Published:Updated:

வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும் வட்டி விகிதம்; என்ன காரணம் தெரியுமா?

வட்டி விகிதம்

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு `ஒன் இந்தியா' திட்டத்தில் பல்வேறு செயல்பாடுகள் சூடுபிடித்திருக்க, வங்கிகள் மட்டும் ஏன் இத்தனை வித்தியாசங்களில் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கின்றன.

வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும் வட்டி விகிதம்; என்ன காரணம் தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு `ஒன் இந்தியா' திட்டத்தில் பல்வேறு செயல்பாடுகள் சூடுபிடித்திருக்க, வங்கிகள் மட்டும் ஏன் இத்தனை வித்தியாசங்களில் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கின்றன.

Published:Updated:
வட்டி விகிதம்

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரத்தில் திடீரென வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.40 சதவிகிதமாக அதிகரித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, பல வங்கிகளும் வட்டியை உயர்த்த ஆரம்பித்துள்ளன. பல வங்கிகளும் கடனுக்கான MCLR விகிதத்தை உயர்த்த ஆரம்பித்துள்ளன. இதனால் கடனுக்கான மாத தவணை தொகையும் அதிகரிக்கலாம் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.

Money (Representational Image)
Money (Representational Image)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனியார் துறையை சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அதன் EBLR விகிதத்தை ஆண்டுக்கு 8.10 சதவிகிதமாக உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இந்த விகிதமானது மே 4, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. EBLR என்பது ரெப்போ விகிதம் போல வெளிப்புற அளவுகோல்களின் அடிப்படையில் வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதமாகும்.

பேங்க் ஆஃப் பரோடா வங்கியானது மே 5, 2022 முதல் அதன் சில்லறை கடன்களுக்கான BRLLR விகிதம் 6.90 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கனரா வங்கியில் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடனுக்கான விகிதம் (RLLR), மே 7, 2022 முதல் 7.30% ஆக அதிகரித்துள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வட்டி விகிதம் கடைசியாக கடந்த மே 1, 2022 அன்று அப்டேட் செய்யப்பட்டது. அதன் இ.பி.எல்.ஆர் (EBLR) விகிதம் 6.80% ஆகும். இது ஆர்பிஐ-யின் ரெப்போ விகிதம் 4% + 2.80% ஆகும்.

வங்கி
வங்கி

பேங்க் ஆஃப் இந்தியாவைப் பொறுத்தவரையில் வட்டி விகிதம் கடைசியாக மே 4, 2022 அன்று மாற்றம் செய்யப்பட்டது. இதன் ஆர்பிஎல்ஆர் (RBLR) விகிதம் 7.25% மாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வட்டி விகிதமானது ஜூன் 1, 2022-ல் இருந்து மாறவுள்ளது. இதன் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடனுக்கான விகிதம் (RLLR), 6.90 சதவிதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இதன் எம்சிஎல்ஆர் விகிதமானது மே 1 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒவர் நைட், 1 மாதம், 3 மாதம் மற்றும் 6 மாத எம்சிஎல்ஆர் விகிதம் முறையே 6.60%, 6.65%, 6.75% மற்றும் 6.95% ஆக உள்ளது. இதே இதன் 1 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 7.25% 3 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 7.55% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி மே 7-ம் தேதி முதல் அதன் எம்.சி.எல்.ஆர் விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது. இதன்படி ஓவர் நைட் எம்சிஎல்ஆர் விகிதம் 7.15% ஆகும். இதே 1 வருடத்துக்கான எம்சிஎல்ஆர் விகிதம் மற்றும் இரு வருடத்துக்கான எம்சிஎல்ஆர் விகிதம் முறையே 7.50% மற்றும் 7.60% ஆகும். இதே 3ஆண்டுகளுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.70% ஆகும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியானது அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தைக் கடந்த ஏப்ரல் 15, 2022 அன்று முதல் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. இதன்படி அதன் ஓவர் நைட், 1 மாதம், 2 மாதம், 3 மாதம், 6 மாத எம்சிஎல்ஆர் விகிதம், 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டது. இதன்படி முறையே 6.75%, 6.75%, 6.75%, 7.05% என அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம்
ரெப்போ வட்டி விகிதம்

1 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 7.10%, 2 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 7.30%, 3 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 7.40% ஆகும்.

யெஸ் வங்கியின் எம்சிஎல்ஆர் விகிதம் 10 - 15 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது மே 2, 2022-ல் இருந்து நடைமுறையில் உள்ளது. யெஸ் வங்கியின் இணையதள அறிக்கையின்படி, ஓவர் நைட், 1 மாதம் மற்றும் 3 மாதம், 6 மாத எம்சிஎல்ஆர் விகிதம் முறையே, 6.85%, 7.30% மற்றும் 7.45%, 8.25% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே ஓராண்டுக்கான விகிதம் 8.60% ஆகும்.

ஆக்ஸிஸ் வங்கியின் வட்டி விகிதம் ஏப்ரல் 18, 2022 அன்று 5 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டது. இந்த விகிதமானது ஓவர் நைட், 1 மாதம், 3 மாதம் மற்றும் 6 மாதங்களுக்கு முறையே, 7.15%, 7.15%, 7.25% மற்றும் 7.30% ஆகவும் அதிகரித்துள்ளது. இதே ஓராண்டுக்கான விகிதம் 7.35% ஆகும், 2 ஆண்டுகளுக்கான விகிதம் 7.45% ஆகும். 3 ஆண்டுகளுக்கான விகிதம் 7.50% ஆகும்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இப்படி தொடர்கிறது, இனி அடுத்து என்ன உயரப்போகிறதோ; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கே வெளிச்சம். அதெல்லாம் சரி நரேந்திர மோடியின் கனவு `ஒன் இந்தியா' திட்டத்தில் பல்வேறு செயல்பாடுகள் சூடுபிடித்திருக்க, வங்கிகள் மட்டும் ஏன் இத்தனை வித்தியாசங்களில் வட்டிகளை நிர்ணயிக்கின்றன. அதற்கான நடைமுறைகள் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும் என்று கேட்டால், ``வங்கிகளுக்கு டெபாசிட் திரட்டும் செலவை பொறுத்துதான் அவற்றில் கடனுக்கான வட்டி இருக்கும் .

எஸ்பிஐ போன்ற பொதுத்துறை வங்கிகளுக்கு சேமிப்பு கணக்குகள், சம்பள கணக்குகள், பென்ஷன் கணக்குகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும். அந்தக் கணக்கில் இருக்கும் தொகைக்கு 3% அளவுக்குதான் வட்டி கொடுக்கப்படும். அந்த வகையில் இதுபோன்ற வங்கிகளுக்கு குறைந்த செலவில் பணம் கிடைக்கும்.

மோடியின் ஒன்  இந்தியா
மோடியின் ஒன் இந்தியா

அவை குறைந்த வட்டியில் கடன் கொடுக்க முடியும். இதர தனியார் வங்கிகள் டெபாசிட் தொகைக்கு அதிக வட்டி கொடுப்பதால் கடனுக்கும் அதிக வட்டி விதிக்கும். வட்டி விகித வித்தியாசம்தான் வங்கிகளின் லாபம்" என்கின்றனர் விவரம் அறிந்த வங்கி அதிகாரிகள்.

எப்படி இருந்தால் என்ன மக்களிடம் வசூலித்து அம்பானி, அதானிகளுக்கு வாரிக் கொடுத்துவிட்டு வசூலாகவில்லை எனத் தள்ளுபடி செய்யப்போகிறார்கள். இதற்கென்ன விளக்கம் வேண்டி இருக்கிறது. என்னவோ போங்க..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism