Published:Updated:

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கொச்சின் கப்பல் நிறுவனம், யுரேனியம் கழகத்தில் வேலை!

காவல்துறை, மத்திய படை, கொச்சி கப்பல் நிறுவனம், யுரேனியம் கழகம் என பல வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை.

அறியாத துறைகள்... அதிகமான வேலைவாய்ப்புகள்!
அறியாத துறைகள்... அதிகமான வேலைவாய்ப்புகள்!

வேலைவாய்ப்புகள்

டெல்லி காவல்துறை (Delhi Police), மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces) மற்றும் மத்தியத் தொழிற் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force) ஆகியவற்றில் காலியாக இருக்கும் 3364 சார்பு ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள்

1. சார்பு ஆய்வாளர் (டெல்லி காவல்துறை) – 872 (ஆண்கள் – 616, பெண்கள் – 256) பொது – 438, ஓபிசி – 244, எஸ்சி – 129, எஸ்டி – 61.

2. சார்பு ஆய்வாளர் (மத்திய ஆயுதக் காவல் படைகள்) - 1292 (CRPF – 374, BSF – 343, ITBP – 278, CISF – 88, SSB – 279) பொது – 724, ஓபிசி – 304, எஸ்சி – 187, எஸ்டி – 77, முன்னாள் இராணுவத்தினர் - 129.

3. உதவி சார்பு ஆய்வாளர் (மத்தியத் தொழிற்பாதுகாப்புப் படை) – 1200 (ஆண்கள் – 1080, பெண்கள் – 120) பொது – 609, ஓபிசி – 323, எஸ்சி – 178, எஸ்டி – 90, முன்னாள் இராணுவத்தினர் - 120. இவற்றில் ஆண், பெண், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு வகுப்பு வாரியான இடஒதுக்கீடு உண்டு. தகவல் குறிப்பேட்டில் விரிவாகப் பார்க்கலாம்.

Armed Forces
Armed Forces

கல்வித்தகுதி

ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியை 1-1-2020 அன்று பெற்றிருக்கவேண்டும். வயது வரம்பு (1-1-2020 அன்று) 20 வயதுக்குக் குறையாமலும் 25 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்கவேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு இந்திய அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வயதுத் தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (Staff Selection Commission) https://ssc.nic.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ.100. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணமில்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16-10-2019.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசிநாள்: 18-10-2019.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, உடல் தரச் சோதனை, உடல் தாங்கும் திறன் சோதனை, விரிவான மருத்துவச் சோதனை ஆகியவற்றைக் கொண்டு தேர்வு செய்யப்படுவர்.

சார்பு ஆய்வாளர் (டெல்லி காவல்துறை) மற்றும் சார்பு ஆய்வாளர் (மத்திய ஆயுதக் காவல் படைகள்) பணிக்கு ரூ 35,400 – 1,12,400 எனும் நிலை 6 (Level 6) என்றும், உதவி சார்பு ஆய்வாளர் (மத்தியத் தொழிற் பாதுகாப்புப் படை) பணிக்கு ரூ 29,200 – 92,300 எனும் நிலை 5 (Level 5) என்றும் கொண்ட சம்பளம் ஏற்ற முறையில் (Scale of Pay) சம்பளம் வழங்கப்படும்

மேலும் கூடுதல் தகவல்களுக்கு https://ssc.nic.in எனும் இந்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணைய இணையதளத்திற்குச் செல்லலாம்.

இந்திய யுரேனியக் கழக நிறுவனத்தில் வேலை பழகுநர் பணிகள்

ஜார்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டம், ஜடுகுடாவில் அமைந்திருக்கும் இந்திய யுரேனியக் கழக நிறுவனத்தில் (Uranium Corporation of India Limited - UCIL) பல்வேறு தொழிற்பிரிவில் 247 வேலைபழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள்

1. பிட்டர் – 80

2. எலக்ட்ரீசியன் – 80

3. வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்) – 35

4. டர்னர் /மெசினிஷ்ட் – 15

5. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் – 10

6. டீசல் மெக்கானிக்/ மோட்டார் வாகன மெக்கானிக் – 10

7. கார்பென்டர் – 10

8. பிளம்பர் - 7

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி

பத்தாம் வகுப்புத் தேர்வில் பொது மற்றும் ஓபிசி பிரிவினர் குறைந்தது 50% மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தேசியத் தொழிற்பயிற்சிக் குழுவால் (National Council for Vocational Training) அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடர்புடைய தொழிற்பிரிவில் படித்து 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றுத் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (30-9-2019 அன்று) 18 வயதுக்குக் குறையாமலும் 25 வயதுக்கு அதிகமாகமலும் இருக்கவேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு இந்திய அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வயது தளர்வு அளிக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்நிறுவனத்தின் www.uraniumcorp.in/job.html எனும் இணையப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல் குறிப்புடனான அறிவிப்பைத் தரவிறக்கம் செய்து, அந்த அறிவிப்பின் கீழ்ப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை நிரப்பி, "Dy.General Manager [Inst./Pers. &IRs], Uranium Corporation of India Limited, PO : Jaduguda Mines, Dist : East Singhbhum, Jharkhand – 832102" எனும் முகவரிக்கு விரைவு அஞ்சல் (Speed Post) மூலம் அனுப்பி வைக்கவேண்டும். விரைவு அஞ்சல்வழியில் விண்ணப்பங்கள் சென்றடைய கடைசிநாள்: 18-10-2019.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

தேர்வு முறை

10-ம்வகுப்பு மற்றும் தொழிற்பயிற்சி நிலையச் சான்றிதழில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு வேலை பழகுநர் தேர்வு செய்யப்படுவர். மாதந்தோறும் இந்திய வேலை பழகுநர் சட்டத்தின் கீழான உதவித்தொகை வழங்கப்படும். வேலை பழகுநர் பயிற்சி பெற்றவர்கள் மீண்டும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கக்கூடாது. தேர்வு செய்யப்படுபவர்கள் தங்குமிடத்தினைச் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://www.uraniumcorp.in/job.html எனும் இணையதளத்திற்குச் செல்லலாம்.

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள்

இந்திய அரசின் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் (Cochin Shipyard Limited) காலியாக இருக்கும் 132 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட இருக்கின்றன.

பணியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு

1.Sanitary - cum - Health Inspector – 1 (பொது -1)

2.Safety Assistants- 72 (பொது – 40, ஓபிசி – 18, எஸ்சி – 6, எஸ்டி – 1, ஈடபிள்யூஎஸ் – 7)

3.Fireman – 59 (பொது – 36, ஓபிசி – 12, எஸ்சி – 6, ஈடபிள்யூஎஸ் – 5)

என்று மொத்தம் 132 பணியிடங்கள் இருக்கின்றன.

கல்வித்தகுதி

துப்புரவு மற்றும் சுகாதார ஆய்வாளர் (Sanitary - cum - Health Inspector) பணியிடத்திற்கு +2 மற்றும் சுகாதார இயக்குநரகங்கள் அல்லது கேரள அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கிய 2 வருட கால அளவிலான சுகாதார ஆய்வாளர் பட்டயப்படிப்பு மற்றும் கேரள மருத்துவத்துறை சார்ந்த பணிகள் குழுவில் (Kerala Paramedical Council) பதிவு செய்திருத்தல் வேண்டும்.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

பாதுகாப்பு உதவியாளர்கள் (Safety Assistants) பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் இந்திய அரசு / மாநில அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் / அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்கள் வழங்கிய ஒரு வருட கால அளவிலான பாதுகாப்பு / தீயணைப்புப் பட்டயச் சான்றிதழ். குறைந்தது ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தீயணைப்பாளர் (Fireman) பணியிடத்திற்கு மாநிலத் தீயணைப்புத் துறை / பொதுத்துறை நிறுவனங்கள் / அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்கள் வழங்கிய குறைந்தது ஆறு மாதகால அளவிலான தீயணைப்புப் பயிற்சிச் சான்றிதழ். மலையாள மொழி தெரிந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்தது ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

(18-10-2019 அன்று) 30 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். ஓபிசி – 3, எஸ்சி – 5, மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் என்று வயதுத் தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்நிறுவனத்தின் www.cochinshipyard.com எனும் இணையதளத்தில் இடம் பெற்றிருக்கும் “Careers” எனும் பக்கத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100/- செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவுமில்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 18-10-2019.

தேர்வு முறை:

எழுத்துத்தேர்வு, செய்முறைத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு போன்றவைகளின் வழியாக இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர். துப்புரவு மற்றும் சுகாதார ஆய்வாளர் (Sanitary - cum - Health Inspector) மற்றும் பாதுகாப்பு உதவியாளர்கள் (Safety Assistants) பணிகளுக்கு மாதத்திற்கு தொகுப்பூதியமாக ரூ 18,400/- வழங்கப்படும். கூடுதல் பணி நேரத்திற்கு மாதம் ரூ. 4500/-க்கு அதிகமாகாமல் வழங்கப்படும். தீயணைப்பாளர் (Fireman) பணிக்கு மாதத்திற்கு தொகுப்பூதியமாக ரூ 17,400/- வழங்கப்படும். கூடுதல் பணி நேரத்திற்கு மாதம் ரூ. 4200/-க்கு அதிகமாகாமல் வழங்கப்படும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.cochinshipyard.com எனும் இந்நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்லலாம்.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

THDCIL நிறுவனத்தில் வேலை பழகுநர் பணிகள்

இந்திய அரசின் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றாக இருந்துவரும் இந்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசின் கூட்டு நிறுவனமான THDCIL (முன்பு Tehri Hydro Development Corporation Limited என்றழைக்கப்பட்டு வந்தது) நிறுவனத்தில் பல்வேறு தொழிற்பிரிவில் 100 வேலைபழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள்

1. எலக்ட்ரீசியன் – 15

2. பிட்டர் – 8

3. எலக்ட்ரானிக் மெக்கானிக் – 4

4. வயர்மேன் - 8

5. வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்) – 3

6. புட் புரொடக்சன்ஸ் – 3

7. புட் & பேவரிஜ் சர்வீஸ் - 5

8. செக்ரட்டரியல் அசிஸ்டன்ட் – 20

9. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் & புரோகிராமிங் அசிஸ்டன்ட் - 20

10. டீசல் மெக்கானிக் – 3

11. மோட்டார் வாகன மெக்கானிக் – 3

12. எர்த் மூவிங் மெசினரி மெக்கானிக் - 2

13. மெக்கானிக் (ரிப்பேர் & மெயின்டனென்ஸ் ஹெவி வெஹிகிள்ஸ்) – 2

14. மெக்கானிக் (ரிப்பேர் & மெயின்டனென்ஸ் ஹெவி வெஹிகிள்ஸ்) – 2 என்று மொத்தம் 100 வேலை பழகுநர் பணிகள் இருக்கின்றன.

கல்வித்தகுதி

சில தொழிற்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பிலும், சில தொழிற்பிரிவுகளுக்கு எட்டாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடர்புடைய தொழிற்பிரிவில் படித்து தேர்ச்சியும் பெற்றிருக்கவேண்டும். உணவுத் தயாரிப்புத் தொழில்களுக்கு அதுதொடர்பான உணவு தயாரிப்புத் தொழிற்சான்றிதழும் பெற்றிருக்கவேண்டும். 2016, 2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு

(30-9-2019 அன்று) 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு இந்திய அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வயதுத்தளர்வு அளிக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய அரசின் வேலை பழகுநர் பயிற்சிகளுக்கான https://www.apprenticeship.gov.in/ எனும் இணைதளத்தில் பதிவு செய்துகொண்டு, அதன்பிறகு, இந்நிறுவனத்தின் https://thdc.co.in தளத்தில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைத் தரவிறக்கம் செய்து, அந்த அறிவிப்பின் கீழ்ப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை நிரப்பி, "Sr. Manager (P&A), THDC India Limited, Bhagirathi Puram, Tehri Garhwal, Tehri – 249124, Uttarakhand" எனும் முகவரிக்கு விரைவு அஞ்சல் (Speed Post) மூலம் அனுப்பிவைக்க வேண்டும். விரைவு அஞ்சல் வழியில் விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 18-10-2019.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

தேர்வுமுறை

பத்தாம் வகுப்பு மதிப்பெண் (30%) மற்றும் தொழிற்பயிற்சி நிலைய மதிப்பெண் (70%) எனக் கொண்டு வேலை பழகுநர் தேர்வு செய்யப்படுவர். மாதந்தோறும் இந்திய வேலை பழகுநர் சட்டத்தின் கீழான உதவித்தொகை வழங்கப்படும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு https://thdc.co.in எனும் இந்நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்லலாம்.