Published:Updated:

243 ரேஷன்கடை பணியிடங்கள்: 12,137 பேர் விண்ணப்பம்; குவிந்த பெண்கள், இன்ஜினீயரிங் பட்டதாரிகள்!

திண்டல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற நேர்காணல்

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 243 ரேஷன்கடை பணியிடங்களுக்கு 12,137 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று நடந்த நேர்காணலில் பெண்களும், இன்ஜினீயரிங் பட்டதாரிகளும் அதிகளவில் குவிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 233 விற்பனையாளர்கள், 10 கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அப்பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மொத்தம் 243 பணியிடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 12,137 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

நேர்காணலில் பங்கேற்றோர்
நேர்காணலில் பங்கேற்றோர்

இவர்களில் எம்.சி.ஏ, எம்.பி.ஏ, பி.இ, எம்.இ போன்ற இளநிலை, முதுகலை பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்திருந்தனர்.  இவர்களுக்கான நேர்காணல் கடந்த 15ம் தேதி திண்டலில் உள்ள ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை மையத்தில் தொடங்கியது. தொடர்ந்து, வரும் 24-ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் 1,500 பேர் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் தலைமையில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.

நேற்று காலையும் நேர்காணல் நடைபெற்றது. இதில் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு
சான்றிதழ் சரிபார்ப்பு

அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு தகுதியுள்ளவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.