Published:Updated:

10th, +2 படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி வாய்ப்பு! விண்ணப்பிக்க தயாரா?

இந்திய அரசின் பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission), இந்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய
இந்திய ( pixabay )

ந்திய அரசின் பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) இந்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் காலியாக இருக்கும் கீழ்நிலைப் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk) / இளநிலைச் செயலக உதவியாளர் (Junior Secretarial Assistant), தபால் உதவியாளர் (Postal Assistant) / பிரித்தல் உதவியாளர் (Sorting Assistant) மற்றும் தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) போன்ற பணிகளை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த மேல்நிலை (10, +2) அளவிலான தேர்வு (Combined Higher Secondary (10, +2) Level Examination) அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

பணிகள்:

இந்தத் தேர்வின் வழியாகக் கீழ்க்காணும் நான்கு சம்பள நிலைகளிலான (Pay Levels) பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

இந்திய
இந்திய
pixabay

1. கீழ்நிலைப் பிரிவு எழுத்தர் / இளநிலைச் செயலக உதவியாளர்

சம்பள நிலை - 2 (ரூபாய் 19,900/- - 63,200/-)

2. தபால் உதவியாளர் / பிரித்தல் உதவியாளர் சம்பள நிலை - 4 (ரூபாய் 25,500/- - 81,100/-)

3. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) சம்பள நிலை - 4 (ரூபாய் 25,500/- - 81,100/-)

4. தரவு உள்ளீட்டாளர் – தரம் 'அ' (Grade A) சம்பள நிலை - 4 (ரூபாய் 25,500/- - 81,100/-)

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு 1-1-2020 அன்று 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2-1-1993 முதல் 1-1-2002 வரையிலான காலத்துக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். ஓபிசி – 3, எஸ்சி, எஸ்டி – 5, மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் என்று வயதுத் தளர்வு உண்டு. முன்னாள் படை வீரருக்கு உரிய வயதுத் தளர்வு அளிக்கப்படும். பிற வயதுத் தளர்வுகள் குறித்து அறிய, தகவல் குறிப்பேட்டைப் பார்க்கலாம்.

கல்வித் தகுதி:

1. கீழ்நிலைப் பிரிவு எழுத்தர் / இளநிலைச் செயலக உதவியாளர், தபால் உதவியாளர் / பிரித்தல் உதவியாளர் (Sorting Assistant) மற்றும் தரவு உள்ளீட்டாளர் பணிகளுக்கு 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையாண தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. தரவு உள்ளீட்டாளர் – தரம் ‘அ’ பணிக்கு அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களுடன் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையாண தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் https://ssc.nic.in/ எனும் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைந்த மேல்நிலை (10, +2) அளவிலான தேர்வு தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து முழுமையாகப் படித்து, தேவையானதை தயார்செய்து இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 100/- செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10-1-2020.

விண்ணப்பக் கட்டணம் இணைய வழியில் செலுத்தவும், வங்கியில் செலுத்துவதற்கான சலானை உருவாக்கவும் கடைசி நாள்: 12-1-2020. வங்கியில் பணம் செலுத்தக் கடைசி நாள்: 14-1-2020.

job
job
pixabay

தேர்வு முறை:

இந்தத் தேர்வுமுறையானது

1. அடுக்கு - I கணினி அடிப்படையிலான தேர்வு (Tier-I: Computer Based Examination)

2. அடுக்கு - II விளக்கத்தாள் தேர்வு (Tier-II: Descriptive paper)

3. அடுக்கு - III திறன் தேர்வு / தட்டச்சுத் தேர்வு (Tier-III: Skill / Typing Test)

என, தேர்வு மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று தேர்வுகளின் வழியாகத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கான பாடங்கள், கேட்கப்படும் கேள்விகள், அவற்றுக்கான மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் போன்றவற்றிற்குத் தகவல் குறிப்பேட்டைப் படிக்கலாம்.

தேர்வு மையங்கள்:

இந்தத் தேர்வுக்கு இந்தியா முழுவதும் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 128 நகரங்களில் தேர்வுகள் நடைபெறும். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் தெற்கு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் 21 நகரங்களில் தேர்வு மையங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் என்று 7 நகரங்களும், புதுச்சேரியும் இடம்பெற்றுள்ளன.

அடுக்கு - I கணினி அடிப்படையிலான தேர்வு, 16-3-2020 முதல் 27 - 3 -2020 வரையிலான நாள்களில் நடைபெறும். அடுக்கு - II விளக்கத்தாள் தேர்வு தேர்வு, 28-6-2020 அன்று நடைபெறும். விண்ணப்பதாரர்கள் நுழைவுச்சீட்டில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட மையத்தில் தேர்வினை எழுத வேண்டும்.

job
job
pixabay

கூடுதல் தகவல்கள்:

இந்தத் தேர்வு குறித்த மேலும் தகவல்களை அறிய, பணியாளர்கள் தேர்வாணையத்தின் https://ssc.nic.in/ இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு (Combined Higher Secondary (10+2) Level Examination) தகவல் குறிப்பேட்டைப் பார்க்கலாம். அல்லது சென்னை, கல்லூரி சாலை, டிபிஐ வளாகத்திலிருக்கும் தெற்கு மண்டலத்துக்கான பணியாளர்கள் தேர்வாணைய அலுவலகத்துக்குச் சென்று விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

புகழ்பெற்ற NIFT நிறுவனத்தில் பேஷன் டிசைனிங் படிக்க விருப்பமா... நுழைவுத்தேர்வுக்கு அப்ளை பண்ணுங்க!