Published:Updated:

பிரைவேட் ஈக்விட்டியா, கந்துவட்டியா? - சித்தார்த்தா தற்கொலை எழுப்பும் கேள்விகள்!

நாணயம் விகடன் டீம்

யார் இந்த சித்தார்த்தா...? வருமான வரித்துறை சிக்கல்... டி.கே.சிவக்குமாருடன் தொடர்பா..? ரூ.11,000 கோடிக்கு மேல் கடன்... இப்படி பல கோணங்களில் விரிவாக அலசு

சித்தார்த்தா
சித்தார்த்தா

பணக்காரர்கள் என்றாலே பகட்டான பெரிய பங்களா, படகு கார், கோடிகளில் பணம், சொகுசு வாழ்க்கை என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கழுத்தை நெறிக்கும் பிரச்னைகளும் அவர்களுக்கு உண்டு. அந்தப் பிரச்னைகள் சில அவர்களின் உயிரைப் பறித்துவிடும் என்பதற்கு ஓர் உதாரணம்தான், காபி டே நிறுவனத்தின் வி.ஜி.சித்தார்த்தாவின் தற்கொலை. பெரும் தொழிலதிபர் ஒருவர் கடன் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

பிரைவேட் ஈக்விட்டியா, கந்துவட்டியா?

வி.ஜி.சித்தார்த்தாவின் காபி டே நிறுவனத்தில் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் ஏற்கெனவே முதலீடு செய்திருந்தன. அப்படி முதலீடு செய்த நிறுவனங்களில் ஒன்று, தன்னுடைய முதலீட்டினைத் திரும்பத் தருமாறு சித்தார்த்தாவிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு விற்ற பங்கினைத் திரும்ப வாங்க (buyback) சித்தார்த்தாவிடம் போதிய பணம் இல்லை. என்றாலும், வேறு ஒருவரிடம் பெரும் பணத்தைக் கடனாக வாங்கி, அதை அந்த நிறுவனத்துக்குத் தந்திருக்கிறார். இது அவர் மனதில் மிகப் பெரிய வருத்தத்தை உருவாக்கியது.

சித்தார்த்தாவிடம் போதிய பணம் இல்லை. என்றாலும், வேறு ஒருவரிடம் பெரும் பணத்தைக் கடனாக வாங்கி, அதை அந்த நிறுவனத்துக்குத் தந்திருக்கிறார்.

பிரைவேட் ஈக்விட்டி என்பது பங்கு சார்ந்த முதலீடு. ரிஸ்க்கான முதலீடும்கூட. இதை நன்கு தெரிந்துகொண்டுதான் தொழில் முனைவர்கள் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைப் பெறுகின்றனர். நிறுவனங்களும் பணம் தந்து பங்குகளை வாங்குகின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட தொகைக்கு பங்குகளைத் திரும்ப வாங்கவேண்டும் என அந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ஏன் வற்புறுத்தியது, அந்த வற்புறுத்தலுக்கு சித்தார்த்தா எப்படி ஒப்புக்கொண்டார் என்று கேள்வி எழுப்புகிறார்கள் தொழில் துறையினர்.

"வாங்கிய தொகையை நிச்சயம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றால், நிறுவனர்கள் கடன் பத்திரங்கள்மூலமே நிதியைத் திரட்டி கொள்வார்களே, எதற்கு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள்மூலம் நிதி திரட்ட வேண்டும்" என்கிற கேள்வியை ஹீலியஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் சமீர் அரோரா எழுப்பியிருக்கிறார். தவிர, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பிரைவேட் ஈக்விட்டிமூலம் திரட்டிய நிதி எவ்வளவு என்று பொது வெளியில் அறிவிக்க வேண்டும். இல்லை எனில், இதுபோன்ற நிகழ்வுகளால் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

சித்தார்த்தா
சித்தார்த்தா

பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜூம்தார் ஷா, "பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் வட்டிக் கடைக்காரர்கள் போல நடந்துகொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லியிருக்கிறார்.

சித்தார்த்தாவின் மரணம் காரணமாக பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் மீதும் விசாரணை தொடங்கப்படும் எனத் தெரிகிறது. கே.கே.ஆர், என்.எல்.எஸ் மொரிஷியஸ், மரினாவெஸ்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் காபி டேவில் கணிசமான பங்குகளை வைத்திருக்கின்றன.

> யார் இந்த சித்தார்த்தா...? வருமான வரித்துறை சிக்கல்... டி.கே.சிவக்குமாருடன் தொடர்பா..? ரூ.11,000 கோடிக்கு மேல் கடன்... இப்படி பல கோணங்களில் விரிவாக அலசும் 'காபி நாயகன் சித்தார்த்தா... தற்கொலைக்கு என்னதான் காரணம்?' எனும் சிறப்புக் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் விரிவாக வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/