Published:Updated:

வைரலான ட்ரம்ப் கார்ட்டூன் - வேலையை இழந்த கனடா கார்ட்டூனிஸ்ட்!

ராம் பிரசாத்

அமெரிக்காவிற்கு தஞ்சமடையும் அகதிகள் எவ்வளவு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்று உலகளவில் பேசுப்பொருளானது.

கார்ட்டூன்
கார்ட்டூன் ( Michael de Adder )

இரண்டு மரணம்... ஒரு புகைப்படம் கடந்த வாரம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எல் சால்வடார் நாட்டை சேர்ந்த ஆஸ்கர் அல்பெர்டோ அவரின் மகளும் ஆற்றங்கரையில் இறந்து கரைஒதுங்கிய புகைப்படம் அது. இந்தப் புகைப்படத்தை எடுத்தது ஜூலியா லி டக் என்ற பத்திரிகையாளர். அமெரிக்காவில் குடியேற உரிமைகோர ஆஸ்கர் அல்பெர்டோ கோரியுள்ளார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வைரலான புகைப்படம்
வைரலான புகைப்படம்

எல் சால்வடாரில் இருந்து மெக்ஸிகோவுக்கு வந்தவர் சர்வதேச எல்லையில் காத்திருந்தார். அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு பாயும் கிராண்ட் ஆற்றைத் தன் மனைவி மற்றும் மகளுடன் கடந்துவிடலாம் என முடிவு செய்துள்ளார். ஆற்றில் சீறிப்பாய்ந்த தண்ணீர் இவரது முயற்சிக்குத் தடையாக இருந்தது. ஆற்று நீரில் ஆஸ்கர் அல்பெர்டோ சிக்கியதைக் கண்டதும் அவரின் மனைவி தனது முயற்சியைக் கைவிட்டுவிட்டு கரைக்குத் திரும்பிவிட்டார். ஆனால், ஆஸ்கர் அல்பெர்டோவும் அவரின் மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தப் புகைப்படம் வைரலானது அமெரிக்காவுக்குத் தஞ்சமடையும் அகதிகள் எவ்வளவு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்று உலகளவில் பேசுபொருளானது. இதுதொடர்பாகக் கனடாவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் michael de addar ட்ரம்பை சாடி கார்ட்டூன் வரைந்திருந்தார். கோல்ப் மைதானத்தில் இருக்கும் ட்ரம்ப்  ஆற்றில் இறந்த ஆஸ்கர் அல்பெர்டோ மற்றும் அவரின் மகளின் சடலத்தைப் பார்த்து, “நான் விளையாடுவதைப் பார்த்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா?” என்று கேட்பதுபோல் வரைந்திருந்தார். இந்த கார்ட்டூன் வைரலானது. அவர் பணிபுரிந்த நிறுவனம் அவரைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

கார்ட்டூனிஸ்ட்
கார்ட்டூனிஸ்ட்

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள Michael de addar `திடீரென வேலையை இழப்பது அவ்வளவு முக்கியமானதாகத் தெரியவில்லை. நான் கார்ட்டூன்களில் சண்டையில் இறங்கினேன். நான் என் வேலையைச் செய்கிறேன். என் கார்ட்டூனுக்காகப் போராடுகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.