Published:Updated:

3 வழிகாட்டுதல்கள்: கல்விக் கடன், காட்டுயிர் ஆய்வாளர் படிப்பு, அரசு வேலைக்கு உறுதுணை!

கல்வி
கல்வி

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று உயர்கல்வி வாய்ப்புகள் பெருகிவிட்டன. நாம் எவ்வளவு பின்தங்கிய சூழலில் இருந்தாலும் கொஞ்சம் முயன்றால் வாய்ப்புகளை எட்டிப் பிடித்துவிட முடியும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கல்விக்கடனைத் திருப்பிச்செலுத்துவது எப்படி?

கல்விக்கடனைத் தவணை முறையில் திருப்பிச்செலுத்துவதற்கு அதிகபட்சம் 60 மாதங்கள் (5 ஆண்டுகள்) வழங்கப்படும். கல்லூரிப்படிப்பு முடிந்த ஆண்டிலிருந்து கூடுதலாக ஓர் ஆண்டு, வேலை தேடுவதற்காகவே வழங்கப்படும். கல்விக்கடன் தொகை அதிகமாக இருந்தால், கல்விக்கடனைத் திருப்பிச்செலுத்துவதற்கான ஆண்டும் அதிகபட்சம் 10 ஆண்டுகள்வரை அதிகரிக்கப்படும். படிப்பு முடித்து வேலையில் சேர்வதற்கு ஓர் ஆண்டுக்காலத்தையும்விட அதிகரித்தால், வங்கி மேலாளரிடம் கால அவகாசத்தை அதிகரிக்க முறையிடலாம். அதற்கான கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேலும் ஆறு மாதங்கள் கால அவகாசம் தருவதற்கு வாய்ப்புள்ளது.

- இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று உயர்கல்வி வாய்ப்புகள் பெருகிவிட்டன. நாம் எவ்வளவு பின்தங்கிய சூழலில் இருந்தாலும் கொஞ்சம் முயன்றால் வாய்ப்புகளை எட்டிப் பிடித்துவிட முடியும். பொருளாதாரச் சிக்கல்கள் இன்று நம் கல்விப்பயணத்தில் ஒரு தடைக்கல்லே இல்லை என்ற நிலையைக் கல்விக்கடன்கள் உருவாக்கியிருக்கின்றன. கல்விக்கடன் குறித்த பல்வேறு சந்தேகங்கள் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் உண்டு. சில அடிப்படைக் கேள்விகளுக்கு விரிவான பதில்கள் - A to Z வழிகாட்டுதலை ஆனந்த விகடன் கல்விச் சிறப்பிதழ் பகுதியில் முழுமையாக வாசிக்க > கல்விக்கடன் எப்படிப் பெறலாம்? https://www.vikatan.com/news/education/a-complete-guide-to-getting-the-educational-loan

காட்டுயிர் ஆய்வாளர் ஆகணுமா?

காட்டுயிர் ஆராய்ச்சிக்குள் இளைஞர்கள் வரவேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் அதிலுள்ள வாய்ப்புகள் குறித்துப் பேசிய பறவை ஆய்வாளர் கிருபாநந்தினி, "ஆய்வு நிறுவனங்களே முதுகலை முடித்த மாணவர்களை வேலைக்கு எடுக்கும். முதுகலைப் படிப்பில் காட்டுயிர் அறிவியல் முடிக்கும் மாணவர்கள், அப்படிப்பட்ட ஆய்வு நிறுவனங்களில் ஏதேனும் ஆய்வுத் திட்டத்தில் இணைந்து பணியாற்றலாம். சில வருடங்கள் அவர்கள் அங்கு அனுபவம் பெற்ற பிறகு, அவர்களே சுயமாகச் சில ஆய்வுத் திட்டங்களை முன்னெடுக்கலாம். அதற்குரிய நிதியுதவியைக் கொடுக்கப் பல அமைப்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, Department of Science & Technology என்ற அமைப்பு முதன்முதலாக சுயமாக ஆய்வுசெய்ய வருபவர் களுக்கும் பெண்களுக்கும் முதலுரிமை கொடுத்து ஊக்குவித்துவருகிறது. ஆய்வு மாணவர்கள் தங்கள் துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் ஆரம்பக்காலத்தில் இத்தகைய அமைப்புகளின் உதவி அவர்களுக்குத் துணைபுரியும்” என்று கூறினார்.

3 வழிகாட்டுதல்கள்: கல்விக் கடன், காட்டுயிர் ஆய்வாளர் படிப்பு, அரசு வேலைக்கு உறுதுணை!

- காட்டுயிர் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு காட்டுயிரியல், காட்டியல், சுற்றுச்சூழல் அறிவியல், கடல்சார் அறிவியல் என்று பல்வேறு படிப்புகள் முதுகலையில் இருக்கின்றன. அவற்றைப் படிக்க, இளங்கலைப் படிப்பில், பி.எஸ்ஸி விலங்கியல் (Zoology), தாவரவியல் (Botany), நுண்ணுயிரியல் (Micro Biology), காட்டியல் (Forestry) போன்ற படிப்புகளைப் படிக்கவேண்டும். அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களிலுமே இந்தப் படிப்புகள் இருக்கின்றன. உங்கள் மகனோ மகளோ விலங்குகளை, பறவைகளை, பூச்சிகளைக் கவனிப்பதில், அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் பேரார்வம் கொண்டவராக இருக்கிறாரா?! அவர்களுக்குக் காட்டுயிர் ஆய்வாளர் ஆவதற்கான திறன்கள் இருக்கின்றன. அவருக்கு அதுகுறித்த படிப்புகளை அறிமுகப்படுத்துங்கள். இதற்கான முழுமையான வழிகாட்டுதல் தரும் ஆனந்த விகடன் கல்விச் சிறப்பிதழ் கட்டுரையை வாசிக்க > காட்டைக் கற்கலாம்! https://www.vikatan.com/news/education/studying-opportunities-related-to-forest-life

போட்டித் தேர்வுகளுக்கு அரசுப் பயிற்சி நிறுவனம்!

''மத்திய, மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும். ஆரம்பத்தில் மூன்று மாதப் பயிற்சி வகுப்புகளாகத்தான் தொடங்கப் பட்டது. அதன்பின் பயிற்சிபெற்ற மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று இதை ஆறுமாதப் பயிற்சி வகுப்பாக மாற்றினோம். ஓர் ஆண்டில் இரண்டு பேட்ச். ஒரு பேட்சில் 500 மாணவர்கள். அட்மிஷன் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறோம். விண்ணப்பிக்கும் மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்" என்கிறார் இரா.இராமன்.

கல்வி
கல்வி

இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது ஒரு கனவு. தமிழக அரசே இதற்கான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்றை 2018ஆம் ஆண்டு தொடங்கியது. வடசென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராஜா கல்லூரியில் இந்தப் பயிற்சி மையம் தொடங்கப் பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த மையம் எப்படி இயங்குகிறது, இதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்து அந்தப் பயிற்சி மையத்தின் முதல்வர் இரா.இராமனிடம் பேசினோம். அவர் பகிர்ந்தவற்றை முழுமையாக ஆனந்த விகடன் கல்விச் சிறப்பிதழ் பகுதியில் வாசிக்க > அரசுப் பயிற்சி நிறுவனம் https://www.vikatan.com/news/career/a-visit-to-the-chennai-coaching-centre-for-government-jobs

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு