Published:Updated:

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 215 பணியிடங்கள்... BE படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விக்ரம் சாரபாய்
விக்ரம் சாரபாய் ( pixabay )

திருவனந்தபுரத்தில் இருக்கும் இஸ்ரோவின் பணி மையங்களில் ஒன்றான விக்ரம் சாரபாய் விண்வெளி மையத்தில், அறிவியலாளர், பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்பப் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் இஸ்ரோவின் பணி மையங்களில் ஒன்றான விக்ரம் சாரபாய் விண்வெளி மையத்தில், அறிவியலாளர், பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), தொழில்நுட்பப் பணியாளர் (Technician) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அரசு வங்கிகளில் 12,075 எழுத்தர் பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

பணியிடங்கள்:

1. அறிவியலாளர்/பொறியாளர் (Scientist/Engineer Electronics) - (நிலை 11) – 19 இடங்கள்

2. அறிவியலாளர்/பொறியாளர் - (நிலை 10) – 59 இடங்கள்

3. மருத்துவ அதிகாரி (Medical Officer) (நிலை 11) – 1 இடம்

4. மருத்துவ அதிகாரி (நிலை 10) – 1 இடம்

5. தொழில்நுட்ப உதவியாளர் - (நிலை 7) – 56 இடங்கள்

6. அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) - (நிலை 7) – 4 இடங்கள்

7. நூலக உதவியாளர் (Library Assistant) - (நிலை 7) – 3 இடங்கள்

8.தொழில்நுட்பப் பணியாளர் (Technician) - (நிலை 3) – 66 இடங்கள்

9.வரைவாளர் (Draughtsman) - (நிலை 3) – 6 இடங்கள்

என 215 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

கல்வித் தகுதி:

அறிவியலாளர் / பொறியாளர் நிலை 11 பணியிடங்களுக்குப் பொறியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டமும், நிலை 10 பணியிடங்களுக்குப் பொறியியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். நிலை 10 பணியிடங்களில் சில பிரிவுகளுக்கு, கணிதம், பயன்பாட்டுக் கணிதம் (Applied Mathematics), வேதியியல், பல்லுறுப்பி வேதியியல் (Polymer Chemistry) பாடங்களில் முதுநிலைப் பட்டமும், சில பிரிவுகளுக்கு வேதியியல், Automobile, Metallurgy, Material Science பாடப்பிரிவுகளில் இளநிலைப் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

விக்ரம் சாரபாய்
விக்ரம் சாரபாய்
pixabay

மருத்துவ அதிகாரி நிலை 11 பணியிடத்துக்கு, பொது மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும் (MD – General Medicine), நிலை 10 பணியிடத்துக்கு இளநிலைப் பட்டமும் (MBBS) பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் நிலை 7 பணியிடங்களுக்கு முதல் வகுப்பில் பொறியியல் பாடப்பிரிவில் பட்டயப்படிப்பும், அறிவியல் உதவியாளர் நிலை 7 பணியிடங்களுக்குக் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடத்தில் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டமும், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு முதல் வகுப்பில் நூலக அறிவியல், அல்லது நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

job
job
pixabay

தொழில்நுட்பப் பணியாளர் மற்றும் வரைவாளர் நிலை 3 பணியிடங்களுக்குச் சில குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு பணியிடத்துக்குமான கல்வித் தகுதியில் தேவையான பாடப்பிரிவுகள் மற்றும் இணையான பாடப்பிரிவுகள் குறித்த முழுமையான தகவல்களை அறிய, இந்தப் பணிகளுக்கான தகவல் குறிப்பேட்டைப் படிக்கலாம்.

வயது வரம்பு:

மேற்காணும் பணியிடங்களில், அறிவியலாளர் / பொறியாளர் நிலை 11 பணிக்கு வயதுவரம்பு எதுவும் இல்லை. இந்தப் பணியிடம் தவிர்த்த, பிற பணியிடங்கள் அனைத்துக்கும் 1-1-2020 அன்று 35 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு மட்டும் ஓபிசி - 3, எஸ்சி, எஸ்டி - 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. இதுகுறித்த கூடுதல் தகவலை, தகவல் குறிப்பேட்டில் அறிந்துகொள்ளலாம்.

இஸ்ரோவில் 327  பணியிடங்கள்... பி.இ, பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விக்ரம் சாரபாய் விண்வெளி மையத்தின் http://www.vssc.gov.in எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 1 முதல் 4 வரையிலான பணியிடங்களுக்கு 3-1-2020 வரையிலும், 5 முதல் 7 வரையிலான பணியிடங்களுக்கு 1-1-2020 வரையிலும், 8 மற்றும் 9 பணியிடங்களுக்கு 30-12-2019 வரையிலும் விண்ணப்பிக்க முடியும்.

1 முதல் 7 வரையிலான பணியிடங்களுக்கு ரூபாய் 250, 8 மற்றும் 9 பணியிடங்களுக்கு ரூபாய் 100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை:

1 முதல் 4 வரையிலான பணியிடங்களுக்கு Screening / Written Test, நேர்காணல் வழியாகவும், 5 முதல் 9 பணியிடங்களுக்கு Written/Skill Test) வழியாகவும் தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யப்படுவர்.

இந்தப் பணிகளில் நிலை 11 பணியிடங்களுக்கு ரூபாய் 67,700- ரூபாய் 2,08,700 என்றும், நிலை 10 பணியிடங்களுக்கு ரூபாய் 56,100 – ரூபாய் 1,77,500 என்றும், நிலை 7 பணியிடங்களுக்கு ரூபாய் 44,900 – ரூபாய் 1,42,400 என்றும், நிலை 3 பணியிடங்களுக்கு ரூபாய் 21,700 – ரூபாய் 69,100 என்றும் கொண்ட சம்பளம் ஏற்ற முறையில் (Scale of Pay) சம்பளம் வழங்கப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1234 செவிலியர் பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க! #EmploymentNews

கூடுதல் தகவல்கள்:

இந்தப் பணியிடங்களுக்கான கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, திருவனந்தபுரம், விக்ரம் சாரபாய் விண்வெளி மையத்தின் http://www.vssc.gov.in எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

அடுத்த கட்டுரைக்கு