Published:Updated:

அரசு வங்கிகளில் 12,075 எழுத்தர் பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியா முழுக்க மொத்தம் 12,075 எழுத்தர் பணியிடங்கள் காலியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

bank jobs
bank jobs

இந்திய அரசின் பொதுவுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக இருக்கும் 12,000-க்கும் மேற்பட்ட எழுத்தர் பணியிடங்களுக்கான பொது ஆள்சேர்ப்புத் தேர்வு (Common Recruitment) அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection) வெளியிட்டிருக்கிறது.

பங்கேற்கும் வங்கிகள்

வங்கிகளில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான பொது அமைப்பாக ‘வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்’ செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் இணைந்திருக்கும் வங்கிகள்...

bank job
bank job

அலகாபாத் வங்கி

ஆந்திர வங்கி பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் இந்தியா

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா

கனரா வங்கி

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

கார்ப்பரேஷன் வங்கி

இந்தியன் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்

பஞ்சாப் நேஷனல் பேங்க்

பஞ்சாப் & சிந்த் பேங்க்

சிண்டிகேட் வங்கி

யூகோ வங்கி

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா

(மொத்தம் 17 வங்கிகள்).

காலியிடங்கள்

மேற்காணும் வங்கிகளில் இந்தியா முழுக்க மொத்தம் 12,075 எழுத்தர் பணியிடங்கள் காலியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணியிடங்கள் மாநிலம் / ஒன்றியப் பகுதிகள் (State / UT) வாரியாக, வங்கி ஒவ்வொன்றிலும் இருக்கும் காலியிடங்களை இட ஒதுக்கீடுவாரியாகப் பிரித்துப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில்...

bank jobs
bank jobs

பொதுப் பிரிவினர் – 625

எஸ்சி – 259

எஸ்டி – 14

ஓபிசி – 349

ஈடபிள்யூஎஸ் – 132

(மொத்தம் 1,379 காலியிடங்கள்)

புதுச்சேரி மாநிலத்தில்...

பொதுப் பிரிவினர் – 27

எஸ்சி – 4

ஓபிசி – 10

ஈடபிள்யூஎஸ் – 3

(மொத்தம் 44 காலியிடங்கள்.)

கல்வித் தகுதி

ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் அல்லது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அதற்கு இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினியை இயக்கிப் பணி செய்திடும் திறனையும் சேர்த்துப் பெற்றிருக்க வேண்டும். மாநில/ஒன்றியப் பகுதிகளில் பயன்படுத்தும் ஆட்சிமொழியில் வல்லமையுடையவராக இருக்க வேண்டும்.

bank jobs
bank jobs

வயது வரம்பு 1-9-2019 அன்று 20 வயதுக்குக் குறைவில்லாமலும், 28 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். அதாவது, 2-9-1991 முதல் 1-9-1999 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி – 5 ஆண்டுகள், ஓபிசி – 3 ஆண்டுகள், விதவை, விவாகரத்துப் பெற்றவர் மற்றும் மறுமணம் செய்துகொள்ளாமல் சட்டப்படி கணவரைவிட்டுப் பிரிந்து வாழ்பவர்கள் – 9 ஆண்டுகள், ஜம்மு & காஷ்மீரில் 1-1-1980 முதல் 31-12-1989வரை சாதாரணமாகக் குடியிருந்து வந்தவர்கள் – 5 ஆண்டுகள், 1984ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் – 5 ஆண்டுகள் என வயதுத் தளர்வு அளிக்கப்பட்டிருக்கின்றன.

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.ibps.in/ எனும் இணையதளத்தில் https://www.ibps.in/wp-content/uploads/DetailedAdvtCRP_Clerks_IX.pdf எனும் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து முழுமையாகப் படிக்கவும். விண்ணப்பம் செய்வதற்குத் தேவையானவற்றைத் தயார் செய்துகொண்டு, https://ibpsonline.ibps.in/crpclk9sep19/ எனும் பக்கத்தில் பதிவு செய்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (PWBD) மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (EXSM) ரூ.,100/- மற்றவர்கள் ரூ.600/- என்று விண்ணப்பக் கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் 9-10-2019.

bank exam
bank exam

தேர்வு முறை

முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) மற்றும் முதன்மைத் தேர்வு (Main Examination) என்று இருவகையான இணையவழித் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ஆங்கில மொழி (English Language), எண்திறன் (Numerical Ability) மற்றும் பகுத்தறிவுத் திறன் (Reasoning Ability) ஆகிய மூன்று வகையான பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கும், முதன்மைத் தேர்வில் பொது / நிதி விழிப்புணர்வு (General / Financial Awareness), பொது ஆங்கிலம் (General English) பகுத்தறிவுத்திறன் மற்றும் கணினித்திறன் (Reasoning Ability & Computer Aptitude) அளவுத்திறன் (Quantitative Aptitude) எனும் நான்கு பிரிவுகளில் மொத்தம் 200 மதிப்பெண்ணுக்கும் தேர்வெழுத வேண்டும். இரு தேர்வுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்குப் பணியிடம் வழங்கப்படும்.

தேர்வு மையங்கள்

முதல்நிலைத் தேர்வுக்குத் தமிழ்நாட்டில்

சென்னை

கோயம்புத்தூர்

ஈரோடு

மதுரை

நாகர்கோவில்

சேலம்

தஞ்சாவூர்

திருச்சிராப்பள்ளி

திருநெல்வேலி

வேலூர்

விருதுநகர்

(மொத்தம் 11 இடங்கள்)

முதன்மைத் தேர்வுக்கு

சென்னை

மதுரை

திருநெல்வேலி

(மொத்தம் 3 தேர்வு மையங்கள்)

புதுச்சேரியில் இரு தேர்வுகளையும் எழுத முடியும்.

bank job
bank job

தேர்வு நாள்முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை நவம்பர் மாதத்தில் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 7-12-2019, 8-12-2019, 14-12-2019 மற்றும் 21-12-2019 ஆகிய நாள்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் இறுதி வாரத்திலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ வெளியிடப்படும். அதன் பிறகு, முதல் நிலைத் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் ஜனவரி இரண்டாம் வாரத்தில் முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 19-1-2020 அன்று முதன்மைத் தேர்வு நடைபெறும். அதன் பிறகு, முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் வங்கிகளில் பணியாற்றுவதற்கான தற்காலிகப் பணியிட ஆணை வழங்கப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு... https://www.ibps.in/ எனும் இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது இந்த நிறுவனத்தின் கட்டணமில்லாத தொலைபேசி எண்களான 1800222366, 18001034566 ஆகியவற்றில் வங்கி விடுமுறை நாள்கள் தவிர்த்து, அலுவலக வேலை நேரத்தில் தொடர்புகொண்டு பெறலாம்.