Published:Updated:

+2, பட்டம் படித்தவர்களுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் (Ministry of Human Resource Development) கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்டுவரும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலைவாய்ப்பு.

மத்திய
மத்திய ( pixabay )

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் (Ministry of Human Resource Development) கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்டுவரும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (Central Board of Secondary Education) காலியாக இருக்கும் பல்வேறு நிலைகளிலான 396 அலுவலகப் பணிகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பணியிட விவரங்கள்

1. உதவிச் செயலாளர் (Assistant Secretary) - 14

2. உதவிச் செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் -IT) - 7

3. பகுப்பாய்வாளர் (Analyst -IT) – 14

4. இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் – 8

5. முதுநிலை உதவியாளர் (Senior Assistant) – 60

6. சுருக்கெழுத்தர் (Stenographer) – 25

7. கணக்காளர் (Accountant) – 6

8. இளநிலை உதவியாளர் (Junior Assistant) – 204

9. இளநிலைக் கணக்காளர் (Junior Accountant) - 19

மத்திய
மத்திய
pixabay

இவற்றில் எஸ்சி – 49, எஸ்டி - 25, ஓபிசி - 93, ஈடபிள்யூஎஸ் – 33, பொது - 157 என்று இடஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. தவிர, மாற்றுத்திறனாளிகள்–18, முன்னாள் படை வீரர்கள் – 31 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

1. உதவிச் செயலாளர் (Assistant Secretary) பணிக்கு ஏதாவதொரு இளநிலைப் பட்டம். அத்துடன், மத்திய / மாநில அரசு அல்லது மத்திய/மாநில அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். அனுபவம் மற்றும் அந்நிலையில் அவர்களுக்கான சம்பள விவரம் போன்றவை தகவல் குறிப்பேட்டில் தரப்பட்டிருக்கின்றன. பொது நிர்வாகம், மேலாண்மைப் பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் சிறப்பாகப் பணியாற்றுதல் விரும்பத்தக்க கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

2. உதவி செயலாளர் (தகவல் தொழில்நுட்பம்) (Assistant Secretary (IT)) பணிக்கு B.E. / B.Tech (IT ) / M.Sc.(IT) / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனுபவம் மற்றும் அந்நிலையில் அவர்களுக்கான சம்பள விவரம் போன்றவை தகவல் குறிப்பேட்டில் தரப்பட்டிருக்கின்றன.

3. பகுப்பாய்வாளர் (தகவல் தொழில்நுட்பம்) (Analyst (IT)) பணிக்கு B.E. / B.Tech (IT ) / M.Sc.(IT) / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனுபவம் மற்றும் அந்நிலையில் அவர்களுக்கான சம்பள விவரம் போன்றவை தகவல் குறிப்பேட்டில் தரப்பட்டிருக்கின்றன.

job
job
pixabay

4. இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் (Junior Hindi Translator) பணிக்கு ஆங்கிலம் அல்லது இந்தி பாடத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிற கல்வி விவரங்களுக்கு, தகவல் குறிப்பேட்டைப் பார்க்கலாம்.

5. முதுநிலை உதவியாளர் (Senior Assistant) பணிக்கு ஏதாவதொரு பட்டப்படிப்பு மற்றும் நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் (40w.p.m) தட்டச்சு செய்யும் திறன் அல்லது அதற்கு இணையாக கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் அலுவலகப் பணிகள், இன்டர்நெட், HTML வெப்டிசைன் தெரிந்திருக்க வேண்டும்.

6. சுருக்கெழுத்தர் (Stenographer) பணிக்கு ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் சுருக்கெழுத்தில் (Dictation) 10 நிமிடங்களுக்கு 80 w.p.m மற்றும் பார்த்தெழுதுதல் (Transcription) ஆங்கிலத்தில் 50mts, இந்தியில் 65mts என்று கணினியில் செய்திட வேண்டும்.

7. கணக்காளர் (Accountant) பணிக்கு வணிகம் (Commerce) / கணக்கியல் (Accountancy) பாடங்களுடனான ஏதாவதொரு பட்டப்படிப்பு தேர்ச்சி. கணக்கு மற்றும் தணிக்கை (Accounts and Audit) பணியில் இரண்டு வருட அனுபவம் விரும்பத்தக்கது.

முப்படை ராணுவத்தில் காலியாக இருக்கும் 418 அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு! #JobOpportunities

8. இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு மற்றும் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் (35w.p.m) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் அல்லது நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் (30w.p.m) இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் அல்லது அதற்கு இணையாக கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

9. இளநிலைக் கணக்காளர் (Junior Accountant) பணிக்கு வணிகம் (Commerce) / கணக்கியல் (Accountancy) பாடங்களுடனான ஏதாவதொரு பட்டப்படிப்பு தேர்ச்சி. கணக்கு மற்றும் தணிக்கை (Accounts and Audit) பணியில் ஒரு வருட அனுபவம் விரும்பத்தக்கது.

வயது வரம்பு:

உதவி செயலாளர் மற்றும் உதவி செயலாளர் (தகவல் தொழில்நுட்பம்) பணிகளுக்கு 40 வயது, பகுப்பாய்வாளர் (தகவல் தொழில்நுட்பம்) பணிக்கு 35 வயது, இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் மற்றும் முதுநிலை உதவியாளர் பணிக்கு 30 வயது, சுருக்கெழுத்தர் பணிக்கு 18-27 வயது, கணக்காளர் பணிக்கு 30 வயது, இளநிலை உதவியாளர் பணிக்கு 18- 27 வயது, இளநிலை கணக்காளர் பணிக்கு 27 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி – 5, ஓபிசி – 3, மாற்றுத்திறனாளிகள் (பொது) – 10. மாற்றுத்திறனாளிகள் (ஓபிசி) – 13, மாற்றுத்திறனாளிகள் (எஸ்சி/எஸ்டி) – 15 முன்னாள் படை வீரர்கள் – A பிரிவு பணிகளுக்கு 5, B மற்றும் C பிரிவு பணிகளுக்கு 3, பெண்கள் – 10 ஆண்டுகள் என்று வயதில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-12-2019
job
job
pixabay

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் www.cbse.nic.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பொது, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினர் குழு அ (Group A) பணிகளுக்கு ரூ. 1,500, குழு ஆ&இ (Group B&C) பணிகளுக்கு ரூ. 800/- என்று ஒவ்வொரு பணிக்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-12-2019.

தேர்வு முறை:

அகில இந்திய அளவிலான எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் இந்தப் பணிகளுக்குத் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவர். ஒவ்வொரு பணிக்கும் எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், எழுத்துத் தேர்வு மற்றும் அதற்கான மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் போன்றவை தகவல் குறிப்பேட்டில் தனித்தனியாகத் தரப்பட்டிருக்கின்றன.

விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்பட்டால், இந்தியா முழுவதுமுள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஏழு முதன்மை அலுவலகங்களின் கீழுள்ள ஏதாவதொரு அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். இந்த ஏழு அலுவலகங்களில், மூன்று அலுவலகங்களை விண்ணப்பத்தில் முன்பே தேர்வுசெய்து குறிப்பிட முடியும்.

ஏர் இந்தியாவில் இன்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாமா?

கூடுதல் தகவல்கள்:

இந்தத் தேர்வுகுறித்த கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் www.cbse.nic.in இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பொது விசாரணை அலுவலகத் தொலைபேசி 011-22509256, 22509257, 22509258, 22509259 எண்களில் கேட்டுப் பெறலாம்.