Published:Updated:

கண்ணாடிக்கு பதில் சோலார் பேனல்... மின்சார வாரியத்துக்கே மின்சாரம் விற்பனை!

சோலார் பேனல்

கண்ணாடியை வைத்து கட்டடம் கட்ட 20-லிருந்து 25 லட்சம் வரை செலவாகும், அதனால் எந்த வருமானமும் இல்லை. எனவே 45 லட்சம் செலவில் சோலார் பேனல்கள் வைத்து 5-மாடி கட்டடம் கட்டினோம். தினசரி 100 கிலோவாட் மின்சாரம் கிடைக்கிறது.

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் நகரில் குருத்வாரா சந்திப்பில் கட்டப்பட்டுள்ள ஐந்து மாடி கட்டடம் அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், இது வெறும் ஐந்து மாடி கட்டடமாக மட்டும் இல்லாமல், கட்டடத்தின் கண்ணாடிக்குப் பதில், சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சோலார்
சோலார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து கட்டடத்தின் உரிமையாளர் பாப்ஜி என அழைக்கப்படும் நாராயண ராவ் கூறியதாவது, ``ஏற்கனவே நகரத்தில் சூழலைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன என்பதால் சமூக காரணத்துக்காகவே இந்தக் கட்டடம் கட்டப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கட்டடத்தின் முன் பக்கம் மற்றும் பக்கவாட்டிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. தூசியிலிருந்து கட்டடத்தைப் பாதுகாக்க கண்ணாடியை வைத்து கட்டடம் கட்ட தீர்மானித்தோம். அதற்கு 20-லிருந்து 25 லட்சம் வரை செலவாகும். ஆனால், அதனால் எந்த வருமானமும் இல்லை.

கண்ணாடிக்கு பதில் சோலார் பேனல்... மின்சார வாரியத்துக்கே  மின்சாரம் விற்பனை!

எனவே 45 லட்ச திட்டத்தில் சோலார் பேனல்கள் வைத்து ஐந்து மாடி கட்டடம் கட்டப்பட்டது. கட்டடத்துக்கு தினசரி 35 முதல் 50 கிலோவாட் வரை மின்சாரம் தேவைப்படும் நிலையில், சோலார் பேனல்கள் தினசரியாக 100 கிலோவாட் மின்சாரத்தை வழங்குகிறது. எனவே, ஆந்திர பிரதேச கிழக்கு மின் விநியோக நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மீதமுள்ள மின்சாரம் விற்கப்படுகிறது.

இந்தக் கட்டடத்தில் 24 ஏசி அறைகளை கொண்ட விருந்தினர் மாளிகை உள்ளது. விரைவில் இந்தக் கட்டடம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.