Published:Updated:

மத்திய அரசில் 34 வகையான வேலைகள் தயார்! விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

இந்திய அரசின் பல்வேறு துறைகளில், ஐந்து சம்பள நிலைகளில் (Pay Levels) கீழ்க்காணும் 34 வகையான பணியிடங்கள் இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்பட இருக்கின்றன.

இந்திய அரசின்
இந்திய அரசின் ( pixabay )

இந்திய அரசின் பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) இந்திய அரசின் வருமானவரித் துறை, ரயில்வே துறை, உள்துறை, வெளியுறவுத்துறை, பாராளுமன்றத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குழு - ஆ (Group-B) மற்றும் குழு - இ (Group- C) நிலைகளிலான அதிகாரிப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வினை (Combined Graduate Level Examination) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. 2019-ம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பணிகள்:

இந்திய அரசின் பல்வேறு துறைகளில், ஐந்து சம்பள நிலைகளில் (Pay Levels) கீழ்க்காணும் 34 வகையான பணியிடங்கள் இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்பட இருக்கின்றன.

இந்திய அரசின்
இந்திய அரசின்
pixabay

I. சம்பள நிலை – 8 (Pay Level-8 Rs 47600/- to 1,51,100/-):

1. Assistant Audit Officer - Indian Audit & Accounts Department - Group B Gazetted (Non Ministerial)

2. Assistant Accounts Officer - Indian Audit & Accounts Department - Group B Gazetted (Non Ministerial)

II. சம்பள நிலை – 7 (Pay Level-7 Rs 44900/- to 142400/-):

3. Assistant Section Officer - Central Secretariat Service - Group B

4. Assistant Section Officer - Intelligence Bureau - Group B

5. Assistant Section Officer - Ministry of Railway - Group B

6. Assistant Section Officer - Ministry of External Affairs - Group B

7. Assistant Section Officer - AFHQ - Group B

8. Assistant - Other Ministries/ Departments / Organizations - Group B

9. Assistant - Other Ministries/ Departments / Organizations - Group B (ii)

10. Assistant Section Officer - Other Ministries / Departments / Organizations - Group B

11. Inspector of Income Tax - CBDT - Group C

12. Inspector, (Central Excise) - CBIC - Group B

13. Inspector (Preventive Officer) - CBIC - Group B

14. Inspector (Examiner) - CBIC - Group B

15. Assistant Enforcement Officer - Directorate of Enforcement, Department of Revenue - Group B

16. Sub Inspector - Central Bureau of Investigation - Group B

17. Inspector Posts - Department of Post - Group B

18. Inspector - Central Bureau of Narcotics - Group B

III சம்பள நிலை – 6 (Pay Level-6 Rs 35400 to 112400):

19. Assistant - Other Ministries / Departments / Organizations - Group B

20. Assistant / Superintendent - Other Ministries / Departments / Organizations - Group B

21. Divisional Accountant - Offices under C&AG - Group B

22. Sub Inspector - National Investigation Agency (NIA) - Group B

23. Junior Statistical Officer - M/o Statistics & Programme Implementation - Group B

24. Statistical Investigator Grade-II - Registrar General of India - Group B

IV சம்பள நிலை – 5 (Pay Level-5 Rs 29200/- to 92300/-):

25. Auditor - Offices under C&AG - Group C

26. Auditor - Other Ministry/ Departments - Group C

27. Auditor - Offices under CGDA - Group C

28. Accountant - Offices under C&AG - Group C

29. Accountant / Junior Accountant - Other Ministry / Departments - Group C

V சம்பள நிலை – 4 (Pay Level-4 Rs 25500/- to 81100/-):

30. Senior Secretariat Assistant / Upper Division Clerks - Central Govt. Offices / Ministries other than CSCS

cadres - Group C

31. Tax Assistant - CBDT - Group C

32. Tax Assistant - CBIC - Group C

33. Sub-Inspector - Central Bureau of Narcotics - Group C

34. Upper Division Clerks - Dte.Gen Border Road Organisation (MoD) - Group C

கல்வித் தகுதி:

1. Assistant Audit Officer/ Assistant Accounts Officer பணிகளுக்கு ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Chartered Accountant or Cost & Management Accountant or Company Secretary or Masters in Commerce or Masters in Business Studies or Masters in Business Administration (Finance) or Masters in Business Economics படித்திருப்பின், விரும்பத்தக்கக் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

job
job
pixabay
ஏர் இந்தியாவில் இன்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாமா?

2. Junior Statistical Officer பணிக்கு ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 12-ம் வகுப்பில் கணிதம் பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பில் புள்ளியியல் (Statistics) பாடத்தை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

3. Statistical Investigator Grade-II பணிக்கு இளநிலைப் பட்டப்படிப்பில் புள்ளியியல் (Statistics) பாடத்தை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் அல்லது மூன்று ஆண்டுகளும் புள்ளியியல் (Statistics) பாடத்தை முதன்மைப் பாடமாகப் படித்துத் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

4. மற்ற பணிகள் அனைத்துக்கும் ஏதாவதொரு பட்டப்படிப்பு படித்துத் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு 1-1-2020 அன்று (i) 18-27 வயது, (ii) 20-27 வயது, (iii) 20-30 வயது, (iv) 30 வயது வரை (v) 32 வயது வரை என்று பணியிடங்களுக்கேற்ப ஐந்து வகையான வயது வரம்புகள் தரப்பட்டிருக்கின்றன.

ஓபிசி – 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்டி – 5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் என்று வயதுத் தளர்வு உண்டு. முன்னாள் படை வீரருக்கு உரிய வயதுத் தளர்வு அளிக்கப்படும். பிற வயதுத் தளர்வுகள் குறித்து அறியத் தகவல் குறிப்பேட்டைப் பார்க்கலாம். சில பணியிடங்களுக்குத் தேவையான உடற்தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் www.ssc.nic.in எனும் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு 2019 (Combined Graduate Level Examination 2019) தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, முழுமையாகப் படித்து, தேவையானவற்றைத் தயார்செய்து, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 100/- செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் 25-11-2019

job
job
pixabay

தேர்வு முறை:

இந்தத் தேர்வு முறையானது...

1. அடுக்கு- I கணினி அடிப்படையிலான தேர்வு (Tier-I: Computer Based Examination)

2. அடுக்கு- II கணினி அடிப்படையிலான தேர்வு (Tier-I: Computer Based Examination)

3. அடுக்கு- III பேனா மற்றும் தாள் வழியிலான (விளக்கத்தாள்) தேர்வு (Tier-III: Pen and Paper Mode (Descriptive paper)

4. அடுக்கு- IV கணினி வல்லமைத் தேர்வு / தகவல் உள்ளீடுத் திறன் தேர்வு (தேவைப்படும் இடங்களில்) / சான்றிதழ் சரிபார்ப்பு (Tier-IV: Computer Proficiency Test / Data Entry Skill Test (wherever applicable)/ Document Verification)

ஆகிய நான்கு அடுக்குகளாக நடத்தப்பெற்று, தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யப்படுவர். தேர்வுக்கான பாடங்கள், கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றுக்கான மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் போன்றவற்றுக்கு தகவல் குறிப்பேட்டைப் படிக்கலாம்.

தேர்வு மையங்கள்:

இந்தத் தேர்வு, இந்தியா முழுவதும் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 129 நகரங்களில் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் தெற்கு மண்டலமாக இருக்கிறது. இம்மண்டலத்தில் 21 நகரங்களில் தேர்வு மையங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் என்று 7 நகரங்களும், புதுச்சேரியும் இடம்பெற்றிருக்கின்றன.

அடுக்கு- I கணினி அடிப்படையிலான தேர்வு 2-3-2020 முதல் 11-3-2020 வரையிலான நாள்களில் நடைபெறும்.

அடுக்கு- II கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் அடுக்கு- III பேனா மற்றும் தாள் வழியிலானது (விளக்கத்தாள்) தேர்வு 22-6-2020 முதல் 25-6-2020 வரையிலான நாள்களில் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் நுழைவுச்சீட்டில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட மையத்தில் தேர்வை எழுத வேண்டும்.

job
job
pixabay
ரயில்வே, கப்பற்படை, அரசு இரும்பாலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க ரெடியா?

கூடுதல் தகவல்கள்:

இந்தத் தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய, பணியாளர்கள் தேர்வாணையத்தின் www.ssc.nic.in இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் வெளியிட்டிருக்கும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வினை, தகவல் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் அல்லது சென்னை, கல்லூரி சாலை, டிபிஐ வளாகத்திலிருக்கும் தெற்கு மண்டலத்துக்கான பணியாளர்கள் தேர்வாணைய அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.