Published:Updated:

நபார்டு வங்கியில் 150 உதவி மேலாளர் பணியிடங்கள்... முழு விவரங்கள்!

Jobs / Representational Image
Jobs / Representational Image

NABARD வங்கியில் காலியாக இருக்கும் 150 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்தியக் கிராமங்களில் கடன் வழங்கலை உயர்த்தி விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் 1982-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development -NABARD). இந்த வங்கியில் காலியாக இருக்கும் 150 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

காலியிடங்கள்:

ஊரக வளர்ச்சி வங்கிச் சேவைப் பணிகளுக்கான (Rural Development Banking Service) உதவி மேலாளர் பணியிடங்களில் பொது,

பொது வேளாண்மை,

வேளாண்மைப் பொறியியல்,

உணவு மற்றும் பால் பதப்படுத்தல்,

நில வளர்ச்சி – மண் அறிவியல்,

சுற்றுச்சூழல் அறிவியல் / பொறியியல், வேளாண் சந்தை / வேளாண் வணிக மேலாண்மை,

நிலவியல் தகவல்கள், வேளாண் பொருளியல் / பொருளியல், தகவல் தொழில்நுட்பம்,

பட்டயக் கணக்காளர்கள்,

நிறுவனச் செயலர்,

நிதி,

மனிதவள மேலாண்மை,

புள்ளியியல் எனும் 15 பிரிவுகளில்...

பொது – 51,

எஸ்சி – 19,

எஸ்டி – 13,

ஓபிசி – 40,

ஈடபிள்யூஎஸ் – 16 என்று மொத்தம் 139 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

இவை தவிர்த்து, அரசு மொழிகள் சேவைப் பிரிவில் 8 உதவி மேலாளர்கள், சட்டச் சேவைகள் (Legal Service) பிரிவில் 3 உதவி மேலாளர்கள் என 11 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

Representational Image
Representational Image
pixabay

கல்வித் தகுதி:

ஒவ்வொன்றுக்கும் தேவையான கல்வித் தகுதி குறித்த தகவல்கள் இந்தப் பணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள தகவல் குறிப்பேட்டில் தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1-1-2020 அன்று 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2-1-1990 முதல் 1-1-1999 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி – 5, ஓபிசி – 3, மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் என்று வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் www.nabard.org எனும் இணையதளத்தில் பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம். பொது, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 650/-, தகவல் கட்டணம் ரூபாய் 150/- என்று மொத்தம் ரூபாய் 800/- செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் தகவல் கட்டணமாக ரூபாய் 150/- மட்டும் செலுத்தினால் போதும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 3-2-2020.

தேர்வுமுறை:

விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) மற்றும் முதன்மைத் தேர்வு (Main Examination) என்று இருவகையான இணைய வழித் தேர்வுகளும், நேர்காணலும் நடத்தப் பெற்று தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யப்படுவர். இந்தத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் குறித்த தகவல்கள் தகவல் குறிப்பேட்டில் தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பவர்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு சென்னை உட்பட இந்தியா முழுவதும் 21 பயிற்சி மையங்களில் தேர்வுக்கு முந்தைய பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போதே ஒரு மையத்தைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

Job / Representational Image
Job / Representational Image

தேர்வு மையங்கள்:

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர் என்று 9 இடங்கள், புதுச்சேரியில் ஒரு இடம் உட்பட இந்தியா முழுவதும் 158 நகரங்களில் முதல்நிலைத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வுக்கு சென்னை உட்பட 21 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு நாள்:

முதல்நிலைத் தேர்வு 25-2-2020 அன்று நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மையத்தில் தேர்வை எழுதலாம். முதல்நிலைத் தேர்வில் தேர்வுபெற்றவர்கள், அடுத்து நடத்தும் முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ளலாம். அதிலும் தேர்ச்சியடைந்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். பிறகு, உதவி மேலாளராகப் பணியமர்த்தப்படுவர்.

இந்தப் பணியிடத்துக்கு ரூபாய் 28150-1550 (4)-34350-1750 (7)-46600-EB-1750 (4)-53600-2000 (1)-55600 எனும் சம்பள ஏற்ற முறையில் (Scale of Pay) சம்பளம் வழங்கப்படும்.

பாரத ஸ்டேட் வங்கியில் 8,000 எழுத்தர் நிலைப் பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

கூடுதல் தகவல்கள்:

தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்குத் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் www.nabard.org எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பப் படிவம் நிரப்புவதில் சிக்கல், பணம் செலுத்துவதில் ஏற்படும் இடையூறுகள், அழைப்புக் கடிதம் கிடைக்காமலிருத்தல் போன்ற தொடர்புகளுக்கு http://cgrs.ibps.in/ எனும் இணையதளத்துக்குச் செல்லலாம்.

அடுத்த கட்டுரைக்கு