Published:Updated:

வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும்!
வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும்!

வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும்!

பிரீமியம் ஸ்டோரி

ஹலோ வாசகர்களே..!

டந்துகொண்டிருக்கும் பொதுத்தேர்தல் வாக்குறுதியில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்பது மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியானது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்பதை முக்கிய கோஷமாகக் கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும்!



காரணம், நாட்டில் அண்மை ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதற்குப் பதிலாக, லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 

சில மாதங்களுக்குமுன் தேசிய மாதிரி சர்வே அமைப்பின் (என்.எஸ்.எஸ்.ஓ) சர்ச்சைக்குள்ளான புள்ளிவிவரப்படி, கடந்த 1972-73-ம் ஆண்டுக்குப்பிறகு இப்போதுதான் நாட்டில் அதிக வேலைவாய்ப்பின்மை உருவாகியிருக்கிறது.

இதற்கிடையில் இப்போது வெளியாகியிருக்கும் புதிய ஆய்வு அறிக்கை ஒன்றில்,  கடந்த 2011 முதல் 2018 வரையிலான ஆண்டுகளில் அதாவது, கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை இரு மடங்கு  உயர்ந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதுவும், பணமதிப்பு நீக்கத்துக்குப்பிறகு (2016 முதல் 2018 வரை) 50 லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்களாம். இந்தத் தகவல்களை, அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. இது ஒரு தனியார் பல்கலைக்கழகம் என்றாலும், நம்பகத்தன்மை அதிகம் கொண்டது என்பதால் இந்தப் புள்ளிவிவரங்களை அவ்வளவு எளிதாகப் புறம்தள்ள முடியாது. 

‘நாட்டில் வேலைவாய்ப்பின்மை 2015-ம் ஆண்டில் சுமார் 5 சதவிகிதமாக இருந்தது. இது 2018-ம் ஆண்டில் 6 சதவிகிதத்துக்கும் அதிகமாகியிருக்கிறது. நாட்டில் அதிகம் பேர் படித்திருந்தாலும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். குறைந்த கல்வித் தகுதி கொண்டவர்கள் வேலையைக்கூட இழந்திருக்கிறார்கள்’ என அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை விரிவாகக் கூறுகிறது.

இதற்கிடையில், இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் சி.எம்.ஐ.இ அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், ‘நாட்டில் மூன்று மாதங்களாக  வேலைவாய்ப்புக் குறைந்துள்ள நிலையில், மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பு  அதிகரித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எது எப்படியிருந்தாலும், உலக நாடுகளில் சீனாவைவிட மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா இருந்துவருகிறது. இந்த நிலையில், நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது வளர்ச்சிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனை மாற்றியமைக்க, மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது மிக அவசியம். அடுத்த மாதம் மத்தியில் ஆட்சி அமைக்கும் புதிய அரசு, வேலை வாய்ப்பின்மையை அறவே ஒழிக்க தொலைநோக்குப் பார்வையோடு புதிய கொள்கையை உருவாக்குவதையே தன்னுடைய தலையாயக் கடமையாகக் கருத,வேண்டும்.  
  
 - ஆசிரியர்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு