Published:Updated:

ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்? - வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று!

ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்?

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி - புதிய பகுதி 1

ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்? - வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று!

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி - புதிய பகுதி 1

Published:Updated:
ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்?
 வித்யா முரளிதரன்
வித்யா முரளிதரன்

`வொர்க்கிங் வுமன்' என்ற வார்த்தையை, தன்னுடைய அடையாளமாக்கிக் கொள்ளும் கனவு பல பெண்களுக்கும் இருக்கும். ஆனால், ரெஸ்யூம் தயாரிப்பது தொடங்கி, நிறுவனங்களில் இருக்கும் வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்வது வரை பல விஷயங்கள் அவர் களுக்குத் தடையாக இருக்கும். வேலை வாய்ப்பை உருவாக்குவது தொடங்கி, ஊதிய உயர்வு பெறுவதுவரை, நிறுவனத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்களைக் கடந்து எப்படிச் சாதிக்கலாம் என்பது பற்றி விளக்குவதே ‘வினா நூறு, கனா நூறு, விடை ஒன்று’ தொடரின் நோக்கம்.

முதல் பகுதியாக வேலைக்கு விண்ணப்பிப்பதில் அடிப்படையான ரெஸ்யூம் தயாரிப்பு பற்றிய வழிகாட்டல்...

சென்னையைச் சேர்ந்தவர் பூஜா. இன்டர்வியூவுக்கான ரெஸ்யூம் தயாரிக்க வழக்கம்போல் கூகுள் ஆண்டவரின் உதவியை நாடினார். கட், காப்பி, பேஸ்ட் செய்து, பெயர் மற்றும் கல்வித்தகுதிகளை மட்டும் அப்டேட் செய்தார். அந்த ரெடிமேட் ரெஸ்யூமிலிருந்த சில பகுதிகள் பூஜாவுக்குப் புரியாததால் அவற்றைத் தவிர்த்துவிட்டார். இன்டர்வியூவுக்கு அழைத்திருந்த நிறுவனம், பூஜா தவிர்த்திருந்த பகுதியிலிருந்து கேள்விகளைக் கேட்க, பதில் அளிக்கத் தெரியாமல் அந்த வேலை வாய்ப்பைத் தவறவிட்டார் பூஜா.

வேலைக்கான அஸ்திவாரமே ரெஸ்யூம்தான். ஒரு ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும், எவற்றையெல்லாம் தவிர்க்க வேன்டும் என்ற தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த, நிறுவன மேம்பாட்டு ஆலோசகர் வித்யா முரளிதரன்.

“ரெஸ்யூமை பொறுத்தவரை செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம்.

ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்? - வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று!

செய்ய வேண்டியவை...

ரெஸ்யூம் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். அட்டவணைகள் இட்டு தகவல்களைப் பதிவிடாமல் பாயின்ட் பாயின்ட்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆன்லைனிலிருந்து ரெஸ்யூமுக்கான டெம்ப்ளேட் எடுத்து, அந்த வடிவத்தை அடிப்படையாகக்கொண்டு, உங்களுடைய ஸ்டைலில் ரெஸ்யூமை உருவாக்குங்கள். நீங்கள் விரும்பும் டெம்ப்ளேட்டில் உங்களுடைய ரெஸ்யூமை வடிவமைத்துக் கொடுப்பதற்கென்றே ஏராளமான இணையதளங்கள் உள்ளன. அவற்றின் உதவியையும் நாடலாம்.

ரெஸ்யூம் பக்கம் பக்கமாக இல்லாமல் ஒன்றிலிருந்து இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

எந்த வேலைக்கு அப்ளை செய்கிறீர்களோ, அந்த வேலைக்கான தகுதிகளையும், உங்களின் அனுபவங்களையும் அப்டேட் செய்திருக்க வேண்டும்.

அனுப்புநர், பெறுநர் என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதாமல், கல்வித் தகுதி, பர்சனல் ஸ்கில், அனுபவங்கள், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், தொடர்பு எண், மெயில் ஐடி என்ற வரிசையில் ரெஸ்யூமை வடிவமைக்கவும்.

வேலையோடு தொடர்புள்ள உபரி தகுதிகள் பற்றி மட்டும் குறிப்பிடுங்கள். உதாரணமாக... 12-ம் வகுப்பில் கட்டுரைப் போட்டியில் முதலிடம், கல்லூரியில் கவிதைப் போட்டியில் முதலிடம் போன்ற சம்பந்தமில்லாத திறமைகளைக் குறிப்பிடாமல், பணிக்குத் தேவையான கூடுதல் தகுதிகளை மட்டும் குறிப்பிடுங்கள்.

எழுத்தின் (font) அளவு ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஒரே மாதிரி இருக்க வேண்டும்.

சமீபத்திய புகைப்படத்தை ரெஸ்யூமில் இணைப்பது அவசியம்.

உங்களுக்கு ரெஸ்யூம் தயார் செய்யத் தெரியவில்லை எனில், அனுபவம் உள்ளவர்களிடம் உதவி கேட்கலாம்.

செய்யக்கூடாதவை...

தேவையற்ற இடங்களில் பர்சனல் தகவல்களைப் பகிர்வது.

தெரியாத அல்லது பொய்யான தகவல்களைக் குறிப்பிடுவது.

எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளுடன் ரெஸ்யூம் தயாரிப்பது.

எதிர்மறையான கருத்துகள் அல்லது தகவல்களைக் குறிப்பிடுவது.

சாதி அல்லது மதத்தின் பெயரைக் குறிப்பிடுவது.

ரெஸ்யூம் எந்த மொழியில்..?

ஆங்கிலம், உலக அளவில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழியாக இருக்கிறது. எனவே, உங்கள் ரெஸ்யூம் ஆங்கிலத்தில் இருப்பது பயனுள்ளதாக இருக்கும். வேலைக்காக உங்களை இன்டர்வியூ செய்பவர், உங்கள் ரெஸ்யூமை பரிசீலித்து உங்களைத் தேர்வுசெய்யும் இடத்திலிருப்பவர் எனப் பலரும் வெவ்வேறு மாநிலம், நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். அவர்கள் எளிதாகப் படித்து தெரிந்துகொள்ள உங்கள் ரெஸ்யூம் ஆங்கிலத்தில் இருப்பதே சிறந்தது.''

ஆல் தி பெஸ்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism