இன்றைய இளைஞர்கள், வருடத்துக்கு ஒரு நிறுவனம் மாறிக்கொண்டிருக் கிறார்கள். அடிக்கடி வேலை மாறுவது, தனது எதிர்கால வாழ்க்கையை (வேலை வாய்ப்புகளை) தானே அழித்துக் கொள்வதற்குச்் சமம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதே இல்லை.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கியிருக்கும் இன்றைய நிலையில், வேலையை விடுவதும் அடிக்கடி வேலை மாறுவதும் சரியான போக்கு இல்லை. ஒரு நிறுவனத்தில் சம்பளம் குறைவாக இருக்கலாம்; சில வசதிகள் இல்லாமல் இருக்கலாம்; சில மாதங்களுக்கு இரவில்கூட வேலை பார்க்கச் சொல்லலாம். இவற்றை யெல்லாம் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டால், அடிக்கடி வேலை மாற வேண்டிய அவசியமிருக்காது. ஆனால், இந்தப் பொறுமை இன்றைய இளைஞர் களிடம் இல்லை என்பதே உண்மை.

பாதகங்கள் என்னென்ன?

அடிக்கடி வேலை மாறும்போது, அந்த மாற்றங்கள் நமது பயோடேட்டாவில் இடம்பெறவே செய்யும். அடிக்கடி வேலை மாறியிருக்கும் ஒருவரின் பயோடேட்டாவைப் பார்த்தாலே, `இவரை வேலைக்கு எடுத்தால், எத்தனை நாளைக்கு இருப்பாரோ’ என நினைத்து ஒதுக்கிவிடுவார்கள்.

இதற்காக வேலை மாறிய விஷயத்தைச் சொல்லாமலும் இருக்க முடியாது. காரணம், இடைப்பட்ட காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விக்குப் பதில் சொல்லவேண்டியிருக்கும். பொய்யான ஒரு காரணத்தைச் சொன்னால், அதற்காகவே அடுத்த வேலை கிடைக்காமல்கூடப் போகலாம்.

ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தால்தான், பணிக்கொடை என்று சொல்லப்படும் கிராஜுட்டி கிடைக்கும். இரண்டு மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை என ஒருவர், இரண்டு மூன்று நிறுவனங்கள் மாறினால் இந்த கிராஜுட்டி தொகை கிடைக்காமலேயே போகும்.

ஒருவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகள் வேலை செய்திருந்தால்தான், அடுத்த நிறுவனத்துக்கு வேலை தேடிச் செல்லும்போது அந்தப் பணியாளர் மதிக்கப்படுவார். அவருடைய பயோடேட்டாவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

அடிக்கடி வேலை மாறும் ஒருவரை ஓர் அலுவலகத்தில் வேலைக்கு எடுத்தாலும், அவரிடம் அலுவலக ரகசியங்கள் எதையும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். சக ஊழியர் களுக்குக் கிடைக்கும் பல சலுகைகள், அவருக்குக் கிடைக்காமல்போகலாம். பதவி உயர்வில், சம்பள உயர்வில் தாமதம் ஏற்படலாம். அடிக்கடி வேலை மாறினால் இதுபோன்ற இழப்புகளைச் சந்திக்க நேரிடும் எனப் புரிந்துகொள்வது அவசியம்.

வேலை மாறாமல் இருந்தால்...

முதலில் வேலையில் சேரும்போது அந்த வேலை மற்றும் நிறுவனம் பற்றிய பலம், பலவீனம், பிளஸ், மைனஸ்களை ஆய்வு செய்தபிறகு சேர்ந்தால், வேலையை விட்டுச் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது. வேலையில் சில பிரச்னைகள் வந்தாலும், அவை கூடியவிரைவில் மறையும்.

நிறுவனத்தின் லட்சியத்தையும் உங்கள் லட்சியத்தையும் ஒன்றாக்கிக்கொள்ளுங்கள். நிறுவனம் தனது லட்சியத்தை அடையும்பட்சத்தில் உங்கள் லட்சியமும் நிச்சயம் நிறைவேறுவதாக இருக்கும்.

சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக வேலை மாறுவது கூடவே கூடாது. முதலில் அதிக சம்பளம் தந்து, பிறகு சம்பளத்தைக் குறைத்தாலும் நீங்கள் கேட்க முடியாது என்பதால், அதை மட்டுமே காரணமாக வைத்து வேலை மாறாதீர்கள்.

சிறந்த நிறுவனங்கள், அந்த நிறுவனத்தில் நீண்ட காலமாக வேலை பார்ப்பவருக்குப் பொறுப்பான உயர்பதவியைத் தரும். ஆக, நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தில் உயர்பதவியை அடைய வேண்டுமெனில், அடிக்கடி வேலை மாற வேண்டாம்.

செ.கார்த்திகேயன்