Published:Updated:

பட்டப்படிப்பு & கூட்டுறவு பயிற்சி முடித்திருக்கிறீர்களா... உங்களுக்கான வேலை வாய்ப்பு இதோ!

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் காலியாக இருக்கும் 300 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

உதவியாளர்
உதவியாளர்

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் காலியாக இருக்கும் 300 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு

1. தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி (சென்னை-1) உதவியாளர் - 176 இடங்கள்.

2. தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (சென்னை-4) உதவியாளர் - 57 இடங்கள்.

3. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (சென்னை-18) உதவியாளர் - 58 இடங்கள்.

4. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (சென்னை-10) இளநிலை உதவியாளர் - 6 இடங்கள்.

5. தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (சென்னை-93) இளநிலை உதவியாளர் – 3 இடங்கள்

என்று மொத்தம் 300 பணியிடங்கள் உள்ளன.

உதவியாளர்
உதவியாளர்

இந்தப் பணியிடங்களில்...

பொதுப் பிரிவு - 93

பிற்படுத்தப்பட்டோர் - 79

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் - 60 பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) - 11

ஆதி திராவிடர் - 45

ஆதி திராவிடர் (அருந்ததியர்) - 9

பழங்குடியினர் - 3

என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சி. ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் ராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்கள் பள்ளி இறுதித் தேர்விலும் (SSLC) மேல்நிலைக் கல்வியிலும் (HSC) முறையாகப் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் 2019-20-ம் ஆண்டில் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் நேரடியாகவோ, தொலைதூரக் கல்வி வழியாகவோ கூட்டுறவு பட்டயப்படிப்பு பயின்று வரும் மாணவர்கள், உதவியாளர் / இளநிலை உதவியாளர் நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின்போது தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

உதவியாளர்
உதவியாளர்

வயது வரம்பு:

1.1.2019 அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இந்த வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை. இதர வகுப்பினருக்கு 30 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். இதர வகுப்பைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு 48 வயது, மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது என்று வயதுத் தளர்வு உண்டு. அனைத்துப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மாநில ஆள்சேர்ப்பு மையத்தின் http://www.tncoopsrb.in எனும் இணையதளத்தில் பதிவுசெய்து, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக ரூபாய் 250/- செலுத்த வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பக் கட்டணத்தை Online மூலம் State Bank of India இணையதளத்தில் உள்ள `SBI Collect' என்ற சேவையைப் பயன்படுத்தி மட்டுமே செலுத்த வேண்டும். இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 22-11-2019.

job
job

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, முறையாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்கள் மட்டும் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்படும் நபர்களின் பட்டியல், மாநில ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

சென்னை, திருச்சி, சேலம், கோயமுத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டத் தலைநகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், பொது அறிவு, அடிப்படைக் கணக்கியல், கூட்டுறவுச் சட்டம் மற்றும் வங்கியியல் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.

எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கானதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்களாகவும் இருக்கும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடைமுறையிலுள்ள அரசாணைகளின்படி இட ஒதுக்கீடு மற்றும் இனச் சுழற்சி அடிப்படையிலும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்படுபவர்களின் பெயர்ப் பட்டியல், மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் வழியாக வெளியிடப்படும். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைப் போல, இரண்டு மடங்கு விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதங்களை, விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும்.

job
job

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி (சென்னை-1) உதவியாளர் பணிக்கு ரூபாய் 18,800 - 56,500.

தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (சென்னை-4) உதவியாளர் பணிக்கு ரூபாய் 13,000 - 45,460.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (சென்னை-18) உதவியாளர் பணிக்கு ரூபாய் 15,000 - 62000.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (சென்னை-10) இளநிலை உதவியாளர் பணிக்கு ரூபாய் 9,300 - 34,800.

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (சென்னை-93) இளநிலை உதவியாளர் பணிக்கு ரூபாய் 19,500 - 62,000.

என்கிற சம்பளம் ஏற்ற முறையிலான (Scale of Pay) சம்பளம் வழங்கப்படும்.

இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு, மாநில ஆள்சேர்ப்பு மையத்தின் http://www.tncoopsrb.in எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம்.