Published:Updated:

சோஷியல் மீடியா மூலம் வேலைதேடுவது எப்படி? - சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி - 2

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி
பிரீமியம் ஸ்டோரி
சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று!

சோஷியல் மீடியா மூலம் வேலைதேடுவது எப்படி? - சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி - 2

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று!

Published:Updated:
சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி
பிரீமியம் ஸ்டோரி
சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி
மோகன லட்சுமி
மோகன லட்சுமி

மதுரையைச் சேர்ந்த தோழி அவர். பி.காம் முடித்துவிட்டு, வேலைக்கு முயற்சி செய்தார். எங்கும் வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஆன்லைன் வேலைவாய்ப்புத் தளங்கள் பற்றி அவருக்குத் தெரியவர, ஆன்லைனில் புரொஃபைலை அப்டேட் செய்தார். அடுத்தடுத்த வாரங்களில், சில நிறுவனங் களிடமிருந்து இன்டர்வியூவுக்கான அழைப்பு வந்தது. மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் நல்ல வேலையில் சேர்ந்தார். இது தெரிந்திருந்தால் வேலைதேடி பல மாதங்கள் வீணாகியிருக் காதே என்று நொந்துகொண்டார். சோஷியல் மீடியாக்களை பயன்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றிய தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த கிட்ஸ்ப்ரூனர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியை வகிக்கும் மோகன லட்சுமி.

“லிங்க்டுஇன், நாக்ரி என நிறைய ஆன்லைன் வேலைவாய்ப்புத் தளங்கள் இருக்கின்றன. இவற்றை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தினால் உட்கார்ந்த இடத்தி லிருந்தே வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும்.

ஆன்லைனில் வேலைவாய்ப்புகளைத் தேடும் முன் நீங்கள் செய்ய வேண்டியவை...

* உங்களை பற்றிய தெளிவான புரொஃபஷனல் புரொஃபைல் ஒன்றைப் பதிவிட வேண்டும். அதில் படிப்பு, அனுபவம், உங்களின் கூடுதல் திறன், எந்த ஊர்களில் பணிபுரிய விருப்பம் போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

* புரொஃபஷனல் போட்டோ ஒன்றைப் பதிவிடுவது அவசியம்.

* எந்தத் துறையில் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

* சமூக ஊடகங்களில் உங்களுடன் எத்தனை நபர்கள் இணைப்பில் இருக்கிறார்கள் என்பதைவிட, எப்படிப்பட்ட நபர்கள் இணைப்பில் இருக்கிறார்கள் என்பதே முக்கியம். எனவே நண்பர்களுடன் இணைப்பில் இருப்பதைவிட, உங்களின் பணி சார்ந்த நண்பர், குழுத் தலைவர், மேலாளர், ஹெச்.ஆர் போன்றோருடன் இணைப்பில் இருப்பது அவசியம். இதனால் உங்களின் புரொஃபைல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஷேர் ஆகும். வேலைவாய்ப்பும் சுலபமாகும்.

* சமூக வலைதளங்களில் உங்களின் புரொஃபைலை எடுக்கும் நிறுவனங்கள், வேலை வாய்ப்புக்கான சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பொழுதுபோக்கு சமூக வலைதளங்களிலும் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வாய்ப்பு உண்டு. எனவே சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், தகவல்கள் பகிர்வதில் எப்போதும் கவனமாக இருங்கள்.

* வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில், உங்கள் பணி சார்ந்த குழுக்களில் இணைந்திருங்கள். இதன் மூலம், உங்கள் துறையில் உள்ள வேலைவாய்ப்பைத் தெரிந்துகொள்ள முடியும்.

* நீங்கள் ஏற்கெனவே பார்த்த வேலைகள் அல்லது புராஜெக்ட்டுகளில், உங்களின் மென்ட்டாராக இருந்தவர்களிடம் உங்கள் பணி பற்றிய ரெவ்யூக்கள் வாங்கி ஷேர் செய்யுங்கள். அவை உங்களுக்குக் கூடுதல் ப்ளஸ்.

* நீங்கள் எந்தெந்தத் துறைகளில் பணிபுரிய விரும்புகிறீர்களோ, அந்தத் துறைசார் நிறுவனங்களின் சமூக வலைதளப் பக்கங்களை அடிக்கடி பார்வையிட்டு, பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்களா என்பதை செக் செய்து, ரெஸ்யூம் அனுப்பலாம்.

* உங்களின் சாட் பாக்ஸ் மற்றும் மெயிலில் கவனமாக இருங்கள். ஒரு நிறுவனம் உங்களைப் பணிக்கு அழைக்கிறது என்றால் அந்த வேலையில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும், உரிய காரணத்துடன் நன்றி சொல்லி பதில் அளியுங்கள். இது உங்களின் மீதான மதிப்பை உயர்த்தும்.

செய்யக்கூடாதவை...

* தேவையற்றதைப் பகிராதீர்கள். பதின்வயதில் விவரம் தெரியாமல் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் தகவல்களை ஹைடு செய்து விடுவது நல்லது.

* எதிர்மறை விமர்சனங்கள், தனிமனித தாக்குதல்களில் ஈடுபடாதீர்கள்.

* ஒரு சமூக வலைதளத்தில், ஒரே பெயரில் இரண்டு, மூன்று அக்கவுன்ட்டுகளை உருவாக்காதீர்கள்.

*****

சோஷியல் மீடியா மூலம் வேலைதேடுவது எப்படி? - சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி - 2

* எத்தனையோ ஆன்லைன் வேலைவாய்ப்புத் தளங்கள் இருந்தாலும், லிங்க்டுஇன் இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்தும் வேலைவாய்ப்புத் தளமாக மாறியுள்ளது. லிங்க்டுஇன்னில் புதிய கணக்கு தொடங்கி அதைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்...

* கூகுள் ப்ளே ஸ்டோரில் முதலில் linkedin ஆப் டௌன்லோடு செய்துகொள்ளவும்.

* உங்கள் பெயர் கொடுத்து என்ட்ரியை தொடங்கவும்.

* நீங்கள் வேலை தேடுபவரா அல்லது கொடுக்கும் நிறுவனமா என்ற தகவல் கேட்கப்படும். அதில் வேலை தேடுபவர் என்பதைத் தேர்வு செய்யவும்.

* அடுத்து மெயில் ஐ.டி அல்லது தொலைபேசி எண்ணைப் பகிரவும்.

* நீங்கள் பணிபுரியும் துறை, அனுபவம், உங்களின் புகைப்படம் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.

* உங்களுக்கு என்ன மாதிரியான வேலை வாய்ப்பு வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும்.

* நீங்கள் உள்ளீடு செய்த தகவலின் அடிப்படையில், ‘Prepare for your job search' என்ற பகுதியில் 5-க்கு நீங்கள் எத்தனை மதிப்பெண் எடுத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். 5-க்கு 3 மதிப்பெண் எனில் கூடுதல் தகவல்களைச் சேர்க்க வேண்டும். இது linkedin தளத்திலேயே டாப்அப் ஆகும்.

* உங்கள் துறை சார்ந்த நபர்களை linkedin ஆப் உங்களுக்குப் பரிந்துரை செய்யும். நீங்கள் விரும்பும் நபர்களுடன் உங்களை கனெக்ட் செய்து கொள்ளவும்.

* தினமும் நோட்டிஃபிகேஷனை செக் செய்யவும்.

ஆல் தி பெஸ்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism