Published:Updated:

புகழ்பெற்ற அரசு நிறுவனங்களில் ஐந்தாண்டு M.Sc படிப்பு - பிளஸ் டூ எழுதும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Job Application / Representational Image
Job Application / Representational Image

இந்த நுழைவுத்தேர்வுக்கு +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை எடுத்துப் படித்து, 2018 அல்லது 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

புவனேஸ்வரிலுள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (National Institute of Science Education and Research - NISER, Bhubaneswar) மற்றும் மும்பைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புமிகு அடிப்படை அறிவியலுக்கான அணு ஆற்றல் மையம் (University of Mumbai – Department of Atomic Energy Center for Excellence in Basic Sciences (UM–DAECEBS)) ஆகியவற்றில் இடம்பெற்றிருக்கும் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கான 5 ஆண்டுக்கால அளவிலான ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புகளில் (M.Sc) சேர்க்கை பெறுவதற்கான NEST 2020 (National Entrance Screening Test 2020 -) தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

National Institute of Science Education and Research - NISER, Bhubaneswar
National Institute of Science Education and Research - NISER, Bhubaneswar

கல்வி மற்றும் வயதுத் தகுதி:

இந்த நுழைவுத்தேர்வுக்கு +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை எடுத்துப் படித்து, 2018 அல்லது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். 2020ம் ஆண்டு மேற்காணும் தேர்வினை எழுதவிருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். பொது மற்றும் ஓபிசி வகுப்பினர் 60% மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிப் பிரிவினர் 55% மதிப்பெண்ணும் பெற்றிருக்கவேண்டும். மதிப்பெண் தகுதிப்புள்ளிகளாக (Grade) இருக்கும் நிலையில் மேற்காணும் மதிப்பெண்ணுக்கு இணையான புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 1-8-2000 அன்றோ அல்லது அதற்குப் பின்போ பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

விண்ணப்பம்:

இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nestexam.in/ எனும் இணையதளத்துக்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

exam
exam
pixabay
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 3-4-2020.

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூபாய் 1200, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிப் பிரிவினர் மற்றும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் ரூபாய் 600 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தைக் கடன் அட்டை / இணைய வங்கிச் சேவை (Net Banking) போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்திச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 3-4-2020.

நுழைவுத்தேர்வு:

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 24-4-2020 முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையினை மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 90 நகரங்களில் 6-6-2020 அன்று நுழைவுத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்பிறகு நுழைவுத்தேர்வு முடிவுகள் 16-6-2020 அன்று மேற்காணும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை:

அதன்பின்னர், இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணைக்கொண்டு உருவாக்கப்பட்ட தரப்பட்டியல் மூலம் கலந்தாய்வு நடத்தப்பெற்று, தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் 200 இடங்கள் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் சிறப்புமிக்க அடிப்படை அறிவியலுக்கான அணு ஆற்றல் மையத்திலிருக்கும் 57 இடங்கள் என்று மொத்தம் 257 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கூடுதல் தகவல்கள்:

இந்த நுழைவுத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் https://nestexam.in/ எனும் இணையதளத்தினைப் பார்வையிடலாம். அல்லது Chief Coordinator, NEST 2020, NALANDA Building, UM-DAE CEBS, Opp: Nano Science Building, University of Mumbai, Vidyanagari, Mumbai - 400098 எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது nest2020@cbs.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு