Published:Updated:

மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் முதல் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வரை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான தொகுப்பு.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிகள்

பீகார் மாநிலம், கிழக்கு சாம்பரான் மற்றும் மேற்கு சாம்பரான் மாவட்டங்களிலிருக்கும் இந்துஸ்தான் பெட்ரோலியக் கழக நிறுவனத்துக்குச் (Hindustan Petroleum Corporation Limited) சொந்தமான இரு உயிரி எரிபொருள் நிறுவனங்களில் (HPCL Biofuels Limited) காலியாக இருக்கும் 105 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வேலை
வேலை

பணியிடங்கள்:

1. மேலாண்மைப் (Management) பணியிடங்கள் (16 வகையான பணிகள்) – 25

2. மேலாண்மையல்லாத பிற (Non – Management) பணியிடங்கள் (18 வகையான பணிகள்) – 44

3. பருவகாலப் (Seasonal) பணியிடங்கள் (13 வகையான பணிகள்) - 36

கல்வித் தகுதி

பணிக்கான கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் போன்ற விவரங்கள் தனித்தனியாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

வயது வரம்பு

(1-9-2019 அன்று) 18 வயதுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். மேலாண்மைப் பணிகளுக்கு 57 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். மேலாண்மை அல்லாத பிற பணிகளுக்கு 55 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

எப்படி விண்ணப்பிப்பது?

பணிகளுக்கேற்ற விண்ணப்பப் படிவத்தைத் தயாரித்து, அத்துடன் சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ் நகல்களுடன் உறையின் மேற்பகுதியில் `Application for the post of ----------------’ என்று பணிப்பெயரைக் குறிப்பிட்டு, `HPCL Biofuels Ltd., House No.271, Road No. 3E, New Patliputra Colony, Patna – 800013' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் அல்லது recruitment@hpclbiofuels.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு பொருள் (Subject) எனுமிடத்தில் `Post Applied for -------------------’ என்று பணியின் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அஞ்சல்வழியில் சென்றடைய / மின்னஞ்சல்வழியாக அனுப்பக் கடைசி நாள்: 7-10-2019.

தேர்வு முறை

மதிப்பெண் மற்றும் பணி அனுபவ அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு, மருத்துவ உடற்தகுதி ஆய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும்.

கூடுதல் தகவல்களுக்கு... http://www.hpclbiofuels.co.in/ எனும் இணையதளத்தைப் பார்க்கலாம்.  

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை பழகுநர் பணிகள்

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி அருகிலுள்ள கோர்வா-விலிருக்கும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் (Hindustan Aeronautics Limited) வான் பயண மின்னணுவியல் (Avionic Division) பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வேலை பழகுநர்

1.பொறியியல் பட்டதாரி வேலை பழகுநர் (Graduate Engineering Apprentices - Electronics / Mechanical / Electrical / Civil / Computer Science / Information Technology)

2.தொழில்நுட்பப் பணியாளர் வேலை பழகுநர் (Diploma Engineering Apprentices - Electronics / Mechanical / Electrical / Civil / Computer Science / Information Technology)

3. தொழில்நுட்பப் பணியாளர் (அலுவலக மேலாண்மை மற்றும் செயலாண்மைப் பயிற்சி) வேலை பழகுநர் (Diploma MOM & SP Apprentices)

பட்டப்படிப்பு
பட்டப்படிப்பு

கல்வித் தகுதி

1.தொடர்புடைய பொறியியல் பிரிவில் நான்கு வருடகால அளவிலான பி.இ / பி.டெக் (B.E / B.Tech) பட்டம்.

2. தொடர்புடைய பொறியியல் பிரிவில் மூன்று வருடகால அளவிலான பட்டயம் (Diploma).

3.அலுவலக மேலாண்மை மற்றும் செயலாண்மைப் பயிற்சிப் பிரிவில் இரண்டு ஆண்டுக்கால அளவிலான பட்டயம்.

வயது வரம்பு (9-10-2019 அன்று) 26 வயதுக்கு அதிகமாகாமல் இருக்கவேண்டும்.

ஓபிசி – 3, எஸ்சி – 5, மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் (எஸ்சி, எஸ்டி - 15, ஓபிசி - 13 ஆண்டுகள்) வயது தளர்வு உண்டு.  

எப்படி விண்ணப்பிப்பது?

www.mhrdnats.gov.in எனும் இணையதளத்தில் பதிவுசெய்து பதிவு எண்ணைப் பெற வேண்டும். பிறகு, இந்த நிறுவனத்தின் https://hal-india.co.in/ எனும் இணையப் பக்கத்திலிருக்கும் எக்ஸெல் கோப்பு (Excel File) விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து, பிழையில்லாமல் நிரப்பி tti.korwa@hal-india.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். மின்னஞ்சல்வழியாக விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 9-10-2019.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்களின் கல்விக்கான பட்டம் / பட்டயப் படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வேலை பழகுநர் பணி வழங்கப்படும். வேலை பழகுநர் சட்டத்தின்படி உதவித்தொகை வழங்கப்படும்.

பட்டப்படிப்பு
பட்டப்படிப்பு

கூடுதல் தகவல்களுக்கு... https://hal-india.co.in/Career_Details எனும் இணையப் பக்கத்திலிருக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்.  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் (ISRO) அறிவியலாளர் / பொறியாளர் பணிகள்

இந்திய விண்வெளித் துறையின் (Department of Space) கீழ் செயல்பட்டுவரும் `இஸ்ரோ’ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் (Indian Space Research Organization - ISRO) காலியாக இருக்கும் அறிவியலாளர் / பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இடஒதுக்கீடு

அறிவியலாளர் / பொறியாளர் (Scientist / Engineer) – 21 இடங்கள்

1.கட்டுமானவியல் (Civil) – 11 இடங்கள்

பொது – 5 ஓபிசி – 5 ஈடபிள்யூஎஸ் – 1,

2.மின்னியல் (Electrical) – 5 இடங்கள் பொது – 3 ஓபிசி – 1 எஸ்டி – 1,

3.குளிர்பதனம் மற்றும் குளிர்சாதன வசதி (Refrigeration & Air Conditioning) – 4 இடங்கள் பொது – 3 ஓபிசி - 1 4.கட்டடக்கலை (Architecture) பொது 1

வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு

வயது வரம்பு

(14-10-2019 அன்று) 35 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். ஓபிசி – 3, எஸ்சி, எஸ்டி – 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு உரிய வயதுத் தளர்வு உண்டு.

தகுதிகள்

மேற்காணும் பணிகளில் முதல் மூன்று பணிகளுக்குத் தொடர்புடைய பொறியியல் பிரிவில் பி.இ / பி.டெக் பட்டம், நான்காவது பணிக்கு கட்டடக்கலைப் பாடத்தில் (B.Arch) பட்டம். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், குறைந்தது 65% (புள்ளிக்கணக்கில் 6.84/10) மொத்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நான்காவது பணிக்குக் கூடுதலாகக் கட்டடக்கலைக் குழுவில் (Council of Architecture) பதிவுசெய்திருக்க வேண்டும்.    

எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் தேசியத் தொழில் சேவைகளுக்கான (National Career Services (NCS)) www.ncs.gov.in இணையதளத்தில் பதிவுசெய்து, இந்தப் பணிகளுக்கான தகுதி நிபந்தனைகளை நிறைவு செய்வதாக இருப்பின், இந்த நிறுவனத்தின் www.isro.gov.in/ எனும் இணையதளம்வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணமில்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 14-10-2019.

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு (Written Test), செயல்திறன் மற்றும் நேர்காணல் வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். பணியமர்த்தப்படுபவர்களுக்கு மாதத்துக்கு ரூ.56,100/- அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு... www.isro.gov.in எனும் இணையதளத்தைப் பார்க்கவும்.  

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் பயிற்சியாளர் பணிகள்

மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் (Madras Fertilizers Limited) காலியாக இருக்கும் பல்வேறு பிரிவுகளில் பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இடஒதுக்கீடு

1.பொறியியல் பட்டதாரிப் பயிற்சியாளர் / மேலாண்மைப் பயிற்சியாளர் (Graduate Engineering Trainees / Management Trainees) – 31 (சம்பளம்: ரூ 16,400 – 40,500) பொது – 21 ஓபிசி – 8 எஸ்சி – 1 ஈடபிள்யூஎஸ் – 1

2.தொழில்நுட்ப உதவியாளர் பயிற்சியாளர் / ஆய்வுக்கூட ஆய்வாளர் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் (Technical Assistant Trainees (TAT) / Lab Analyst Trainees (LAT) & Administrative Personnel) – 62 (சம்பளம்: ரூ.9,830 – 3% - 30,000 & ரூ.9,270 – 3% - 30,000) பொது – 46 ஓபிசி – 2 எஸ்சி – 14 (இந்தப் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன)

வயது வரம்பு

1.பொறியியல் பட்டதாரிப் பயிற்சியாளர் / மேலாண்மைப் பயிற்சியாளர் - 28 வயது.

2. தொழில்நுட்ப உதவியாளர் பயிற்சியாளர் / ஆய்வுக்கூட ஆய்வாளர் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் – 25 வயது.

ஓபிசி – 3, எஸ்சி, எஸ்டி – 5 மாற்றுத்திறனாளிகள் – 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு. தகுதிகள் மேற்காணும் பணிகளில் முதல் பிரிவில் 8 வகையான பணிகளும், இரண்டாம் பிரிவில் 10 வகையான பணிகளும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பணிக்கும் தேவையான கல்வித் தகுதி குறித்த விவரங்கள் தனித்தனியாக அறிவிப்புக் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எப்படி விண்ணப்பிப்பது?

www.madrasfert.co.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பொறியியல் பட்டதாரிப் பயிற்சியாளர் / மேலாண்மைப் பயிற்சியாளர் பணிகளுக்கு ரூ.500/-, தொழில்நுட்ப உதவியாளர் பயிற்சியாளர் / ஆய்வுக்கூட ஆய்வாளர் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகப் பணியாளர் பணிகளுக்கு ரூ.300/- என்று பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணமில்லை. விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16-10-2019.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

தேர்வு முறை

இணையவழியிலான எழுத்துத் தேர்வு (Online Test) மற்றும் வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை (Pre-Employment Medical Test) மேற்காணும் இருவகையான பணிகளில் முதல் பிரிவுக்கு ஓராண்டு, இரண்டாம் பிரிவுக்கு இரு ஆண்டுகள் பயிற்சிக் காலமாக இருக்கும். பயிற்சியைச் சிறப்பாக நிறைவு செய்பவர்களுக்கு நிரந்தரப் பணியிடம் வழங்கப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு... http://madrasfert.co.in/wp-content/uploads/2019/09/recruitnew3.pdf எனும் இணையப் பக்கத்திலிருக்கும் தகவல் குறிப்பேட்டைப் பார்க்கவும்.  

ரைட்ஸ் (RITES) நிறுவனத்தில் தள ஆய்வாளர் மற்றும் கணினி உதவி வடிவமைப்பாளர் பணிகள்

இந்திய அரசின் மினிரத்னா நிறுவனங்களில் ஒன்றான RITES Ltd., (முன்பு Rail India Technical and Economic Service என்று அழைக்கப்பட்டு வந்தது) நிறுவனம், இந்தியன் ரயில்வே துறையின் (Indian Railways) கீழ் 1974-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் தள ஆய்வாளர் (Site Inspector) மற்றும் கணினி உதவி வடிவமைப்பாளர் (CAD Operator) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள்

1. தள ஆய்வாளர் (குடிமையியல்) (Site Inspector (Civil)) – 25 (சம்பளம்: ரூ.24,000 – 90,000).

2. தள ஆய்வாளர் (மின்னியல் & இயந்திரவியல்) (Site Inspector (E&M) – 7 (சம்பளம்: ரூ.24,000 – 90,000).

3. கணினி உதவி வடிவமைப்பாளர் (CAD Operator) – 15 (சம்பளம்: ரூ.22,000 – 83,000)

Jobs
Jobs

இடஒதுக்கீடு

பொது – 26 ஓபிசி – 9 எஸ்சி – 3 எஸ்டி – 5 ஈடபிள்யூஎஸ் – 4 வயது வரம்பு (1-9-2019) அன்று 40 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

தகுதிகள்

1.தள ஆய்வாளர் (குடிமையியல்) (Site Inspector (Civil)) குடிமையியல் பொறியியலில் பட்டயம் (Diploma in Civil Engineering)

2. தள ஆய்வாளர் (மின்னியல் & இயந்திரவியல்) (Site Inspector (E&M) மின்னியல் / மின்னியல் & மின்னணுவியல் / இயந்திரவியல் / உற்பத்தியியல் / தொழிற்சாலைகள் / தானுந்து (Diploma in Electrical/Electrical & Electronics/Mechanical/ Production/ Industrial/Automobile Engineering) பொறியியல் பட்டயத்தில் தேர்ச்சி. மேற்காணும் இரு பணியிடங்களுக்கும் பொது மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினர் குறைந்தது 60% மதிப்பெண்ணுடனும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50% மதிப்பெண்ணுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் பணி அனுபவம். அதில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தொடர்புடைய பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கணினி உதவி வடிவமைப்பாளர் (CAD Operator)

ஏதாவது ஒரு பொறியியல் பட்டயம் மற்றும் தகுதியுடைய கல்வி நிறுவனத்திலிருந்து குறைந்தது 3 மாதங்கள்கொண்ட AUTOCAD சான்றிதழ் படிப்பு.

எப்படி விண்ணப்பிப்பது?

www.rites.com எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300/- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100/- என விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து, அதற்குத் தேவையான நகல்களை இணைத்து அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கக் கடைசி நாள்:10-10-2019.

விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் சென்றடைய கடைசி நாள்: 21-10-2019.

creativity
creativity

தேர்வு முறை

சென்னை மற்றும் குர்கான் ஆகிய இடங்களில் மட்டும் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

கூடுதல் தகவல்களுக்கு... www.rites.com எனும் இணைய முகவரியைப் பார்க்கவும்.