Published:Updated:

தவறான ‘சிபில்’ ஸ்கோர்... என்ன சிக்கல்..? - நெல்லைக்காரரின் கடன் ‘ஷாக்’ அனுபவம்!

சிபில் ஸ்கோர்
பிரீமியம் ஸ்டோரி
சிபில் ஸ்கோர்

கிரெடிட் கார்டு மூலம் பெற்ற ரூ.45,74,000 திருப்பிச் செலுத்தவில்லை. எனவே, கடன் தர முடியாது என்று சொன்னார்கள்!

தவறான ‘சிபில்’ ஸ்கோர்... என்ன சிக்கல்..? - நெல்லைக்காரரின் கடன் ‘ஷாக்’ அனுபவம்!

கிரெடிட் கார்டு மூலம் பெற்ற ரூ.45,74,000 திருப்பிச் செலுத்தவில்லை. எனவே, கடன் தர முடியாது என்று சொன்னார்கள்!

Published:Updated:
சிபில் ஸ்கோர்
பிரீமியம் ஸ்டோரி
சிபில் ஸ்கோர்
வீட்டுக் கடன் பெறுவதில் சிலருக்கு சில பிரச்னை இருக்கலாம். ஆனால், திருநெல் வேலியைச் சேர்ந்த ராமச்சந்திரனுக்கு வித்தியாசமான பிரச்னை வந்தது. என்ன பிரச்னை?

நெல்லை சி.என் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரான அவர், வீடு கட்டுவதற்காகத் தனியார் வங்கியொன்றில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரது வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வுசெய்த அந்த நிறுவனம், கிரெடிட் கார்டு மூலம் பெற்ற ரூ.45,74,000 திருப்பிச் செலுத்தப்படவில்லை என்ற தகவலைச் சொல்லி அவருக்குக் கடன் கொடுக்க முடியாது என்று சொன்னது. இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தன்னுடைய வங்கிப் பரிவர்த்தனையில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டுவிட்டதா எனக் குழப்பம் அடைந்தார்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்பின்னர் நடந்தவை குறித்து நம்மிடம் பேசினார் ராமச்சந்திரன். “என்னிடம் ஏற்கெனவே சிட்டி பேங்க் கிரெடிட் கார்டு இருந்தது. அதன் மொத்தக் கடன் அளவு ரூ.1 லட்சம் மட்டுமே. ஆனால், எனக்கு ரூ.45 லட்சம் கடன் அட்டை மூலம் பாக்கி இருப்பதாகச் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. மாதம் ரூ.60,000 சம்பளம் வாங்கிய எனக்கு அந்த அளவுக்கு கிரெடிட் லிமிட் தரமாட்டார்களே என்ற குழப்பமும் இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் என் நண்பர்கள் சிலரிடம் ஆலோசனை கேட்டேன். அவர்கள் என்னை `சிபில்’ நிறுவனத்துக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி கிரெடிட் ரிப்போர்ட்டை ஆன்லைனிலேயே வாங்கிப் பார்க்கலாம் என்றார்கள். நண்பர்கள் சொன்னபடி சிபில் நிறுவனத்துக்குப் பணம் செலுத்தி கிரெடிட் ரிப்போர்ட்டை வாங்கினேன்.

தவறான ‘சிபில்’ ஸ்கோர்... என்ன சிக்கல்..? - நெல்லைக்காரரின் கடன் ‘ஷாக்’ அனுபவம்!

அதில், ஷாகா ஃபின்லீஸ் பிரைவேட் லிமிடெட் (Shaha Finlease P Ltd, Mumbai) என்ற மும்பை நிறுவனம் என்னுடைய பெயரில் கொடுத்த கிரெடிட் கார்டு வகைக்கு ரூ.45,74,621 செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிலுவைத் தொகையானது 2001-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதல் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படியொரு நிறுவனத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. மாதச் சம்பளம் பெறும் எனக்கு இவ்வளவு பெரிய தொகைக்கு கடன் வசதி கொண்ட கிரெடிட் கார்டு கொடுத்து அதில் நிலுவை இருப்பதாகவும் பதிவு செய்திருப்பதில் ஏதோ மோசடி நடந்திருக்கிறது எனப் புரிந்துகொண்டேன்.

என் நோட்டீஸுக்கு சரியான விளக்கத்தைக் கொடுக்காத சிபில் நிறுவனம், ‘எங்கள் உறுப்பினர் ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகவல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல’ என்று பதில் சொன்னது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால் என் வழக்கறிஞர்கள் மூலமாக சிபில் நிறுவனத்திடம், ‘எனக்குக் கடன் நிலுவை இருப்பதாக எந்த நிறுவனம் தகவல் கொடுத்தது, எந்த நிறுவனத்தின் அறிக்கை அடிப்படையில் எனது சிபில் ஸ்கோரை பதிவு செய்துள்ளீர்கள் என்று கேட்டு, இந்தக் கேள்விக்கு உரிய ஆதாரங்களுடன் பதில் தரும்படி நோட்டீஸ் அனுப்பினேன். என் நோட்டீஸுக்கு சரியான விளக்கத்தைக் கொடுக்காத சிபில் நிறுவனம், ‘எங்கள் உறுப்பினர் ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகவல்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல’ என்று மழுப்பலாகப் பதில் கொடுத்தது.

அதனால் மன உளைச்சல் அடைந்த நான், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பேச்சிமுத்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சௌந்தரராஜன் ஆகியோர் மூலம் சிபில் மற்றும் ஷாகா ஃபின்லீஸ் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கும் சரியான பதில் கிடைக்காததால், இரு நிறுவனங்கள் மீதும் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த வழக்கில் சிபில் நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகரன், ‘சிபில் நிறுவனம் ஒரு சேவை நிறுவனம் என்பதால், நுகர்வோர் சட்டத்தின்கீழ் நிவாரணம் கோர வழியில்லை’ என வாதிட்டார்.

ஆனால், ‘சிபில் நிறுவனத்திடமிருந்து பணம் செலுத்தியே கிரெடிட் ரிப்போர்ட் வாங்கியிருந்தார் என் கட்சிக்காரர். அதனால் அவர் நுகர்வோர்தான்’ என என் வழக்கறிஞர்கள் வாதிட்டதை நுகர்வோர் கோர்ட் ஏற்றுக்கொண்டு விசாரணை செய்தது. இந்த வழக்கில் ஷாகா ஃபின்லீஸ் நிறுவனம் கடைசி வரை விசாரணைக்கு வரவில்லை.

இந்த விசாரணையின் முடிவில், இரு நிறுவனங்களும் சேவைக் குறைப்பாடு ஏற்படுத்தியதை நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதனால் சேவைக் குறைபாட்டுக்காக இரு நிறுவனங்களும் ராமச்சந்திரனுக்கு 50,000 ரூபாயும் வழக்குச் செலவுக்கு 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. கடன் வாங்குபவர்களின் தரம் குறித்து சிபில் நிறுவனம் கொடுக்கும் அறிக்கையில் தவறு ஏற்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார் ராமச்சந்திரன்.

வங்கிகளும் நிறுவனங்களும் தனிநபர் களுக்குக் கடன் தரலாமா வேண்டாமா என்பது குறித்து பரிசீலனை செய்யும்போது சிபில் ஸ்கோரை அடிப்படையாக வைத்தே முடிவை எடுக்கின்றன. இந்த சிபில் ஸ்கோரில் இப்படிப்பட்ட தவறுகள் இருந்தால், கடன் கிடைப்பது பிரச்னைக்கு உள்ளாகிவிடுகிறது. நெல்லை ராமச்சந்திரனுக்கு ஏற்பட்டதுபோல இன்னும் பலருக்கும் தவறு ஏற்பட்டிருக்கலாம். இந்தத் தவறுகளை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. நாம் வாங்காத கடன் நம் பெயரில் இருப்பதாக சிபில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தால், அதுபற்றி சிபிலுக்கு நேரடியாகக் கடிதம் எழுதி விளக்கம் கேட்க வேண்டும். உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், வழக்கு தொடுப்பது தவிர வேறு வழியில்லை. இந்த விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியத்திலும் அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism