆர்.பி.ஐ-யின் 2019-2020–ம் நிதியாண்டு, நடப்பு ஆண்டு 2020, ஜூன் 30-ம் தேதி முடிவடையும். அடுத்த 2020-2021 நிதியாண்டு, 2020, ஜூலை 1-ல் ஆரம்பித்து, 2021, மார்ச் 31-ல் முடியும்.

இதன் பிறகு 2021-22–ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி, மத்திய அரசின் நிதியாண்டோடு பொருந்திச் செல்லும்.

`இந்தப் புதிய நிதியாண்டு நடைமுறையின் மூலம் இடைக்கால டிவிடெண்டை மத்திய அரசு கேட்கும்போதெல்லாம் ரிசர்வ் வங்கி கொடுக்க வேண்டியிருக்காது’ என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு மாற்றியமைப்பதால் பட்ஜெட் திட்டத்தை வகுக்கும்போது தேவையான நிதி மதிப்பீடுகளை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்குத் தெரிவிக்கும். இதன் அடிப்படையில் சரியான பட்ஜெட்டை மத்திய அரசு உருவாக்க முயலும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism