Published:Updated:

பிறந்தநாளில் திருவாரூர் செல்கிறார் கருணாநிதி

Vikatan Correspondent
பிறந்தநாளில் திருவாரூர் செல்கிறார் கருணாநிதி
பிறந்தநாளில் திருவாரூர் செல்கிறார் கருணாநிதி
பிறந்தநாளில் திருவாரூர் செல்கிறார் கருணாநிதி

சென்னை: பிறந்தநாளையொட்டி திருவாரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி பங்கேற்கிறார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி, ஜூன் 3ஆம் தேதி 90 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாட சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பிறந்தநாள் அன்று சென்னையில் இருப்பதையே விரும்பி வந்த கருணாநிதி, இந்தாண்டு பிறந்தநாளை திருவாரூரில் கொண்டாட அவர் முடிவு செய்துள்ளார்.

##~~##
இதற்காக, பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி அன்று திருவாரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
இந்த தகவலை திருவாரூரில் இன்று நடந்த தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் தெரிவித்தார்.