Published:Updated:

ராணுவப் பள்ளி ஆசிரியர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்... பணி வாய்ப்புகள்! #JobVacancy

தேனி மு.சுப்பிரமணி

வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய தகவல்கள், கல்வித்தகுதி விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்களும் இதோ...

Job Vacancy
Job Vacancy

ராணுவப் பொதுப்பள்ளிகளில் ஆசிரியர் பணிகள்

இந்தியா முழுக்க ராணுவப் படையினர் குடியிருப்புகள் (Cantonments) மற்றும் ராணுவ மையங்களில் (Military Stations) அமைக்கப்பட்டிருக்கும் 137 ராணுவப் பொதுப்பள்ளிகளில் (Army Public Schools) முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் (Post Graduate Teacher - PGT), பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (Trained Graduate Teacher – TGT) மற்றும் தொடக்கநிலை ஆசிரியர் (Primary Teacher – PRT) எனும் மூன்று பிரிவுகளில்

மொத்த ஆசிரியர் பணியிடங்கள் - 8,000

Military
Military

பணியிடங்கள் ஒதுக்கீடு

மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைப்படி இட ஒதுக்கீடு செய்யப்படும்.

வயது வரம்பு (1-4-2020 அன்று)

புதிய தேர்வர்கள் (5 ஆண்டு அனுபவத்துக்குக் குறைவானவர்கள்) – 40 வயதுக்குக் குறைவு (டெல்லியிலுள்ள பள்ளிகளுக்கு TGT & PRT – 29 வயதுக்குக் குறைவு, PGT – 36 வயதுக்குக் குறைவு)

பணி அனுபவமுடைய தேர்வர்கள் (கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தது 5 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள்) – 57 வயதுக்குக் குறைவு (டெல்லியிலுள்ள பள்ளிகளுக்கு 40 வயது)

தகுதிகள்:

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் (Post Graduate Teacher - PGT):

முதுநிலைப் பட்டப்படிப்பு (Post Graduate) மற்றும் இளநிலைக் கல்வியியல் பட்டம் (B.Ed) பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்

(Trained Graduate Teacher – TGT):

இளநிலைப் பட்டப்படிப்பு (Graduation) மற்றும் இளநிலைக் கல்வியியல் பட்டம் (B.Ed)

தொடக்கநிலை ஆசிரியர் (Primary Teacher – PRT):

இளநிலைப் பட்டப்படிப்பு (Graduation) மற்றும் இளநிலைக் கல்வியியல் பட்டம் (B.Ed) அல்லது இரண்டு ஆண்டுப் பட்டயப்படிப்பு (எல்லாப் படிப்புகளிலும் 50% மதிப்பெண்ணுக்குக் குறைவில்லாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்ணு க்குக் குறைவாகப் பெற்றிருந்தாலும், முதுநிலைப் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்ணுக்கு அதிகம் பெற்றிருப்பின் விண்ணப்பிக்கலாம்.)

Career
Career

எப்படி விண்ணப்பிப்பது?

http://aps-csb.in எனும் இணையப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.500/-

விண்ணப்பிக்கக் கடைசி நாள் 21-9-2019.

தேர்வு முறை

இணையவழியிலான ஸ்க்ரீனிங் தேர்வு (Screening Test), நேர்காணல் (Interview), கற்பித்தல்திறன் மற்றும் கணினி வல்லமை மதிப்பீடு (Evaluation of Teaching Skills and Computer Proficiency) போன்றவற்றின் வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் தகவல்களுக்கு...

http://aps-csb.in எனும் இணைய முகவரியைப் பார்க்கலாம்.

ராஜா ராமண்ணா மேம்பட்ட தொழில்நுட்ப மையம் - வேலை பழகுநர் சேர்க்கை (Apprenticeship)

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ், மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் செயல்பட்டுவரும் ராஜா ராமண்ணா மேம்பட்ட தொழில்நுட்ப மையத்தில் (Raja Ramanna Centre for Advanced Technology), வேலை பழகுநர் சட்டம் 1961-ன் கீழ், 15 தொழிற் பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்தப் பணியிடங்கள் - 70

ஃபிட்டர் – 17

மெஷினிஸ்ட் – 3

டர்னர் - 3

டிராப்ஃட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) – 3

வெல்டர் (கேஸ் & எலெக்ட்ரிக்) – 3

ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏசி மெக்கானிக் – 2

சர்வேயர், பிளம்பர், கார்பென்ட்டர், கொத்தனார் - தலா 1

எலெக்ட்ரானிக் மெக்கானிக் / இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் – 20

எலெட்ரீஷியன் – 8

எலெக்ட்ரோ பிளேட்டர் – 2

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் & புரோகிராமிங் அசிஸ்டென்ட் – 3

கம்ப்யூட்டர் நெட்ஒர்க் டெக்னீஷியன் - 2

Electrician Job
Electrician Job

இட ஒதுக்கீடு:

பொதுப்பிரிவினர் – 36

ஓபிசி – 10

எஸ்சி – 10

எஸ்டி – 14

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்புத் தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) தொடர்புடைய தொழில் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2017ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பின்னர் வரும் ஆண்டுகளில் தொழிற்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 2016ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய வருடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது. 15-10-1997 முதல் 14-10-2001 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தேசிய வேலை பழகுநர்களுக்கான www.apprenticeship.gov.in எனும் இணையதளத்தில், தங்களது தொழில் பிரிவுடன் பதிவுசெய்துகொள்ள வேண்டும். பிறகு, இந்த மையத்தின் வேலை பழகுநருக்கான https://www.info-rrcat.ernet.in/recdev/recdev_ad_appr_oct_19/ எனும் இணையப் பக்கத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20-9-2019

தேர்ந்தெடுக்கும் முறை:

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merit List) ஒன்று தயாரிக்கப்பட்டு, 25-9-2019 அன்று இந்த மையத்தின் வேலை பழகுநர் தளத்தில் வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள், 29-9-2019 தேதிக்குள் ஆவணங்கள் சரிபார்ப்புச் செயல்பாட்டில் பங்கேற்பதை உறுதிசெய்திட வேண்டும்.

Jobs
Jobs

பிறகு, ஆதார் அடையாள அட்டையிலுள்ள முகவரியில் குடியிருந்துவருவதை உறுதிப்படுத்திட, காவல்துறையிடமிருந்து முகவரி சரிபார்ப்புச் சான்றிதழ் ஒன்றையும் பெற வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட தகுதிப் பட்டியல் 1-10-2019 அன்று இந்த நிறுவனத்தின் வேலை பழகுநருக்கான இணையதளத்தில் இடம்பெறும். அதைத் தொடர்ந்து, 7-10-2019 அன்று இந்த நிறுவனத்தில் நடைபெறும் சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும். 7-10-2019 முதல் 15-10-2019வரை நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளில் கலந்துகொண்டு, உடல் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும். 15-10-2019ஆம் தேதிக்குள் இந்த நிறுவனத்தில் வேலை பழகுநராகச் சேர்வதை உறுதிசெய்திட வேண்டும். உதவித்தொகை:1961 சட்டத்தின்படி மாதம் ஒன்றுக்கு ரூ.7,750/- வழங்கப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு... http://www.rrcat.gov.in/hrd/Openings/tasar.html#

இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனம் (Engineers India Limited) - நிர்வாகிகள் பணி

டெல்லியைத் தலைமையகமாகக்கொண்ட இந்திய அரசு நிறுவனமான இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாகவும், பொறியியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமாகவும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் நிலையான கால அடிப்படையில் (Fixed Term Basis) Piping Stress (Mechanical), Planning (Civil), Planning (Mechanical) போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்தப் பணியிடங்கள் - 28

Piping Stress (Mechanical) நிலை I – 14

Planning (Civil) நிலை II – 3

நிலை III – 2

Planning (Mechanical) நிலை II – 6

நிலை III – 3

Engineering Jobs
Engineering Jobs

இட ஒதுக்கீடு:

நிலை I பணியிடங்களில்...

பொதுப்பிரிவு - 7

ஈடபிள்யூஎஸ் – 1

எஸ்சி – 2

எஸ்டி – 1

ஓபிசி – 3

நிலை II பணியிடங்களில்...

பொதுப்பிரிவு - 6

எஸ்சி – 1

ஓபிசி – 2

நிலை III பணியிடங்களில்...

பொதுப்பிரிவு - 4

ஓபிசி – 1

கல்வித் தகுதி:

Piping Stress (Mechanical) மற்றும் Planning (Mechanical) பணியிடங்களுக்கு இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பிலும், Planning (Civil) பணியிடத்துக்குக் கட்டுமானப் பொறியியல் பட்டப்படிப்பிலும், (பி,இ / பி.டெக் / பி.எஸ்ஸி) 60% மதிப்பெண்ணுக்குக் குறையாமல் பெற்று, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிலை I பணிக்குத் தொடர்புடைய பணியில் குறைந்தது 4 வருட அனுபவம்.

நிலை II பணிக்குக் குறைந்தது 8 வருட அனுபவம்.

நிலை III பணிக்குக் குறைந்தது 12 வருட அனுபவம்.

வயது வரம்பு:

நிலை I பணிக்கு - 37 வயதுக்குள்

நிலை II பணிக்கு - 41 வயதுக்குள்

நிலை III பணிக்கு - 45 வயதுக்குள்

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த நிறுவனத்தின் http://www.engineersindia.com எனும் இணையதளத்தில் பதிவுசெய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23-9-2019.

Engineering Jobs
Engineering Jobs

தேர்ந்தெடுக்கும் முறை:

பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் பணி அனுபவங்கள் அடிப்படையில், இடஒதுக்கீட்டைப் பின்பற்றி, பட்டியலின் அளவு குறைக்கப்பட்டு (Short listing) பட்டியல் தயாரிக்கப்படும். அந்தப் பட்டியலில் இடம்பெறுபவர்கள் டெல்லி அலுவலகத்துக்கு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்குப் பின்னர் உரியவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

உதவித்தொகை:

பணிகளின் நிலை மற்றும் பணியாற்றும் இடங்களுக்கேற்ப மாதத்துக்கு ரூ.72,000/- முதல் ரூ.1,12,000/- வரை தொகுப்பூதியம் வழங்கப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு...

http://recruitment.eil.co.in/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited) - சுரங்க வேலைப் பணி

நெய்வேலியில் இயங்கிவரும் இந்திய அரசு நிறுவனமான, `நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்’, இந்திய நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாகவும், நிலக்கரிச் சுரங்கப் பணிகள் மற்றும் அனல் மின்சார உற்பத்தி நிறுவனமாகவும் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் `Mining Sirdar எனும் சுரங்க வேலைப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்தப் பணியிடங்கள் - 12

இட ஒதுக்கீடு:

`W-6’ எனும் நிலையில் இடம்பெற்றிருக்கும் இந்தக் காலிப் பணியிடங்களில்...

பொதுப்பிரிவு - 7

ஈடபிள்யூஎஸ் – 1

ஓபிசி – 1

எஸ்சி – 1

எஸ்டி – 2

இந்தப் பணியிடம் 23,000 – 3% - 95,000 எனும் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டது.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம்
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம்

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி, சுரங்கப் பாதுகாப்புக்கான பொது இயக்குநர் (Director General of Mines Safety) வழங்கிய Mining Sirdarship சான்றிதழ் ஆகிவற்றுடன் முதல் உதவிச் சான்றிதழ், வாயு சோதனைச் சான்றிதழ் போன்றவற்றைச் செல்லத்தக்கதாக வைத்திருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி, சுரங்கம் அல்லது சுரங்க அளவிடுதல் பாடத்தில் மூன்று ஆண்டுகாலப் பட்டயப்படிப்புத் தேர்ச்சி, சுரங்கப் பாதுகாப்புக்கான பொது இயக்குநர் (Director General of Mines Safety) வழங்கிய `Overman’s Certificate of competency’ எனும் தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் முதல் உதவிச் சான்றிதழ், வாயு சோதனைச் சான்றிதழ் போன்றவற்றைச் செல்லத்தக்கதாக வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொது மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினர் - 30 வயதுக்குள்

ஓபிசி பிரிவினர் - 33 வயதுக்குள்

எஸ்சி, எஸ்டி பிரிவினர் - 35 வயதுக்குள்

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த நிறுவனத்தின் www.nlcindia.com எனும் இணையதளத்தில் ‘Career’ எனும் பக்கத்துக்குச் சென்று, இப்பணியிடத்துக்குப் பதிவுசெய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300/-

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23-9-2019.

கல்லூரி மாணவர்களுக்கு ஓஎன்ஜிசி ஸ்காலர்ஷிப்... எப்படி விண்ணப்பிப்பது?

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு மணி நேரகால அளவில், 100 மதிப்பெண்ணுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் பொது மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினர் 50% மதிப்பெண்ணுக்குக் குறையாமலும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40% மதிப்பெண்ணுக்குக் குறையாமலும் பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். தேர்வுசெய்யப்படுபவர்கள் தொடக்கத்தில், ஒடிசா மாநிலத்திலுள்ள தளிபாரா சுரங்கத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

கூடுதல் தகவல்களுக்கு...

https://www.nlcindia.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம் அல்லது இந்த நிறுவனத்தின் உதவித் தொலைபேசி எண்ணான 04142-255135-க்கு அலுவலகப் பணி நேரத்தில் (காலை 10:00 மணி முதல் மாலை 17:00 மணிவரை) தொடர்புகொள்ளலாம்.

இந்திய எண்ணெய்க் கழகம் (Indian Oil Corporation Ltd) - தொழில்நுட்ப உதவிப் பணிகள்

இந்திய அரசு நிறுவனமான இந்திய எண்ணெய்க் கழகத்தின் குழாய்வழிப் பிரிவில் (Pipelines Division) இந்தியா முழுவதும் காலியாக இருக்கும் தொழில்நுட்ப உதவிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்த பணியிடங்கள் - 22

குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் பணி.

பொறியியல் உதவியாளர்கள் – 12

தொழில்நுட்ப உதவியாளர் – 9

இளநிலை உதவியாளர் – 1

இட ஒதுக்கீடு:

பொதுப்பிரிவு – 14

ஓபிசி – 4

ஈடபிள்யூஎஸ் – 2

மாற்றுத்திறனாளிகள் – 2

Indian Oil Corporation Ltd
Indian Oil Corporation Ltd

விண்ணப்பக் கட்டணம்:

பொது, ஈடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு: ரூ.100/-

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23-9-2019.

தேர்ந்தெடுக்கும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வுகளைக்கொண்டு பணியாளர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டையை 5-10-2019 முதல் 20-10-2019வரை இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 20-9-2019 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வுக்குப் பின்னர் 21-10-2019 அன்று திறனறித் தேர்வு நடத்தப்படும். திறனறித் தேர்வுக்கான எண்ணிக்கை அதிகமிருப்பின் 22-10-2019 அன்றும் தொடர்ந்து நடைபெறும். அதற்குப் பின்னர், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் பணிக்கான ஆணை வழங்கப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு...

இந்த நிறுவனத்தின் www.iocl.com அல்லது https://plis.indianoilpipelines.in எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

மோதிலால் நேரு தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் (Motilal Nehru National Institute of Technology Allahabad) - ஆசிரியரல்லாத பணிகள்

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் எனுமிடத்தில் அமைந்திருக்கும் மோதிலால் நேரு தேசியத் தொழிநுட்ப நிறுவனம் அலகாபாத் கல்வி நிறுவனத்தில் காலியாக இருக்கும் எட்டு வகையான ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்தப் பணியிடங்கள் - 106

இட ஒதுக்கீடு:

மேற்பார்வையாளர் பணி:

பொதுப்பிரிவு – 4

ஓபிசி – 1

இளநிலை உதவியாளர் பணி

பொதுப்பிரிவு - 8

ஈடபிள்யூஎஸ் – 1

ஓபிசி – 4

எஸ்சி – 1

எஸ்டி – 1

முதுநிலை உதவியாளர் பணி

பொதுப்பிரிவு - 6

ஓபிசி – 2

எஸ்சி – 1

சுருக்கெழுத்தர் பணி

பொதுப்பிரிவு – 2

motilal nehru national institute of technology allahabad
motilal nehru national institute of technology allahabad

முதுநிலை சுருக்கெழுத்தர் பணி

பொதுப்பிரிவு – 1

தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலைப் பொறியாளர்/மாணவர் செயல்பாடு மற்றும் விளையாட்டு உதவியாளர்/நூலகத் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்...

பொதுப்பிரிவு - 14

ஈடபிள்யூஎஸ் – 3,

ஓபிசி – 8

எஸ்சி – 4

தொழில்நுட்பவியலாளர்

பொதுப்பிரிவு - 13

ஈடபிள்யூஎஸ் – 3

ஓபிசி – 8

எஸ்சி – 4

எஸ்டி - 2

(மாற்றுத்திறனாளிகள் இருவரை உள்ளடக்கியது)

முதுநிலைத் தொழில்நுட்பவியலாளர்

பொதுப்பிரிவு - 7

ஈடபிள்யூஎஸ் – 1

ஓபிசி – 4

எஸ்சி – 2

எஸ்டி - 1

(மாற்றுத்திறனாளி ஒருவரை உள்ளடக்கியது)

கல்வித் தகுதி:

பணியிடம் ஒவ்வொன்றுக்குமான கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்கள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பில் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த நிறுவனத்தின் http://www.mnnit.ac.in எனும் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல்களைத் தெரிந்துகொண்டு, அதன்பிறகு, https://academics.mnnit.ac.in/NTR/regular/index.php எனும் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது, ஈடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.500/-

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டண விலக்கு.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30-9-2019.

ஏர் இந்தியா, எஸ்.பி.ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!- விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, பல்கலைக்கழக விதிமுறைகளைப் பின்பற்றிப் பட்டியலைக் குறைத்தல் (Shortlisting) முறைப்படி ஒரு தேர்வுப் பட்டியல் உருவாக்கப்பட்டு நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படும். பிறகு, பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு மட்டும் திரையிடல் சோதனை (Screening Test), தொழில் சோதனை/திறன் சோதனை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் போன்றவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

கூடுதல் தகவல்களுக்கு...

இந்த நிறுவனத்தின் http://www.mnnit.ac.in எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.