Published:Updated:

ஆன்லைன் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணப்போறீங்களா? உங்களுக்கான செக் லிஸ்ட்..!

Video call

வேலை கிடைக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதற்காக, ஒரு நன்றி மெயில் அனுப்பலாம். அதில் உங்களின் பணி சார்ந்த எந்த விசாரிப்புகளும் இல்லாமல் இருந்தால் நிறுவனத்துக்கு உங்கள் மீதான மதிப்பு கூடும்.

ஆன்லைன் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணப்போறீங்களா? உங்களுக்கான செக் லிஸ்ட்..!

வேலை கிடைக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதற்காக, ஒரு நன்றி மெயில் அனுப்பலாம். அதில் உங்களின் பணி சார்ந்த எந்த விசாரிப்புகளும் இல்லாமல் இருந்தால் நிறுவனத்துக்கு உங்கள் மீதான மதிப்பு கூடும்.

Published:Updated:
Video call

கொரோனா பொது முடக்கம் காரணமாக ஆட்குறைப்பு செய்த நிறுவனங்கள், தற்போது குறைந்த அளவு பணியாளர்களை மீண்டும் பணிக்குச் சேர்க்க ஆரம்பித்துள்ளன. இதற்காகப் பல நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பணியாளர்களுக்கான தேர்வை நடத்தி வருகின்றன. ஆன்லைன் நேர்முகத்தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களைத் தருகிறார் மனிதவள மேம்பாட்டாளர் ஜாஃபர் அலி.

டெக்னாலஜி முன்னேற்பாடு

எந்த சாதனம் மூலம் நீங்கள் வீடியோ இன்டர்வியூவில் இணையப்போகிறீர்களோ அந்த சாதனத்தில் இணைய இணைப்பு சரியாக உள்ளதா, கேமரா, மைக் போன்றவை சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை முன்பே செக் செய்து கொள்ளுங்கள். குறிப்பாக, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இன்டர்வியூ அட்டெண்ட் செய்யப்போகும் ஆப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். போன் மூலம் வீடியோ இன்டர்வியூவில் இணைகிறீர்கள் எனில் எதிர்பாராத அழைப்புகள் வரக்கூடும். அதனால் உங்கள் கவனம் சிதறக்கூடும். எனவே, இன்டர்வியூவுக்கு லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பைத் தேர்வு செய்வது நல்லது. இப்படிச் சின்னச் சின்ன டெக்னாலஜி விஷயங்களைத் தெரிந்துகொண்டு முதல் நாளே டிரையல் பார்த்துக்கொண்டால் தேவையில்லாத பதற்றத்தைத் தவிர்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இடத்தேர்வு

நல்ல வெளிச்சமான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வுசெய்து அமரும் இடத்தில் மற்றவர்களின் கவனத்தைக் குலைக்கும் வேறு எந்தப் பொருளும் இருக்கக் கூடாது. கூடியவரை ப்ளெயின் பேக்ரவுண்டைத் தேர்வுசெய்து அமர்வது நல்லது. நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் உள்ள கேமரா உங்கள் நெற்றிக்கு நேராக இருப்பது போல் ஃபிக்ஸ் செய்ய வேண்டும். இன்டர்வியூ நடக்கும்போது ஸ்கீரினை பார்த்துப் பேசாமல் கேமராவைப் பார்த்துப் பேச வேண்டும். அப்போதுதான் ஐ கான்டாக்ட் சரியாக இருக்கும். முகத்தை குளோசப்பில் காட்டக் கூடாது. எனவே, உங்கள் கேமராவுக்கும் உங்களுக்கும் இடையில் 30.செ.மீ இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இன்டர்வியூ ஆரம்பித்த பிறகு, கேமராவை அங்குமிங்கும் நகர்த்துவது, ஜூம் இன் அல்லது ஜூம் அவுட் செய்வது போன்றவற்றைத் தவிருங்கள்.

ஆடைகளில் கவனம்

ஆன்லைனில் இன்டர்வியூ என்றாலும் அதிலும் நீங்கள் நேரில் அட்டெண்ட் செய்வது போன்றே உங்களின் தோற்றம் இருக்க வேண்டும். ஃபார்மல் ஆடைகளைத் தேர்வு செய்து அணியுங்கள். ஆடையில் உள்ள பட்டன்கள் சரியாகப் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம். உங்களின் ஹேர்ஸ்டைல், மேக்கப் என எல்லாவற்றிலும் கவனமாக இருப்பது அவசியம். வெளிர்நிற ஆடைகளை அணிந்தால் நீட் லுக் கொடுக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேஷுவலாக இருங்கள்

ஆன்லைன் இன்டர்வியூ புதியது என்பதால் சிறிது பதற்றம் இருக்கலாம். நகம் கடிப்பது, தலைமுடியைச் சரிசெய்வது, அடிக்கடி பெருமூச்சு விடுவது போன்றவற்றின் மூலம் பதற்றத்தை வெளியே காட்டிக்கொள்ளாதீர்கள். படபடப்பு உங்களின் பலவீனம் என்று நிறுவனங்கள் நினைக்கக்கூடும். கூடுமானவரை கூலாக இருக்க முயற்சி செய்யுங்கள். அதையும் மீறி படபடப்பு இருக்கிறது என்றால் அனுமதி கேட்டு தண்ணீர் குடித்துவிட்டுப் பேச ஆரம்பிக்கலாம். இன்டர்வியூ செய்பவர் கேள்விகேட்டு முடிக்கும்வரை பொறுமையாக இருந்து, அதன் பின் உங்களின் பதிலை அளியுங்கள்.

நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு

உங்களின் ரெஸ்யூமை அருகில் வைத்துக்கொண்டு பேச ஆரம்பியுங்கள். அதன்மூலம் உங்களின் கரியர் பற்றிய கேள்விகளுக்குத் தயக்கமின்றி உடனே பதில் சொல்ல முடியும். உங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் உடனே கூகுள் செய்யாதீர்கள். அது உங்கள் மீது நெகட்டிவ் எண்ணத்தை ஏற்படுத்தலாம். இந்த விஷயம் எனக்குப் புதிதாக இருக்கிறது, விரைவில் கற்றுக்கொள்கிறேன் என்று பாசிட்டிவ்வாகப் பதில் சொல்லுங்கள்.

உடல் மொழி

இன்டர்வியூவின் ஆரம்பத்திலிருந்தே உங்கள் உடல் மொழியில் கவனமாக இருங்கள். வீடியோ இணைப்பில் இருக்கும்போது மூக்கைச் சுத்தம் செய்வது, காதைக் குடைவது, கலைந்திருக்கும் தலைமுடியைச் சரிசெய்வது, மொபைலை நோண்டுவது, நடந்து கொண்டே பேசுவது என்று அடுத்தவர்களுக்கு எரிச்சல் தரும் செயல்களைச் செய்யாமல், மிகுந்த நம்பிக்கையுடன் பேசுங்கள். குரூப் டிஸ்கஷன் எதுவும் இருக்கிறது என்றால் உங்கள் வாய்ப்பு வரும்வரை பொறுமையாக இருங்கள். நடுவில் ஏதேனும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் கைகளை உயர்த்துங்கள் அட்மின் அனுமதி தந்த பிறகு, பேச ஆரம்பியுங்கள்.

இன்டர்வியூ செய்பவர் வீடியோ இணைப்பைத் துண்டிக்கும்வரை பொறுமையாக இருந்து இணைப்பைத் துண்டியுங்கள். வேலை கிடைக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதற்காக, ஒரு நன்றி மெயில் அனுப்பலாம். அதில் உங்களின் பணி சார்ந்த எந்த விசாரிப்புகளும் இல்லாமல் இருந்தால் நிறுவனத்துக்கு உங்கள் மீதான மதிப்பு கூடும்.

நியூ நார்மல் லைஃபில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism