Published:Updated:

முப்படை ராணுவத்தில் காலியாக இருக்கும் 418 அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு! #JobOpportunities

இந்திய அரசின் முப்படைகளில் அதிகாரிகளாகப் பணியாற்றிடத் தேவையான பயிற்சிகளை அளிக்கும் பயிற்சி நிறுவனங்கள், அளிக்கப்படும் பயிற்சிகள் மற்றும் பயிற்சியிடங்கள் குறித்த விவரங்கள்...

முப்படை
முப்படை ( pixabay )

இந்திய அரசின் ராணுவம், தரைப்படை, கப்பற் படை, விமானப் படை ஆகிய முப்படைகளில் காலியாக இருக்கும் 418 அதிகாரி பணிகளுக்கு, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வு (I) 2020 (Combined Defence Services Examination (I) 2020) நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) வெளியிட்டிருக்கிறது.

பயிற்சி இடங்கள்:

இந்திய அரசின் முப்படைகளில் அதிகாரிகளாகப் பணியாற்றிடத் தேவையான பயிற்சிகளை அளிக்கும் பயிற்சி நிறுவனங்கள், அளிக்கப்படும் பயிற்சிகள் மற்றும் பயிற்சியிடங்கள் குறித்த விவரங்கள்.

1. இந்திய ராணுவப் பயிற்சி நிறுவனம், டேராடூன் (Indian Military Academy, Dehradun).

2021-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் 150-வது (ராணுவக் கல்வி) பயிற்சி (150th (DE) Course) – 100 இடங்கள். (என்சிசி – சி (ராணுவப் பிரிவு) சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு 13 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன).

2. இந்திய கப்பற்படைப் பயிற்சி நிறுவனம், எழிமலா (Indian Naval Academy, Ezhimala).

2021-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் செயல் அதிகாரி (பொதுச்சேவை) / நீரியல் பயிற்சி (Executive (General Service) / Hydro) – 45 இடங்கள். (என்சிசி – சி (கடற்படைப் பிரிவு) சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன).

3. விமானப்படைப் பயிற்சி நிறுவனம், ஹைதராபாத் (Air Force Academy, Hyderabad).

2021-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் பறத்தலுக்கு முந்தைய பயிற்சி வகுப்பு (Pre-Flying Training Course) – 32 இடங்கள். (என்சிசி – சி (விமானப் படைப் பிரிவு) சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன).

4. அதிகாரிகள் பயிற்சி நிறுவனம், சென்னை (Officers’ Training Academy, Chennai (Madras)).

2021-ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் 113-வது எஸ்எஸ்சி (ஆண்கள்) பயிற்சி வகுப்பு (என்டி) (113th SSC (Men) Course (NT)) – 225 இடங்கள்.

அ. எஸ்எஸ்சி (ஆண்கள்) (என்டி) யுபிஎஸ்சி - 170

ஆ. ஜேஏஜி (ஆண்கள்) (என்டி) – 5

என்சிசி சிறப்பு நுழைவு - 50 இடங்கள் என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன)

5. அதிகாரிகள் பயிற்சி நிறுவனம், சென்னை (Officers’ Training Academy, Chennai (Madras))

2021 ஏப்ரலில் தொடங்கும் 27வது எஸ்எஸ்சி (பெண்கள்) தொழில்நுட்பமற்ற பயிற்சி வகுப்பு (27 SSC Women (Non-Technical) Course) - 16 இடங்கள்.

கல்வித் தகுதி:

1. டேராடூன், இந்திய ராணுவப் பயிற்சி நிறுவனம் மற்றும் சென்னை, அதிகாரிகள் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் சேர்க்கை பெறுவதற்கு, ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

2. எழிமலா, இந்திய கப்பற்படைப் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை பெறுவதற்குப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. ஹைதராபாத், விமானப் படைப் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை பெறுவதற்கு, ஏதாவதொரு பட்டப்படிப்பு (10 மற்றும் +12 வகுப்பில்) இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்) அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முப்படை
முப்படை
pixabay

வயது வரம்பு:

டேராடூன், இந்திய ராணுவப் பயிற்சி நிறுவனம் மற்றும் எழிமலா, இந்திய கப்பற்படைப் பயிற்சி நிறுவனப் பயிற்சிக்குத் திருமணமாகாத ஆண்கள், 2.1.1997 முதல் 1.1.2002 வரையிலான காலத்திலும், ஹைதராபாத், விமானப் படைப் பயிற்சி நிறுவனப் பயிற்சிக்கு 2.1.1997 முதல் 1.1.2001 வரையிலான காலத்திலும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

தேவையான உடற்தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் https://upsconline.nic.in/ எனும் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வு (I) 2020 (Combined Defence Services Examination (I) 2020) விண்ணப்பப் படிவத்தை இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பமானது, பகுதி 1 மற்றும் பகுதி 2 என்று இரு பகுதிகளாகச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

பகுதி 1 விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 200/- செலுத்திவிட்டு, பகுதி 2 விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.11.2019

முப்படை
முப்படை
pixabay

தேர்வு முறை:

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உட்பட இந்தியா முழுவதும் 41 நகரங்களில் முதற்கட்ட எழுத்துத் தேர்வு 2.2.2020 அன்று நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான அனுமதி அட்டையை (E-Admit Card) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து, தேர்வு நாளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

எழுத்துத் தேர்வுக்குப் பின்பு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத்திறன் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்கள், குறிப்பிட்ட பயிற்சி நிறுவனங்களில் 2021-ம் ஆண்டு ஜனவரி / ஏப்ரல் மாதம் தொடங்கும் பயிற்சியில் சேர வேண்டும். அந்தப் பயிற்சியை நிறைவு செய்ததும், அவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

கூடுதல் தகவல்கள்:

இந்தத் தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் http://upsconline.nic.in இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வு (I) 2020 தகவல் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அல்லது டெல்லியிலுள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தின் `சி’ வாசல் அருகில் அமைந்திருக்கும் உதவி மையத்துக்குச் (Facilitation Counter) சென்று நேரடியாகக் கேட்டுப் பெறலாம். தேர்வாணைய அலுவலகத்தின் அலுவலக வேலைநேரத்தில் 011 - 23385271, 23381125, 23098543 எனும் எண்களில் தொடர்புகொண்டும் பெறலாம்.

ரயில்வே, கப்பற்படை, அரசு இரும்பாலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க ரெடியா?