Published:Updated:

டிரம்மில் மரம் வளர்க்கலாமா, அது சரியான முறையா?நிபுணர்களின் முழுமையான வழிகாட்டுதல்கள்!

டிரம்மில் மரம் வளர்ப்பு
News
டிரம்மில் மரம் வளர்ப்பு

டிரம்மில் வளர்க்கப்படும் மரங்கள் பெரும்பாலும் பசுமை மாறா மரங்கள் எனப்படும் இலையுதிராத மரங்களாக இருப்பது நல்லது. இவை நிழல் தருவது மட்டுமன்றி, வெளியில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை அதிக அளவில் உறிஞ்சி ஆக்சிஜனை தரக்கூடியது. முக்கியமாக நம்முடைய நாட்டு மரங்களை நட வேண்டும்.

டிரம்மில் மரம் வளர்க்கலாமா, அது சரியான முறையா?நிபுணர்களின் முழுமையான வழிகாட்டுதல்கள்!

டிரம்மில் வளர்க்கப்படும் மரங்கள் பெரும்பாலும் பசுமை மாறா மரங்கள் எனப்படும் இலையுதிராத மரங்களாக இருப்பது நல்லது. இவை நிழல் தருவது மட்டுமன்றி, வெளியில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை அதிக அளவில் உறிஞ்சி ஆக்சிஜனை தரக்கூடியது. முக்கியமாக நம்முடைய நாட்டு மரங்களை நட வேண்டும்.

Published:Updated:
டிரம்மில் மரம் வளர்ப்பு
News
டிரம்மில் மரம் வளர்ப்பு

நாம் உயிர் வாழ மிகவும் அவசியமான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வது மரங்கள்தான். வாழும் சூழலை பசுமையுடனும் குளிர்ச்சியுடனும் இருக்க வேண்டுமென விரும்பும் பலரும் தன் வீட்டு சுற்றுப்புறத்தில் மரம் வளர்ப்பது, மாடித்தோட்டத்தில் மரம் வளர்ப்பது போன்ற பல்வேறு முறைகளில் மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.

டிரம் வீட்டுத்தோட்டம்
டிரம் வீட்டுத்தோட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி மரம் வளர்ப்பவர்கள் நிறைய பேர் பிளாஸ்டிக் அல்லது இரும்பு டிரம்மைத் தேர்வு செய்கிறார்கள். பிளாஸ்டிக், இரும்பு பேரல் போன்றவற்றில் மண்ணைக் கொட்டி, கன்றை நட்டு மரம் வளர்க்கிறார்கள். மரம் வளர்ப்பது நல்லது என்றாலும் அறிவியல் ரீதியாகவும், நீண்ட காலத்துக்கு இந்த முறை சரியானாகவும் இருக்குமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு. டிரம்களில் மரம் வளர்ப்பது சரியா என்பது குறித்து நிபுணர்கள் வழங்கிய விளக்கங்கள் இதோ...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிரம்மில் மரம் வளர்ப்பது குறித்து தோட்டக்கலை வல்லுநரும், மாடித்தோட்ட ஆலோசகருமான அனூப்குமாரிடம் பேசியபோது, ``டிரம்மில் மரம் வளர்ப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கடினமான விஷயம் இல்லை. பெரிய தொட்டியில் வளர்ப்பது போன்றுதான். இந்த முறையில் நாம் தரையில் நட்டு மரம் வளர்ப்பது போன்று வளர்க்க முடியாது. டிரம்மில் நடும் மரங்கள் 2 அடி அல்லது 3 அடி உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. டிரம் இரண்டடி இருக்கும் நிலையில் மரம் நான்கு அடிக்கு மேல் இருந்தால் மரம் வளரும்போதே சாய்ந்து விடுவதற்கும், சமநிலையை இழப்பதற்கும் வாய்ப்புண்டு. அதேசமயம் நீரை மரத்தின் மேல்பகுதி வரைக்கும் கொண்டு செல்வதற்குக் கடினமாக இருக்கும். எனவே, டிரம்மில் மரம் வளர்க்கும்போது நடப்படும் மரத்தின் உயரத்தைக் கவனிக்க வேண்டும்.

அனூப்குமார்
அனூப்குமார்

மரம் மண்தரையில் இருக்கும்போது அதற்கு குறிப்பிட்ட அளவு ஈரப்பதத்தை எப்போதும் தக்க வைத்துக்கொள்ளும். ஆனால், டிரம்மில் நாம் நீர் ஊற்றிக்கொண்டே இருந்தால்தான் மரங்கள் நிலைத்து நிற்கும். ஏனெனில், நீரை வேர்கள் உறிஞ்சி, மரத்தின் மேல் பகுதி வரைக்கும் எடுத்துச் சென்று இலைகள் மூலம் நீர் ஆவியாகி போய்க்கொண்டே இருக்கும். எனவே, நாம் காலையில் நீர் ஊற்றிவிட்டு மறுநாள் வரை நீர் ஊற்றாமல் இருந்தால் செடிக்கு நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு மரம் பட்டுப்போக வாய்ப்புகள் அதிகம். எனவே, மரத்துக்கு நீர் ஊற்றி கவனமாகப் பராமரிக்க வேண்டும்.

டிரம்மில் மரம் வளர்ப்பவர்கள் கன்று நடுவதற்கு முன்பே டிரம்மின் அடியில் 3 mm அளவில் நிறைய துளைகள் போட்டு, அந்தத் துளைகள் மீது கொஞ்சம் சிறு ஜெல்லி கற்கள் நிரப்பி அதன் பின் டிரம்மின் பாதி அளவுக்கு மேல் மண்ணை நிரப்பிதான் கன்றை நட வேண்டும். அப்போதுதான் டிரம் அடியில் சிறிதளவு தண்ணீர் தேங்கி வேர் பட்டுப் போகாமல் இருக்கும். கன்று நடப்பட்டு இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு செடியின் வேர்கள் எல்லாம் அதிகமாக வளர்ந்து வேர் அதிக அளவில் இருக்கும்.

டிரம்மில் மரம் வளர்ப்பு
டிரம்மில் மரம் வளர்ப்பு

செடியை பிடுங்கி மறுநடவு செய்ய வேண்டிய நிலை உருவாகும் அது கடினமான விஷயம். டிரம்மில் மரம் வளர்க்கும்போது வேர் வெளியில் வர வாய்ப்பு இல்லை. அப்படியே வேர் வெளியில் வந்தால் வேர்களை ஒருமுறை வெட்டிவிடலாம். டிரம்மில் நிழல் தரும் மரங்களைவிட, பழ மரங்களை நட்டால் நாம் எதிர்பார்ப்பதைவிட நிறைய லாபம் கிடைக்கும். டிரம்மில் எல்லாவகையான பழ மரங்களையும் வளர்க்கலாம். வாழை மரம், மாம்பழம், கொய்யா, சப்போட்டா, நாவல் பழ மரம் உள்ளிட்ட நிறைய பழ மரங்களையும் பூச்செடிகளையும் கூட நாம் டிரம்மில் வளர்க்கலாம். காரணம் இவை வேம்பு, புங்கன், ஆல் மரங்களைவிட வேர் குறைவாக விடும். அதனால் பராமரிப்புக்கும் எளிது. மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் பழங்கள் கிடைக்கும். கனி தராத மரங்களை வளர்ப்பதாக இருந்தால் கவனத்தோடு பராமரிக்க வேண்டும்" என்றார்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மரச்சாகுபடித் துறையின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர். பாலசுப்பிரமணியனிடம் பேசியபோது, ``டிரம்மில் வளர்க்கப்படும் மரங்கள் பெரும்பாலும் பசுமை மாறா மரங்கள் எனப்படும் இலையுதிராத மரங்களாக இருப்பது நல்லது. இவை நிழல் தருவது மட்டுமன்றி, காற்றிலுள்ள உள்ள கார்பன் டை ஆக்ஸைடை அதிக அளவில் உறிஞ்சி ஆக்சிஜனை தரக்கூடியது. ஆலமரம் போன்ற நீரை அதிகம் உறிஞ்சாத மரங்கள் நடுவது நல்லது. முக்கியமாக நம்முடைய நாட்டு மரங்களை நடவேண்டும். நம்முடைய தட்பவெப்பநிலைக்கு நாட்டு மரங்கள் நன்கு செழிப்பாகவும் பசுமையாகவும் வளரும்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

நகர மக்கள் நாட்டு மரங்களை குடியிருப்புப் பகுதிகள் அதிகம் உள்ள மொட்டை மாடிகளில் டிரம்மில் வளர்க்கும்போது அவை சுற்றுப்புறத்தில் உள்ள கார்பன் டை ஆஸைடை உறிஞ்சி காற்றை தூய்மைப்படுத்துகிறது. மேலும் அழிந்து போகும் நிலையில் உள்ள சில மரங்கள் செம்மரம், சந்தன மரம் போன்ற மரங்களை வளர்க்க வேண்டும். இந்த மரங்களை நல்ல வெய்யில் படும் மொட்டை மாடி போன்ற இடங்களில் வளர்ப்பது நல்லது. தொட்டியில் வளர்த்தாலும் சரி, டிரம்மில் வளர்த்தாலும் சரி... மரங்களுக்கு வெயில் இருந்தால்தான் நன்கு வளரும்.

டிரம் மற்றும் தொட்டிகளில் மரம் நடுவதற்கு முன் உயிர் உரம், மண்புழு உரம், மண் கலந்து நடுவது நல்லது. டிரம்மில் வைக்கும் போது குறுகிய அளவில் மட்டுமே அதற்குரிய சத்துகள் கிடைப்பதால், ஆரம்பத்திலேயே மண் கலவையில் நிறைய மண்புழு உரம், உயிர் உரம், வேப்பம் பிண்ணாக்கு எல்லாம் சேர்த்து விடுவது நல்லது. இந்த மாதிரி மண்ணை நன்கு தயார் செய்துவிட்டு மரங்களை நட்டால் நன்கு வளர்ந்து வரும்.

பாலசுப்ரமணியன்
பாலசுப்ரமணியன்

பெரும்பாலும் தொட்டிகளில் மரம் வளர்க்கும்போது விதையாக நடுவதை தவிர்க்க வேண்டும். சிறிய மரக்கன்றுகளாக நடுவதே நல்லது. விதையாக நடும்போது நிறைய மரவிதைகள் முளைக்காது மண்ணை நன்றாகப் பண்படுத்தி விதை நட்டு முளைக்காமல் போனால் எல்லாம் வீணாகிவிடும் நாற்றாக வாங்கி நடுவதே சிறந்த முறை" என்று ஆலோசனைகளை அடுக்கியவர் என்ன வகையான மரங்களை நடலாம் என்பதையும் சொன்னார்.

"மரங்களில் மகிழம் மரங்கள் நடலாம், ஆலமர வகைகள், அத்தி மரம், புங்க மரம், வேப்ப மரம், மருத்துவகுணமுள்ள மரங்கள் சாணிக்காய், நெல்லிக்காய் இலுப்பை மரம் கூட நடலாம். கண்டிப்பாக ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு செம்மரம், செண்பக மரம் வளர்க்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறைக்கு இது தான் செம்மரம், இதுதான் செண்பக மரம் என்று சொல்லிக்கொடுக்க முடியும். இல்லையெனில், நேரடியாக நர்சரிகளுக்கோ, வனத்துறை அலுவலகத்துக்கோ சென்று அறிய காட்டு வகை மரங்களைக் கண்டறிந்து அவற்றை வாங்கி நடலாம். அப்படி நடும்போது காட்டில் அந்த மரம் அழிந்து போனாலும் நாட்டில் அந்த மரம் நன்கு வளர்ந்திருக்கும்.

மாடித்தோட்ட வாழை
மாடித்தோட்ட வாழை

*உங்களுடைய மொட்டை மாடியின் கூரை எடையை தாங்குவதற்கு எந்தளவு உறுதியாக இருக்கிறது என்று முதலில் சோதிக்க வேண்டும்

*வீட்டின் மாடியின் நடுப்பகுதியில் வைக்காமல் தூண்கள் பகுதியிலும், மாடியின் மூலைப்பகுதிகளிலும் வைப்பது சிறந்தது. நடுப்பகுதியில் வைப்பதால் டிரம்மில் எடை அதிக இருக்கும் காரணத்தால் சுவரும் தரையும் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். சுவரில் இருந்து ஒரு அடி தள்ளி சுற்றிலும் வைப்பது நல்லது.

*டிரம் மற்றும் தொட்டிகளை நேரடியாக அப்படியே தரையில் வைக்காமல் தரையிலிருந்து சில அடிகள் மேல் இருக்கும் படி ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மீது வைப்பது நல்லது. அப்படி செய்யும்போது தரை பாதிப்படையாமல் இருக்கும். அதுமட்டுமன்றி தண்ணீர் தேங்கி தரையில் இருக்கும்படியும் டிரம் மற்றும் தொட்டிகளை வைக்கக் கூடாது

*காற்று அதிகமாக வீசும் திசையில் செடிகளை வைக்காமல், காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் செடிகளை வெளி வேண்டும் அப்போதுதான் செடி காய்ந்து போகாமல் இருக்கும். டிரம் மற்றும் தொட்டிகளில் எந்த மரம் செடிகளையும் வளர்க்கலாம்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

*மரத்தின் வேர் மதிலுக்குள் போனாலோ, தரை தளத்துக்குள் போனாலோ தான் பாதிப்பு . டிரம்மின் அடியில் கடினமான பிளாஸ்டிக் பொருள்களை வைத்துவிட்டு அதன் மேல் தொட்டி, டிரம் வைத்தால் சுவர் மற்றும் மதிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

*மரம் வளர்ந்த ஒரு வருடத்துக்குப் பிறகு கிளைகளை எல்லாம் வெட்டிவிட வேண்டும். கிளைகளைக் கழிக்காமல் அப்படியே விட்டு விட்டால் இலைகள் பூச்சி அரித்து மரம் அதிகம் பாதிப்பு அடையும். மரம் சாய்ந்து போகவும் வாய்ப்புகள் அதிகம். பழைய கிளைகளை எல்லாம் வெட்டிவிட்டு புது கிளைகளை வளர வைத்தோம் எனில் மரம் புதிய ஊட்டத்தைப் பெற்று நல்ல வளர்ச்சியை பெரும். மரத்தை நன்கு பாதுகாத்த அனுபவமும் கிடைக்கும்.