இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது ஒரு கனவு. தமிழக அரசே இதற்கான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்றை 2018ஆம் ஆண்டு தொடங்கியது.

வடசென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராஜா கல்லூரியில் இந்தப் பயிற்சி மையம் தொடங்கப் பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த மையம் எப்படி இயங்குகிறது, இதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்து அந்தப் பயிற்சி மையத்தின் முதல்வர் இரா.இராமனிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS“இந்தக் கல்வி நிறுவனம் இன்னும் சிறு குழந்தைதான். இரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன. ஒரு கல்லூரியில், வாடகை இடத்தில்தான் செயல்படுகிறோம். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்களை இந்நிறுவனம் சாதித்திருக் கிறது” என்று நம்பிக்கையோடு பேசத் தொடங்கினார்.

‘`மத்திய, மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும். ஆரம்பத்தில் மூன்று மாதப் பயிற்சி வகுப்புகளாகத்தான் தொடங்கப் பட்டது. அதன்பின் பயிற்சிபெற்ற மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று இதை ஆறுமாதப் பயிற்சி வகுப்பாக மாற்றினோம். ஓர் ஆண்டில் இரண்டு பேட்ச். ஒரு பேட்சில் 500 மாணவர்கள். அட்மிஷன் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறோம். விண்ணப்பிக்கும் மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பொதுவாகவே தனியார் என்றால் தரம், அரசுத்துறை என்றால் தரமின்மை என்னும் எண்ணம் நிலவுகிறது. அதை மாற்ற விரும்பினோம். அரசுத் தேர்வாணையங்கள், வங்கித்துறை, ரயில்வே ஆகிய அனைத்துப் பொதுத் தேர்வுகளுக்காகத் தமிழ், ஆங்கிலம், வரலாறு, புள்ளியியல் என 15க்கும் மேற்பட்ட பாடங்களைப் பயிற்றுவிக்கிறோம்.ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் அந்தத் துறை சார்ந்த வல்லுநர்களை வரவழைத்துப் பாடம் எடுக்க வைக்கிறோம். வாரம்தோறும் தேர்வுகள் நடத்தி திறனாய்வு செய்கிறோம். தனியார் பயிற்சி மையங்களில் பல ஆயிரங்கள் ஊதியம் பெற்றுக் கொண்டு பாடம் எடுக்கும் பேராசிரியர்கள், இங்கு சேவை மனப்பான்மையோடு வந்து வகுப்பெடுக்கிறார்கள். எல்லோருடைய நோக்கமும் மாணவர்களின் வெற்றி விகிதத்தை அதிகரிப்பதுதான்.
மாணவர்களிடம் இந்தப் பயிற்சி மையம் குறித்த விழிப்புணர்வு தேவை. இலவசப் பயிற்சி, இலவசப் பயிற்சி நூலகம் என இவற்றையெல்லாம் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த இரண்டாண்டு களில் எங்கள் பயிற்சி மையத்தில் பயின்ற பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், குரூப் ஒன் பணிகள், ரயில்வே, வனத்துறை எனப் பல்துறை அரசுப்பணிகளில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை வரும் வருடங்களில் அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

தற்போது நடைபெறும் வகுப்புகள் மே 8-ல் முடிவடையும். அடுத்த சேர்க்கை குறித்து விரைவில் விளம்பரப்படுத்தப்படும். http://tncecc.org/ என்னும் இணையதளம் மூலமும் தெரிந்துகொள்ளலாம். இளைஞர்கள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என்றார்.
“நான் எம்.இ ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். அரசுப் பணியில சேரணும்ங்கிறது என் ஆசை. இந்தப் பயிற்சி வகுப்பு ரொம்பப் பயனுள்ளதா இருக்கு.

வகுப்பு நேரம் பகல் 2 - 5 மணி என்பது வசதியான நேரமா இருக்கு. பேராசிரியர்கள் செறிவோடும் கனிவோடும் பாடம் நடத்துறாங்க. தனியார் நிறுவனங்கள்ல இவ்வளவு சிறப்பான பயிற்சி கிடைக்குமான்னு தெரியலை. அரசுத் தேர்வை எழுதநினைக்கும் இளைஞர்கள் இதைத் தவறாமல் பயன்படுத்திக்கணும்.”