Published:Updated:

`தைரியமும், ஒழுக்கமும் அதிகரிக்கும்' - சிலம்பத்தின் நன்மைகளை பகிரும் சிலம்ப விளையாட்டு வீரர்கள்!

சிலம்பம் சுற்றும் சிவானி

பெரும்பாலான பெற்றோர்கள் பெண்கள் சின்ன ஆடைகள் போட்டு விளையாடுவதை விரும்பவில்லை, மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற பயத்திலும் பெண்களின் கனவுகளுக்கு முக்கியம் கொடுப்பதில்லை.

`தைரியமும், ஒழுக்கமும் அதிகரிக்கும்' - சிலம்பத்தின் நன்மைகளை பகிரும் சிலம்ப விளையாட்டு வீரர்கள்!

பெரும்பாலான பெற்றோர்கள் பெண்கள் சின்ன ஆடைகள் போட்டு விளையாடுவதை விரும்பவில்லை, மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற பயத்திலும் பெண்களின் கனவுகளுக்கு முக்கியம் கொடுப்பதில்லை.

Published:Updated:
சிலம்பம் சுற்றும் சிவானி

20ம் நூற்றாண்டில் தோன்றிய தொழிற்புரட்சிக்கு பிறகு அனைத்து நாடுகளிலும் நகரங்கள் வேகமாக வளர்ந்தன. நகரமயத்தினால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தாலும் பாரம்பர்யத்துக்கும், இயற்கைக்கும் இடையே இருந்த மக்களின் பிணைப்புகள் அறுந்து போய்விட்டன. அதுவும் நம்முடைய பாரம்பர்ய விளையாட்டுகள் அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்டன.

சிலம்ப விளையாட்டு
சிலம்ப விளையாட்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்முடைய பாரம்பர்ய அறிவையும், விளையாட்டுகளையும் அடுத்த தலைமுறைக்காகவாவது நாம் மீட்க வேண்டிய தேவை அதிகமாகவே இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் ஒன்றுதான் சிலம்பம். காலத்தின் ஓட்டத்தில் நாம் மறந்து போன முக்கிய பாரம்பரிய விளையாட்டு. தற்போது அதன் அவசியமும் சிறப்பும் புரிந்து மீண்டும் மீட்டெடுத்து வருகிறோம். தற்போது சிலம்பம் எல்லாராலும் வரவேற்கப்படுகிறது. மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சியளிக்கும் சென்னையிலுள்ள இரண்டு அமைப்பை சேர்ந்த சிலம்ப ஆசான்களிடம் பேசினோம்.

முதலாவதாக சென்னை சிலம்பாலயா அமைப்பை சேர்ந்த சிவானியிடம் பேசினோம். சிவானி முதுகலை உடற்கல்வி (MPED) மற்றும் சிலம்பத்தில் பி.ஜி டிப்ளமோ பயின்றுள்ளார். சென்னை வேலம்மாள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் சென்னை கீழ்பாக்கத்திலும் அதனருகில் உள்ள மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கிறார்.

சிவானி
சிவானி

அவர் பேசுகையில் “சென்னை சிலம்பாலாயா அமைப்பானது ஆசான் கௌரி சங்கரால் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜே.சி சிலம்பம் என்ற பேரில் இயங்கியது. குறிப்பிட்ட காலத்துக்கு பின்னரே பெயர் மாற்றப்பட்டது. சிலம்பாலயா மூலம் வளசரவாக்கம், கீழ்பாக்கம், குரோம்பேட்டை, ஈ.சி.ஆர் உள்ளிட்ட நான்கு இடங்களில் சிலம்பம் பயிற்சியளித்து வருகிறோம். ஆரம்பத்தில் சென்னை சிலம்பாலாயாவின் சிலம்ப பயிற்சி பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. நானே விருப்பத்துடன் வகுப்பில் சேர்ந்தேன்.

முதல் ஒரு வாரம் கடினமாக இருந்தது. பயிற்சி தொடர்ந்து செய்ய எளிதாகிவிட்டது. சிலம்பம் மட்டுமல்லாமல் ஹாக்கியும் விளையாடுவேன். கல்லூரி காலங்களில் விளையாடியது தற்போது ஹாக்கி விளையாட மைதானம் இல்லாததால் ஹாக்கி விளையாடுவதை தொடர முடியவில்லை. சிலம்பம் பயிற்சி பெற்றதன் விளைவாக எனக்கு தைரியமும், வெளிப்படைத்தன்மையும் அதிகரித்துள்ளது. சரியோ தவறோ வெளிப்படையாக பேசிவிடுவேன்.

சிலம்ப பயிற்சியில்
சிலம்ப பயிற்சியில்

பொதுவாக பெண்களை விளையாட்டு துறையில் பெற்றோர்கள் அனுமதிக்க தயங்குகின்றனர். பெரும்பாலான பெற்றோர் பெண்கள் சின்ன ஆடைகளை அணிந்து விளையாடுவதை விரும்பவில்லை, மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற பயத்தில் பெண்களின் கனவுகளுக்கு முக்கியம் கொடுப்பதில்லை. ஆனால் என் பெற்றோர் அப்படியில்லை. என் அப்பா விளையாட்டில் நீ போடும் உடையை விட, உன் திறமையை தான் எல்லாரும் பார்ப்பார்கள் என்று கூறுவார். அது என்னை மேலும் உற்சாகப்படுத்தியது.

சிலம்பத்தைப் பொறுத்தவரையில் 6 வயது சிறுவன் முதல் 60 வயது பெரியவர் வரை சிலம்பம் பயிலலாம். சிலம்பம் என்பது பாரம்பரிய முறையில் கற்பிக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் கீழே மேட் விரித்தும், கட்டிடத்துக்குள்ளும், சூ போட்டுக்கொண்டும் சிலம்பம் சொல்லிக்கொடுக்கிறார்கள். இது தவறான முறை.

வெறுங்காலுடன் பயிற்சி செய்வதென்பது உடலுக்கு நல்லது; காரணம் மண் ஒருவித அழுத்தத்தை கொடுக்கும். கூழாங்கல் நிறைந்த இடம் ஒருவித அழுத்த உணர்வை கொடுக்கும். சிமெண்ட் தரை ஒரு வித அழுத்த உணர்வை கொடுக்கும். இவையனைத்தும் உணர்ந்து சிலம்ப பயிற்சி எடுப்பதே பாரம்பரிய வெறுங்கால் பயிற்சி முறையாகும்.

பயிற்சியில்
பயிற்சியில்

சிலம்பம் தற்காப்பு கலை என்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் மாணவர்களிடையே உறுதிப்படுத்துகிறது. இதுமட்டுமல்லாமல் பல பேருக்கு நல்ல வாழ்க்கையே சிலம்பம் ஏற்படுத்தி தந்துள்ளது. நான் இன்று விளையாட்டு துறையில் பணிபுரிகிறேன் என்றால் அதற்கு காரணம் சிலம்பம் கற்றுக்கொண்டதுதான்.

சிலம்பம் இன்று தமிழக மக்களால் வரவேற்கப்பட்டாலும் ஒலிம்பிக்கில் சிலம்பத்தில் வென்றவர்களின் புகைப்படம் செய்தி தாள்களில் ஏதோ ஒரு மூலையில் இடம்பெறுகிறது. கிரிக்கெட், கால்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இன்னும் சிலம்பத்துக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இந்நிலை மாற வேண்டும். அரசாங்கம் சிலம்பத்திற்கென தனி மைதானம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்" என்று கூறினார் சிவானி.

சென்னை தாம்பரத்திலுள்ள சிலம்ப ஆசான் ரமேஷிடம் பேசினோம். அவர் பேசுகையில், "என் பெரியப்பா சினிமா துறையில் லைட் மேனாக வேலை செய்தார். சினிமாவில் வரும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் மூலம் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொண்டார். அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்..

ரமேஷ்
ரமேஷ்

தற்போது தமிழ் பாரம்பரிய தற்காப்புக்கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு மூலம் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புகலைகள் பயிற்றுவிப்பது சித்த மருத்துவம் போன்றவற்றில் குழுவாக ஈடுபட்டு வருகிறோம். தாம்பரம் கேம்ப் ரோடு, தாம்பரம் கிழக்கு கோட்டூர்புரம், ஆவடி, மேடவாக்கம், உள்ளிட்ட இடங்களில் மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி கொடுக்கிறோம். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் எங்களின் கிளைகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் பல பள்ளிகளிலும் சிலம்ப வகுப்பு எடுத்து வருகிறோம்.

ஆரம்ப காலங்களில் பள்ளிகளில் பயிற்சி எடுக்க அனுமதி கிடைப்பது சிரமமாக இருந்தது. தெரிந்த பாதிரியார் மூலம் ஆறு, ஏழு பள்ளிகளில் சிலம்ப பயிற்சி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி மாணவர்களுக்கு கராத்தே போன்ற தற்காப்பு கலையுடன் சிலம்பமும் பயிற்சியளிக்கிறோம்.

மாணவர்களுடன்
மாணவர்களுடன்

சிலம்பத்தில் நடுங்கம்பு, மூஞ்சாண் கொம்பு, செடிக்குச்சி, நெடுங்கம்பம் போன்ற பாரம்பரிய முறைகள் இருக்கு. நன்கு சிலம்பத்தை அறிந்தவர்கள் இதுவொரு முக்கியமான விளையாட்டு என்று புரிதலுடன் இருக்கிறார்க்ள்.

இன்று பெரும்பாலான மாணவர்கள் சிலம்பத்தை மேம்போக்காக மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள். ஒரு மாணவனின் உடற்கூறை தயார்படுத்துவது, தியானம், பயிற்சி செய்யும் போது ஏதாவது அடிப்பட்டால் அதற்கான வைத்தியமுறை உள்ளிட்டவை கற்றுக்கொள்வது தான் முழுமையான சிலம்ப பயிற்சி முறையாகும்.

ரமேஷ்
ரமேஷ்

இன்று சிலம்பம் கற்றுக்கொள்ளும் பசங்க யாரும் உடலை வருத்திக்கொண்டு கற்றுக்கொள்ள முன் வருவதில்லை. 10 பசங்க பயிற்சி எடுத்தால் அதில் யார் நன்கு சிலம்பம் பயிற்சி பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் தொடுமுனை அடிப்பாடங்கள் போன்ற பயிற்சியளிக்க முடிகிறது. எல்லாரும் இந்த பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

கல்லூரி உயர்படிப்பில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவுக்கு விளையாட்டு முக்கியம். பள்ளிக்கூடங்களில் சிலம்ப பயிற்சி பெற்ற சான்றிதழ்களே, வெளியில் அமைப்பு மூலம் பயிற்சி பெற்ற, வெற்றிப் பெற்ற சான்றிதழ்களைக் காட்டிலும் பள்ளி சான்றிதழ்கள் உயர்கல்விக்கு முக்கியமானவை. அதனால் எங்கள் கவனம் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் சொல்லிக்கொடுப்பதில் அதிகமாக உள்ளது.

சிலம்பம் பயிற்சியில்
சிலம்பம் பயிற்சியில்

பெற்றோர்களின் அழுத்தம் காரணமாக குழந்தைகள் சிலம்பம் கற்றுக்கொள்ளாமல், அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டி சிலம்பம் பயிற்றுவிப்பது சிறப்பாக அமையும்" என்றார் ரமேஷ்.