Published:Updated:

ஐ.டி.ஐ. கவுன்சலிங் நாளை தொடக்கம்..!

ஐ.டி.ஐ. கவுன்சலிங் நாளை தொடக்கம்..!

ஐ.டி.ஐ. கவுன்சலிங் நாளை தொடக்கம்..!

ஐ.டி.ஐ. கவுன்சலிங் நாளை தொடக்கம்..!

ஐ.டி.ஐ. கவுன்சலிங் நாளை தொடக்கம்..!

Published:Updated:
ஐ.டி.ஐ. கவுன்சலிங் நாளை தொடக்கம்..!

தமிழக அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ) நிலையங்களில் 2018-ம் ஆண்டுக்கான  மாணவர்கள் சேர்க்கை மாவட்ட கலந்தாய்வு மூலம் 04.07.2018 முதல் நடைபெறவுள்ளது. 04.07.2018 அன்று சிறப்பு இனங்களில் விண்ணப்பித்தவர்களுக்கும், அதைத் தொடர்ந்து 19.07.2018 வரை இதரப் பிரிவுகளில் விண்ணப்பித்தவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் ஆகிய விவரங்கள்விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின்போது அளித்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் கலந்தாய்வுக்காக அழைப்பு ஆணை (கலந்தாய்வு அழைப்புக் கடிதம்) அனுப்பப்பட மாட்டாது. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரரின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து விண்ணப்பதாரருக்கான கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் நேரம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம். அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் மாவட்ட கலந்தாய்வு குறித்த விவரங்கள் இந்த இணையதளத்தில் உள்ளது. மேலும், விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொடர்புகொள்ளலாம்.