Published:Updated:

அரசுக் கல்லூரியில் பேராசிரியராகணுமா... 2,331 பணியிடங்கள் காலி... உடனே அப்ளை பண்ணுங்க!

மொத்தம் 73 பாடப் பிரிவுகளில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர்
உதவிப் பேராசிரியர்

தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்விச் சேவைகளில் இடம்பெற்றிருக்கும் அரசினர் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 2,331 உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பணியிடங்களை நேரடிச் சேர்க்கைத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்:

ஆங்கிலம் – 309

தமிழ் – 231

கணிதம் – 192

இயற்பியல் – 150

விலங்கியல் – 100

புவியியல் – 68

வரலாறு – 60

புள்ளியியல் – 56

தாவர உயிரியல் மற்றும் தாவர உயிர்த் தொழில்நுட்பம் (Plant Biology and Plant Bio-Technology) – 32

மனையியல் (Home Science) – 31

காட்சித் தொடர்பியல் (Visual Communication) - 21

உதவிப் பேராசிரியர்
உதவிப் பேராசிரியர்

என்று மொத்தம் 73 பாடப் பிரிவுகளில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களில் நிலுவைக் காலியிடங்கள் (Backlog Vacancies) – 72, பற்றாக்குறை காலியிடங்கள் (Shortfall Vacancies) – 4, நடப்புக் காலியிடங்கள் (Current Vacancies) – 2252, சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College, Chennai –5) காது கேளாதவர்களுக்குத் தமிழ் மற்றும் கணினிப் பயன்பாடு துறைகளில் பயிற்சி அளிக்க சிறப்புப் பணியிடங்கள் – 3

என்று மொத்தம் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இருக்கின்றன.

பாடவாரியாக நிலுவைக் காலியிடங்கள், பற்றாக்குறைக் காலியிடங்கள் மற்றும் நடப்புக் காலியிடங்களில் இட ஒதுக்கீட்டு விவரங்களும், பெண்களுக்கான ஒதுக்கீடு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு போன்ற விவரங்களும் இந்த அறிவிப்புக்கான தகவல் குறிப்பேட்டில் பிரித்துத் தரப்பட்டிருக்கின்றன.

உதவிப் பேராசிரியர்
உதவிப் பேராசிரியர்

கல்வித் தகுதி:

1. தொடர்புடைய பாடப் பிரிவில் 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், தொடர்புடைய பாடப் பிரிவில் NET/ SLET/ SET / SLST / CSIR/ JRF போன்ற தகுதித் தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

2. தொடர்புடைய பாடப் பிரிவில் 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், அந்தப் பாடத்தில் இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் நடைமுறைகளைப் பின்பற்றி முனைவர் (Ph.D) பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதியில் சில தளர்வுகள், முதுநிலை பட்டப்படிப்புக்கு இணையான முதுநிலைப் பட்டப்படிப்புகள் குறித்த விவரங்கள் உள்ளிட்ட மேலும் சில கூடுதல் தகவல்களைத் தகவல் குறிப்பேட்டின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

3. காது கேளாதவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சிறப்புப் பணியிடங்களுக்கு, இந்திய மறுவாழ்வுக் குழு (Rehabilitation Council of India) ஒப்புதல் அளித்த, காது கேளாதவர்கள் – செவித்திறன் குறைபாடுடையவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான முதுநிலைப் பட்டயப்படிப்பு (Senior Diploma in Teaching the Deaf - Hearing Impairment) அல்லது செவித்திறன் குறைபாடுடையவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான சிறப்பு இளநிலைக் கல்வியியல் பட்டம் (Special B.Ed in teaching the Hearing Impairment) பெற்றிருக்க வேண்டும்.

job
job

வயது வரம்பு:

இந்தப் பணியிடங்களுக்கு மேலதிக வயது 58 என்பதால், விண்ணப்பதாரர்கள் 1-7-2019 அன்று 57 வயது நிறைவடைந்தவராக இருக்கக்கூடாது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in எனும் இணையதளத்தில் பதிவுசெய்துகொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செயல்படுத்தல் கட்டணமாக (Application Processing Fee) எஸ்சி. எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (PWBD) பிரிவினர் ரூ. 300, மற்ற பிரிவினர் ரூ. 600ஐ இணைய வழியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-10-2019

தேர்வு முறை:

தரநிலை மற்றும் இட ஒதுக்கீட்டுப் பட்டியல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் வரிசைப்படுத்தப்பட்டு, போட்டியாளர்களின் குறுகிய பட்டியல் தயாரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப் பெறுவர்.

இந்தக் குறுகிய பட்டியல் 1:3 எனும் விகிதாச்சார அடிப்படையில் தயாரிக்கப்படும். விண்ணப்பத்தில் கொடுக்கப்பெற்ற விவரங்களின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை (F2) அரசு ஆணை எண்: G.O.Ms.No.412, நாள்: 7-12-2009 மற்றும் அரசு ஆணை எண்: G.O.Ms.No.32, நாள்: 8-3-2013 ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்டபடி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தரப்பட்டியல் தயாரிக்கப்படும்.

job
job
ராணுவப் பள்ளி ஆசிரியர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்... பணி வாய்ப்புகள்! #JobVacancy

1. ஆசிரியப் பணி அனுபவம் – 15 மதிப்பெண்கள்

(பல்கலைக்கழகங்கள்/ அரசு / நிதியுதவி பெறும் கல்லூரிகள் / சுயநிதிக் கல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் / மருத்துவம் / பொறியியல் / சட்டக் கல்லூரிகளில் தொடர்புடைய பாடங்களில், ஆசிரியர் பணி அனுபவம் கணக்கில் கொள்ளப்படும். வருடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும்)

2. கல்வித் தகுதி – 9 மதிப்பெண்கள்

(தொடர்புடைய பாடப்பிரிவில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றவர்களுக்கு 9 மதிப்பெண்களும், ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil) பெற்று SLET / NET / SET தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு 6 மதிப்பெண்கள், முதுநிலைப் பட்டம் மற்றும் SLET / NET / SET தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும்)

job
job

3. நேர்காணல் – 10 மதிப்பெண்கள்

மொத்தம் 34 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு தேர்வு செய்யப்படுவர். இங்கு, ஆசிரியப் பணி அனுபவத்துக்கான தகுதி மதிப்பெண்கள் வழங்க, தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறையின் கடித எண்: 12258/A/F2/2013-3, நாள்: 31-7-2013 கொண்ட ஆணை வழிகாட்டுகிறது.

முதல் நிலையான சான்றிதழ் சரிபார்ப்பு (Stage-I: Certificate Verification) மற்றும் இரண்டாம் நிலையான நேர்காணல் (Stage–II: Interview) ஆகியவற்றுக்குப் பின்பு தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யபெற்று, பணிக்கான ஆணை வழங்கப்படும். உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வுசெய்யப் பெற்றவர்களுக்கு, மாதத்துக்கு ரூபாய் 57,700 – 1,82,400 எனும் ஊதிய விகிதத்தில் (Level 10) சம்பளம் வழங்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கான நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

job
job
`நேர்காணல் இல்லை; மதிப்பெண் அடிப்படையிலேயே வேலை'- அரசுப்பணியில் சீர்திருத்தம் செய்யும் ஜெகன்!

கூடுதல் தகவல்கள்:

இந்தத் தேர்வுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உதவித் தொலைபேசி 044 - 28272455, 7373008144, 7373008134 எனும் எண்களில், அலுவலக வேலை நேரத்தில் தொடர்புகொண்டு பெறலாம்.