மத்தியப்பிரதேச மாநிலம் ரட்லம் மாவட்டத்தில் உள்ள ஷாஹீன் கான் மற்றும் அவரின் கணவர் சோஹைல் இருவரும் தங்களுக்குப் பிறக்கவிருக்கும் இரட்டைக் குழந்தைகளுக்காகக் காத்திருந்தனர். இந்நிலையில், மார்ச் 28-ம் தேதி அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஓர் உடல், இரண்டு தலைகள், இரண்டு இதயங்கள், மூன்று கைகளோடு ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்படி இரண்டு குழந்தைகள் ஒரே உடலாக ஒட்டிப்பிறக்கும் நிலைக்கு dicephalic parapagus என்று பெயர்.
பெரும்பாலும் இது போன்ற குழந்தைகள் இறந்தே பிறப்பார்கள். ஆனால், இந்த இரட்டைக் குழந்தைகள் உயிரோடு உள்ளதால், அருகே இந்தூரில் இருக்கும் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். குழந்தைகளின் அறுவைசிகிச்சை குறித்து மருத்துவர்கள் எந்தத் திட்டத்தையும் இதுவரை குறிப்பிடவில்லை.

மத்தியப் பிரேதேசத்தில் ஏற்கெனவே 2019-ம் ஆண்டில் 21 வயதுப்பெண், இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் ஒரு குழந்தையைப் பெற்ற சம்பவம் நடந்துள்ளது. இது போன்று குழந்தைகள் பிறப்பது அரிது, லட்சத்தில் ஒரு குழந்தை மட்டுமே இந்நிலையால் பாதிக்கப்படும் என டாக்டர் லஹோடி கூறியுள்ளார்.