Published:Updated:

`விமானப்படையில் வேலை!’ - இளைஞர்களே ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...

`விமானப்படையில் வேலை!’ - இளைஞர்களே ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...
`விமானப்படையில் வேலை!’ - இளைஞர்களே ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...

விமானப் படைக்கான ஆள் சேர்ப்பு முகாம் டிசம்பர் 9-ம் தேதி நெல்லையில் தொடங்குகிறது. இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைந்தளவில் பணியாற்றுகிறார்கள். தமிழக இளைஞர்களை ஊக்குவிக்க இந்திய விமானப் படையில் ஏர்மேன் குரூப்-Y Non Technical பணியிடத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நெல்லையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் டிசம்பர் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு டிசம்பர் 9 முதல் 11-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.

அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், நீலகிரி, தேனி, நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு டிசம்பர் 12 முதல் 14-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.
இத்தேர்வுகளுக்கான கல்வித்தகுதி ப்ளஸ் டூ வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண்கள் குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1998-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதியில் இருந்து 2002 ஜூன் 26-ம் தேதிக்குள் பிறந்த திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்.
தேர்வில் கலந்துகொள்ள வரும் இளைஞர்கள், ப்ளஸ் டூ மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள் எடுத்து வர வேண்டும்.

அசல் சான்றிதழ்களை பள்ளி, கல்லூரிகளில் சமர்ப்பித்திருந்தால் தலைமை ஆசிரியர்/முதல்வரிடம், ‘அசல் சான்றிதழ்கள் பள்ளி, கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்ற உறுதி சான்றிதழுடன் சுய சான்றொப்பம் இடம்பெற்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கு பென்சில், எரேஸர், ஷார்ப்னர், கம் டியூப், ஸ்டாப்ளர், கறுப்பு அல்லது நீல நிற பேனா, ஏழு பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் (நவம்பர் முன்னதாக எடுத்திருக்கக் கூடாது) எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களை www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். வேலூர் மாவட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெற கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.