Published:Updated:

தென் மத்திய ரயில்வே, மத்திய ஆயுர்வேத அறிவியல் நிறுவன வேலை வாய்ப்பு - பட்டதாரிகள், 10th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் காலியாக இருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கான 45 வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வேலை
வேலை ( pixabay )

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் -  45 வேலை பழகுநர் பணிகள்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் காலியாக இருக்கும் 45 வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ராஜஸ்தான் மாநிலம், கேத்ரி நகரில் இருக்கும் கேத்ரி காப்பர் காம்ப்ளக்ஸ், ஜார்கண்ட் மாநிலம், காட்சிலாவில் இருக்கும் இந்தியன் காப்பர் காம்ப்ளக்ஸ், மத்தியப்பிரதேசம் மாநிலம், மலஞ்சிகாண்ட்டில் இருக்கும் மலஞ்சிகாண்ட் காப்பர் புராஜக்ட் ஆகிய நிறுவனங்களில், Mining – 16, Electrical – 11, Mechanical – 10, Civil – 4, Metallurgy – 2, Chemical – 2 என்று மொத்தம் 45 பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை பழகுநர் பணியிடங்கள் இருக்கின்றன.

இந்தப் பணியிடங்களில் பொது – 29, ஓபிசி – 9, எஸ்சி – 7 என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்!
இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 1-12-2019.
வேலை
வேலை
pixabay

கல்வித் தகுதி:

தொடர்புடைய பாடப்பிரிவுகளில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட 4 ஆண்டுக்கால அளவிலான இளநிலைப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த நிறுவனத்தின் www.hindustancopper.com/Page/Career_New எனும் இணையப் பக்கத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 1-12-2019.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு தேர்வுப் பட்டியல் ஒன்று வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு, சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில், ஒரு வருட கால அளவிலான வேலை பழகுநர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவர். வேலை பழகுநருக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை பழகுநர் உதவித்தொகை ரூபாய் 9000/- மாதந்தோறும் வழங்கப்படும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு... https://www.hindustancopper.com/Home எனும் இணையதளத்துக்குச் செல்லலாம்.

தென் மத்திய ரயில்வே - 4103 வேலை பழகுநர் பணிகள்

செகந்திரபாத்தைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் தென் மத்திய ரயில்வேயில் 27 பணிமனைகள் இருக்கின்றன. இப்பணிமனைகளில் தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கான 4103 வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

railway
railway
pixabay

பணியிட விவரம்:

ஏசி மெக்கானிக் – 249, கார்பெண்டர் – 16, டீசல் மெக்கானிக் – 640, எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் – 18, எலக்ட்ரீசியன் – 871, எலக்ட்ரானிக் மெக்கானிக் – 102, பிட்டர் – 1460, மெசினிஸ்ட் – 74, எம்எம்டபிள்யூ – 24, எம்எம்டிஎம் – 12, பெயின்டர் – 40, வெல்டர் - 597

இந்தப் பணியிடங்களில், பொது – 1689, ஓபிசி – 1101, எஸ்சி – 607, எஸ்டி – 302, ஈடபிள்யூஎஸ் - 404 என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண்ணுடன், தொழிற்பயிற்சி நிலையங்களில் NCVT/SCVT அங்கீகாரம்பெற்ற தொடர்புடைய தொழிற்பிரிவில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

8-12-2019 அன்று 15 வயதுக்குக் குறையாமலும், 24 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்சி / எஸ்டி - 5, ஓபிசி – 3, மாற்றுத்திறனாளிகள் – 10, முன்னாள் படை வீரர்கள் – 10 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த நிறுவனத்தின் https://scr.indianrailways.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பச் சேவைக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்!
இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 8-12-2019.
railway
railway
pixabay

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். இந்திய ரயில்வே வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை பழகுநருக்கான உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு- https://scr.indianrailways.gov.in எனும் இணையதளத்துக்குச் செல்லலாம்.

மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வு நிறுவனம் - எழுத்தர் பணிகள்

இந்திய ஆயுஷ் அமைச்சகத்தின் (Ministry of AYUSH) கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்படும் மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் காலியாக இருக்கும் 66 எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு:

1.Upper Division Clerk – 14

பொது – 8, ஓபிசி – 3, ஈடபிள்யூஎஸ் – 1, எஸ்சி – 1, எஸ்டி – 1

2.Lower Division Clerk – 52

பொது – 27, ஓபிசி – 11, ஈடபிள்யூஎஸ் – 5, எஸ்சி – 6, எஸ்டி – 3

job
job
pixabay

கல்வித்தகுதி:

மேல்நிலை எழுத்தர் பணிக்கு ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கீழ்நிலை எழுத்தர் பணிக்கு 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு தேர்ச்சி மற்றும் கணினியில் ஆங்கிலத்தில் 35 w.p.m அல்லது இந்தியில் 30 w.p.m வேகத்துடனான தட்டச்சுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

8-12-2019 அன்று 15 வயதுக்குக் குறையாமலும், 24 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்சி / எஸ்டி - 5 ஓபிசி – 3, மாற்றுத்திறனாளிகள் – 10, முன்னாள் படை வீரர்கள் – 10 ஆண்டுகள் என்று வயதுத் தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த நிறுவனத்தின் ayush.gov.in, ccrhindia.nic.in எனும் இணையதளங்களில் ஏதாவதொன்றின் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பச் சேவைக் கட்டணம் ரூ.100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர், பெண்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்!
இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19-12-2019.

தேர்வு முறை:

மேல்நிலை எழுத்தர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு வழியிலும், கீழ்நிலை எழுத்தர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சுத் தேர்வு வழியிலும் தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யப்படுவர். டெல்லி, அவுரங்காபாத், சென்னை, கொல்கத்தா, கவுகாத்தி, சண்டிகர் ஆகிய 7 நகரங்களில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு: www.ccras.nic.in

job
job
pixabay
ஏர் இந்தியாவில் இன்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாமா?

மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை- 300 தலைமைக் காவலர் பணிகள்

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs) கீழாகச் செயல்பட்டு வரும் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் 300 தலைமைக் காவலர் – பொதுப்பணிகள் (Head Constable - General Duty) பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

பணியிட விவரங்கள்

1.தடகள விளையாட்டுகள் – ஆண்கள் – 44, பெண்கள் – 47

2.குத்துச்சண்டை – ஆண்கள் – 7, பெண்கள் – 4

3.கூடைப்பந்து – ஆண்கள் – 8

4.சீருடற்பயிற்சி (Gymnastics) – ஆண்கள் – 4

5.கால்பந்து – ஆண்கள் – 6

6.வளைகோற் பந்தாட்டம் (Hockey) – ஆண்கள் – 12

7.கைப்பந்து – ஆண்கள் – 9

8.ஜூடோ – ஆண்கள் – 10, பெண்கள் – 7

9.கபடி – ஆண்கள் – 8, பெண்கள் – 12

10.துப்பாக்கி சுடுதல் - துமுக்கி (Rifle) - ஆண்கள் – 16, பெண்கள் – 3

துப்பாக்கி சுடுதல் - கைத்துப்பாக்கி (Pistol) - ஆண்கள் – 7, பெண்கள் – 6

11.நீச்சல் – ஆண்கள் – 14

12.கைப்பந்தாட்டம் – ஆண்கள் – 8

13.எடை தூக்கல் – ஆண்கள் – 17, பெண்கள் – 15

14.மல்யுத்தம் – ஆண்கள் – 20

15.தேக்வாண்டோ – ஆண்கள் – 16

என்று 15 விளையாட்டுப் பிரிவுகளில் ஆண்கள் – 206, பெண்கள் – 94 என்று மொத்தம் 300 இடங்கள் இருக்கின்றன.

job
job
pixabay
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1234 செவிலியர் பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க! #EmploymentNews
கடைசி நாள்!
விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 24-12-2019.

கல்வித் தகுதி:

பிளஸ் டூ தேர்ச்சிபெற்றிருப்பதுடன், தொடர்புடைய விளையாட்டுகளில் மாநில / தேசிய / பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். உரிய உடற்தகுதி, மருத்துவத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1-8-2019 அன்று 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2-8-1996 முதல் 1-8-2001 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். எஸ்சி / எஸ்டி - 5 ஓபிசி – 3 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு.

அரசுக் கல்லூரியில் பேராசிரியராகணுமா... 2,331 பணியிடங்கள் காலி... உடனே அப்ளை பண்ணுங்க!

எப்படி விண்ணப்பிப்பது?

மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் https://cisfrectt.in எனும் இணையதளத்துக்குச் சென்று, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்துடனான தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்யலாம். விளையாட்டுகள் வாரியாக விண்ணப்பக் கட்டணம் ரூ.100-க்கான அஞ்சல் ஆணையில் அவர்கள் கொடுத்திருக்கும் பெயர், ஊர் குறிப்பிட்டுப் பெற்று இணைத்துத் தகவல் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விளையாட்டுகளுக்கான மாதிரிப் போட்டிகள் (Trial Test in Sports Events), திறன் தேர்வு (Proficiency Test), நிறைவுத் தேர்வு (Final Selection) மற்றும் மருத்துவத் தேர்வு (Medical Examination) வழியாகத் தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யப்படுவர்.

கூடுதல் விவரங்களுக்கு: https://cisfrectt.in