Published:Updated:

சட்ட பொது நுழைவுத் தேர்வு 2021... விண்ணப்பிப்பது எப்படி? கேள்வித்தாள் எப்படியிருக்கும்? #CLAT2021

சட்டம்...
News
சட்டம்...

01.01.2021 முதல் 31.03.2021 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.4000, ஆதிதிராவிடர், பழங்குடியினர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.3500.

பெங்களூரு, ஹைதராபாத், போபால், கர்நாடகா, ஜோத்பூர், ரெய்ப்பூர், காந்திநகர், லக்னோ, பஞ்சாப், பாட்னா, கொச்சி, ஒடிசா, ராஞ்சி, விசாகப்பட்டினம், திருச்சி, மும்பை, நாக்பூர், அவுரங்காபாத், சிம்லா, ஜபல்பூர், ஹரியானா என்ற 22 இடங்களில் சேர்ந்து இளநிலை (Under Graduation) மற்றும் முதுநிலை (Post Graduation) சட்டப் படிப்புகளை படிக்க, இந்தப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது.

இவை தவிர, விஐடி (VIT) சென்னை, Cresent School of Law – Chennai, SRM – Chennai, சண்முகா கலை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி, தஞ்சை என்று தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகள் உட்பட இந்தியா முழுமையும் உள்ள பல்வேறு கல்லூரிகள் CLAT ஸ்கோர் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கின்றன.

சட்டம்
சட்டம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

CLAT தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் BA (LLB), B.Sc (LLB), B.Com (LLB) , BSW (LLB), BBA (LLB) என்ற இளநிலை சட்ட படிப்புகளையும், இளநிலை பட்டம் படித்தவர்கள் LLM போன்ற முதுநிலை பட்டப் படிப்புகளையும் படிக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விண்ணப்பிக்க தகுதி

இளநிலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு இல்லை. பன்னிரண்டாம் வகுப்பில் ஏதேனும் ஒரு குரூப் எடுத்து பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள் என ஆர் ஐ, பி ஐ ஓ, ஓ சி ஐ பிரிவினர் குறைந்தது 45 சதவிகிதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறைந்தது 40 சதவிகிதமும் பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை சட்ட பட்டப் படிப்பிற்கு, இளநிலை சட்டப் படிப்பான LLB அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்பில், பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள், என் ஆர் ஐ, பி ஐ ஓ, ஓ சி ஐ பிரிவினர் குறைந்தது 50 சதவிகிதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறைந்தது 45 சதவிகிதமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு
தேர்வு
pixabay

நுழைவுத் தேர்வு பற்றி...

இளநிலை நுழைவுத் தேர்விற்கான இரண்டு மணிநேரத் தேர்வில், 150 சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான வினாக்கள் இருக்கும். சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் தரப்படும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆங்கிலம், தற்கால நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு லீகல் ரீஸனிங் (Legal Reasoning), லாஜிக்கல் ரீஸனிங் (Logical Reasoning), குவான்டிடேட்டிவ் டெக்னிக் (Quantitative Technique) என்ற பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

முதுநிலைப் படிப்பிற்கான இரண்டு மணி நேர தேர்வில் 120 சரியான விடையை தேர்வு செய்யும் முறையிலான வினாக்கள் இருக்கும். சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் தரப்படும். தவறான விடைக்கு 0.25மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வினாக்கள்...

  1. Constitution Law

  2. Jurisprudence

  3. Administrative Law

  4. Law of Contract

  5. Torts

  6. Family Law

  7. Criminal Law

  8. Property Law

  9. Company Law

  10. Public International Law

  11. Tax Law

  12. Environmental Law

  13. Labour and Industrial Law

என்ற பாடங்களிலிருந்து கேட்கப்படும்.

சட்டம்
சட்டம்

விண்ணப்பிக்கும் முறை

01.01.2021 முதல் 31.03.2021 வரை ஆன்லைனில் www.consortiumofnlus.ac.in என்ற இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.4000, ஆதிதிராவிடர், பழங்குடியினர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.3500.

CLAT ஆஃப்லைனில் தேர்வு: 09.05.2021, பிற்பகல் 3 முதல் 5 மணி வரை (ஞாயிறு) நடைபெறும்.