Published:Updated:

அச்சுறுத்தும் ஆட்டோமேஷன்... வேலையைத் தக்கவைக்கும் வழிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அச்சுறுத்தும் ஆட்டோமேஷன்... வேலையைத் தக்கவைக்கும் வழிகள்!
அச்சுறுத்தும் ஆட்டோமேஷன்... வேலையைத் தக்கவைக்கும் வழிகள்!

அச்சுறுத்தும் ஆட்டோமேஷன்... வேலையைத் தக்கவைக்கும் வழிகள்!

பிரீமியம் ஸ்டோரி

.டி துறையில் ஆட்டோமேஷன் அடியெடுத்து வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் பணியாளர்களின் வேலைவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் ஒரு வேலை சீக்கிரமாக முடிய வேண்டும் என்றால், அந்த வேலையை நான்கு பேருக்கு பிரித்துக் கொடுத்தால்தான் சீக்கிரமாக முடியும். ஆனால், நான்கு விதமான வேலைகளை ஒரே ஆள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய சூழ்நிலை. அப்போதுதான்  அவரால் அலுவலகத்தின் ஆட்டோமேஷன் நடவடிக்கை களிலிருந்து தப்பிக்க முடியும். இதற்கான வழிமுறைகள் என்ன என்பதை மனிதவள மேலாளரான ஸ்ரீ.லக்ஷ்மியிடம் கேட்டோம்.

“ஒரு நிறுவனம் ஆள்குறைப்பு செய்யும்போது நீங்கள் கடைசி ஆளாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனம் பதவி உயர்வுக்குப் பணியாளர்களைப் பரிசீலிக்கும்போது நீங்கள் முதல் ஆளாக இருக்க வேண்டும் என்பார்கள். இதற்கு நம்மிடம்  பன்முகத் திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம். இதற்கு முதற்கட்டமாக, ஏற்கெனவே செய்துவரும் வேலையின் நுணுக்கங்கள் அனைத்தையும் நாம் கற்றுக்கொண்டுவிட்டோமா என்பதை ஒருமுறைக்கு இரண்டுமுறை ஆராய்ந்து பார்த்துவிடுவது நல்லது. ‘நமக்குத் தெரியாதது இந்த உலகத்தில் என்ன இருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டு, புதிதாக எதுவுமே கற்றுக் கொள்ளாமல் இருந்துவிடக்கூடாது.

அச்சுறுத்தும் ஆட்டோமேஷன்... வேலையைத் தக்கவைக்கும் வழிகள்!

வேலை விஷயத்தில் ‘இது நமக்குத் தேவையில்லை’ என எந்த விஷயத்தையும் ஒதுக்கி வைக்கக்கூடாது. அடுத்தடுத்து புதிதாக எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.புதிதாக வரும் விஷயங்களை உடனுக்குடன் அப்டேட் செய்து வைத்துக்கொள்வது ஐ.டி துறையில் மிகவும் முக்கியம். லேட்டஸ்ட் டெக்னாலஜி பற்றித் தெரிந்து வைத்திருக்கும் போது, நீங்கள் செய்யும் வேலை மதிக்கப்படுவதுமாதிரி, நீங்களும் மதிக்கப்படுவீர்கள்.
 
ஆட்டோமேஷனும், ஒப்பந்த தொழில்முறையும்

  ஒப்பந்தத் தொழில்முறை என்பது, ஒரு வேலையைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிப்பதற்காக, சில நபர் களையோ அல்லது ஒரு நபரையோ அந்த வேலையைச் செய்து முடிப்பதற்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்துவதாகும். பொதுவாக , பல வெளிநாடுகளில் இந்த முறையே பெரும்பாலான தொழில்களில் கடைப்பிடிக்க படுக்கிறது. அதனால் வெளிநாடு களில் வாழ்பவர்களுக்கு இந்த முறை பழக்கமான ஒன்றே. இந்த முறையில் அங்கு வேலை செய்பவர் களுக்குச் சம்பளம் அதிகம் கொடுக்கப்படும். ஏனெனில், அவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் வேலையை முடிக்கக்கூடிய அதீத திறமைசாலிகளாக இருப்பார்கள். 

இங்கு ஐ.டி துறைகளில் மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆள்களை பணியில் அமர்த்துவது வழக்கமானதுதான். ஆனால், ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்வதைப் பெரும்பாலானவர்கள் தவிர்க்கிறார் கள். சம்பளம் குறைவாகக் கிடைத்தாலும் பரவாயில்லை, நிரந்தர வேலை இருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.

அச்சுறுத்தும் ஆட்டோமேஷன்... வேலையைத் தக்கவைக்கும் வழிகள்!

இன்றைய சூழ்நிலையில் எந்த நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், அந்த வேலை நிரந்தரம் என்று யாரும் நினைக்க முடியாது.  நிறுவனங்கள் ஆட்டோமேஷன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அதனால் உண்டாகும் விளைவு களை ஒப்பந்தப் பணியில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், நிரந்தரப் பணியில் இருப்பவர் களும்தான் சந்திக்க நேரிடும். அதனால், ஆட்டோமேஷன் நடவடிக்கைகளால் வேலையை இழப்பதைவிட, ஒப்பந்த முறையில் பணியில் அமர்வது நல்லதுதான்.

இன்றைய நிலையில், மூன்று விதமான ஒப்பந்தத் தொழில் முறைகள் புழக்கத்தில் உண்டு. குறுகியகால ஒப்பந்தமுறை (Short term Contract / Pure Contract), நீண்டகால ஒப்பந்தமுறை (Long Term  Contract / Extendable Contract), சில காலகட்டத்திற்குப் பின், நிரந்தரப் பணிமுறை (Contract to hire) என மூன்று முறைகள் உள்ளன.

குறுகிய கால ஒப்பந்தமுறை பொதுவாக 3 முதல் 6 மாதம் வரையிலானது. நீண்ட கால ஒப்பந்தமுறை (Long Term Contract / Extendable Contract) பொதுவாக 6 முதல் 24 மாதம் வரையிலானது. ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது 12 மாதத்துக்கு ஒருமுறையோ இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும். நடுவில் அந்த புராஜெக்ட்டில் தொய்வோ அல்லது எதிர்பார்த்த லாபமோ வராமல்போனால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உடனே நீக்கப்படுவார்கள். சில ஆண்டுகள் ஒப்பந்தத்திற்குப்பின் நிரந்தரப் பணிமுறை (Contract to hire), பொதுவாக 6 முதல் 12 மாதங்கள் வரை நீங்கள் ஒப்பந்தத்தின்கீழ் இருப்பீர்கள். அதற்குப்பின்  நிரந்தரப் பணியில் சேர்க்கப்படு வீர்கள்.

கற்றுக்கொண்டே இருங்கள்

எதையுமே தேவைப்படும்போது கற்றுக்கொள்ளலாம் என அலட்சியமாக இருக்கக்கூடாது. ஏனெனில், எப்போதுமே ஒரு நிறுவனம், உங்களால் அந்த நிறுவனத்துக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றுதான் பார்க்கும். இவரால் இரண்டு வேலையை ஒருசேரப் பார்க்க முடியுமா, கூடுதலாக என்னென்ன விஷயங்கள் தெரியும் என்பதைத்தான் பார்க்கும்.

இப்போதுள்ள நிறுவனங்கள் பலவும் பல சிக்கலில் உள்ளன. எனவே, ஒருவரின் சம்பளத்தில் இரண்டுபேர் வேலையைச் செய்பவர்களைத்தான் வேலைக்கு வைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது. உங்களுக்குக் கூடுதலாகத் தெரியும் விஷயங்கள் அனைத்தையும் நிர்வாகத்துக்குத் தெரிவிப்பது நல்லது. ஒருவர், எனக்கு இதெல்லாம் தெரியும், அதெல்லாம் தெரியும் என்று நிர்வாகத்திடம் நேரடியாக எடுத்துச் சொல்ல முடியாது. எனவே, உங்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் கூடுதலான வேலைகளையும் சேர்த்து செய்தால் நிர்வாகத்துக்கு உங்கள் திறமை தெரியும்.

அச்சுறுத்தும் ஆட்டோமேஷன்... வேலையைத் தக்கவைக்கும் வழிகள்!

நீங்கள் வேலை பார்க்கும் துறைக்குத் தேவை யான படிப்புகள் ஏதாவது இருந்தால், அந்தப் படிப்பை பகுதி நேரத்திலாவது படித்து வைப்பது நல்லது. தொழில்நுட்பங்களை எப்போதுமே விரல்நுனியில் வைத்துக்கொள்வது முக்கியம்.

பொதுவாக, தொழில்நுட்பங்களில் கைதேர்ந்தவர்களாக இருப்பவர்கள் தங்கள் வேலையை விரைவாகச் செய்து முடித்து விடுவார்கள் என்பது எல்லோரும் நம்பும் ஒரு விஷயம். அது தெரியாதவர்களை நிறுவனங்கள் மதிப்பதில்லை. எனவே, நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்பத்தை விரைவாகக் கற்றுக்கொள்வது முக்கியம்.

இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்

ஆள்குறைப்பு என்று வரும்போது திறமை யற்றவர்களையும், அதிக சம்பளம் வாங்குபவர் களையும்தான் முதலில் வேலையை விட்டு வெளியேற்றுவார்கள். எனவே, ஆள்குறைப்பு சமயங்களில் குறைவான சம்பளத்தில் வேலை பார்க்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அத்துடன், நிறுவனத்தின் வேறு கிளையில் அல்லது வேறு பிரிவுகளில் வேலை பார்க்கவும் உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.பணியிடத்தில் அனைவருடனும் தோழமையுடன் இருக்கப் பழகிக்கொள்வதன்மூலம் வேலையிழப்பு என்கிற கத்தி உங்கள்மீது விழாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் ஆட்டோ மேஷனோ அல்லது ஒப்பந்தத் தொழில்முறையோ, புதிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதைச் செயலாற்றுவதில் முதல் ஆளாக நீங்கள் இருக்க வேண்டும். சரியோ தவறோ புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டு, அதை மற்றவர்களுடன் விவாதிப்பது முக்கியம். தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவது நல்லது. அப்போதுதான் நிறுவனத்துடன் சேர்ந்து நாமும் வளர்ச்சிப் பாதையில் பயணிப்போம்” என அவர் சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொருவரும் கடைப்பிடிப்பது அவசியம்!

- செ.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு