Published:Updated:

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் 1,141 பேருக்கு வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு மருத்துவமனைகளில் (Tamil Nadu Animal Husbandry Service) காலியாக இருக்கும் 1,141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.

Veterinary Doctor
Veterinary Doctor ( Image by André Santana from Pixabay )

தமிழ்நாடு அரசின் கால்நடைப் பராமரிப்பு மருத்துவமனைகளில் (Tamil Nadu Animal Husbandry Service) காலியாக இருக்கும் 1,141 கால்நடை உதவி மருத்துவர் (Veterinary Assistant Surgeon) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.

காலியிடங்கள்:

கால்நடை உதவி மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள் 1,141 என்று மொத்தமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பணியிடங்களில் இட ஒதுக்கீட்டு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கால்நடை
கால்நடை
pixabay

கல்வித் தகுதி:

கால்நடை மருத்துவ அறிவியலில் இளநிலைப் பட்டம் (B.V.Sc., / B.V.Sc & A.H) பெற்றிருக்க வேண்டும். மேல்நிலைக் கல்வியில் அல்லது அதற்கு இணையான படிப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படித்துத் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். அத்துடன், இந்தியக் கால்நடைக் குழுச் சட்டம் 1984-ன் கீழ் கால்நடை மருத்துவராகப் பதிவுசெய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினருக்கு 30 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி (அ), எஸ்டி, எம்பிசி/டிஎன்சி, பிசி, பிசி(எம்) மற்றும் ஆதரவற்ற கணவனை இழந்த பெண்கள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் http://www.tnpsc.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம்.

ஒருமுறை பதிவுக் கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். ஏற்கெனவே ஒருமுறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள், ஐந்து ஆண்டுகளுக்குப் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தேர்வுக் கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும்.

கால்நடை
கால்நடை
pixabay

எஸ்சி., எஸ்சி (அ) எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்த ஆதரவற்ற கணவனை இழந்த பெண்கள் ஆகியோருக்குத் தேர்வுக் கட்டணம் முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எம்பிசி/டிஎன்சி, பிசி, பிசி(எம்) பிரிவினர் மூன்று முறையும், முன்னாள் படை வீரர்களுக்கு இரண்டு முறையும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 17-12-2019

வங்கி வழியாக தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 19-12-2019

தேர்வு முறை:

இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல் வழியாகத் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வுகளில் தாள் 1 தேர்வு 23-2-2020 அன்று காலை 10.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், தாள் 2 தேர்வு, அதே நாளில் பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறும்.

தாள் – 1 தேர்வு, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் (Animal Husbandry and Veterinary Science) பாடத்திலான தேர்வாக 300 மதிப்பெண்களுக்கும், தாள் – 2 தேர்வு, பட்டப்படிப்பு நிலையிலான பொதுக்கல்வி பாடத்திலான தேர்வாக 200 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். பிறகு நேர்காணல் மற்றும் சான்றிதழ்களுக்கு 70 மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1234 செவிலியர் பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க! #EmploymentNews

மொத்தம் 570 மதிப்பெண்களில், பொதுப்பிரிவினருக்கு குறைந்தது 228 மதிப்பெண்கள். எஸ்சி, எஸ்சி (அ), எஸ்டி, எம்பிசி / டிஎன்சி, பிசி, பிசி (எம்) பிரிவினர் 171 மதிப்பெண்கள் தேர்ச்சிக்கான மதிப்பெண்களாகக் கொள்ளப்படும்.

விண்ணப்பித்தவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குத் தமிழ்நாடு இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பணியிடங்கள் வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வுசெய்யப் பெற்றவர்களுக்கு மாதம் ரூபாய் 55,500 – 1,75,700 எனும் ஊதிய விகிதத்தில் (Level 21) சம்பளம் வழங்கப்படும்.

அரசுக் கல்லூரியில் பேராசிரியராகணுமா... 2,331 பணியிடங்கள் காலி... உடனே அப்ளை பண்ணுங்க!

கூடுதல் தகவல்கள்:

இந்தத் தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் http://www.tnpsc.gov.in/ என்கிற இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் 18004251002 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நேரத்தில் தொடர்புகொண்டு பெறலாம்.