Published:Updated:

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 3 - செகண்ட் இன்னிங்ஸிலும் சக்சஸ் காட்டலாம்...

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று
பிரீமியம் ஸ்டோரி
வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 3 - செகண்ட் இன்னிங்ஸிலும் சக்சஸ் காட்டலாம்...

சுய முன்னேற்றத்துக்கான வழிகாட்டி

Published:Updated:
வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று
பிரீமியம் ஸ்டோரி
வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று

ஐ.டி துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கீதா, பிரசவத்துக்காக வேலையில் பிரேக் எடுத்தார். குழந்தை பிறந்ததும் மீண்டும் பணியில் சேரலாம் என்று நினைத்தவருக்கு, குழந்தை வளர்ப்பிலும் கமிட்மென்ட்ஸிலும் சில ஆண்டுகள் கடந்தன. 34 வயதில் மீண்டும் கரியரைத் தொடர நினைத்தவருக்கு அதற்குத் தயாராவதில் சவால்கள் காத்திருந்தன. `கரியரில் பிரேக் என்பது பெண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாதது என்றாலும் அதைக் கடந்து, எந்த வயதிலும், எந்தத் துறையிலும் சாதிக்கலாம்' என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் உமா. அதற்கான வழிகளையும் காட்டுகிறார்...

உமா
உமா

செய்ய வேண்டியவை...

* இடைவெளிக்குப் பிறகு வேலைக்குச் செல்ல நினைக்கும் பெண்கள் தயக்கத்தை உடைத்து, தன்னம்பிக்கையுடன் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்.

* வயது, குடும்ப பொறுப்புகள் இவற்றையெல்லாம் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

* வேலை தேடுவதற்கு முன்பே உடலாலும், மனதாலும் தயாராகுங்கள். வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த நாள்களில் நேர நிர்வாகத்தை மறந்திருப்பீர்கள். அதை மீண்டும் முறைப்படுத்துங்கள்.

* பிரேக்குக்கு முன் வேலை பார்த்த துறை அல்லது இப்போது நீங்கள் சேர விரும்பும் துறை எதுவானாலும் அதில் அப்டேட் ஆகுங்கள். தேவைப்பட்டால் அது தொடர்பான பயிற்சிகளை எடுக்கலாம்.

* நீங்கள் ஏற்கெனவே பணிபுரிந்த துறையில், வேலைவாய்ப்பு இல்லை எனில், உங்கள் திறமைக்கேற்ப வேறு எந்தத் துறையில் வாய்ப்பு இருக்கிறது என்று தேடுங்கள்.

வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 3 - செகண்ட் இன்னிங்ஸிலும் சக்சஸ் காட்டலாம்...

* வேலைவாய்ப்பு தளங்கள் மூலம் மட்டும் வேலை தேடாமல், நிறுவனங்களின் இணைய பக்கங்களைத் தொடர்பு கொண்டும் வாய்ப்பு தேடலாம் அல்லது நண்பர்கள் உதவியை நாடலாம்.

* வேலையிலிருந்து பிரேக் எடுக்கும்போது, மொத்தமாக அந்தத் துறையில் இருந்து ஒதுங்காமல், பார்ட் டைம் பணிகள் செய்யலாம். இதன் மூலம் நீங்கள் டிரெண்டிங் விஷயங்களில் பின் தங்காமலிருப்பீர்கள்.

* செகண்ட் இன்னிங்ஸை தொடங்கு பவர்கள் ஹேர் கட், ஆடைத் தேர்வு என தோற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உங்களை கம்பீரமாகவும் தன்னம்பிக்கையுடன் வைத்திருக்க இது அவசியம்.

* புதிய ரெஸ்யூம் ஒன்றை தயார் செய்ய வேண்டும். நீங்கள் எந்த வேலைக்கு அப்ளை செய்கிறீர்களோ அது சார்ந்த ரெஸ்யூமாக அது இருக்க வேண்டும்.

* இன்டர்வியூவுக்கு செல்லும்போது உடல் மொழி, மொழித்திறன் ஆகியவற்றில் குறைந்தபட்ச பயிற்சிகளுடனாவது செல்லுங்கள்.

* நிறுவனங்கள் உங்களின் ஆட்டிட்யூடை சோதிப்பார்கள். எதையும் கற்றுக்கொண்டு, செயல்படுத்த முடியும் என்பதை உங்களின் ஆட்டிட்யூடாக வெளிபடுத்துங்கள்.

செய்யக்கூடாதவை...

* இன்டர்வியூவில் தேர்வாகவில்லை என்றால் சோர்ந்து போகாதீர்கள்.

* ‘வேலை வாங்கித் தருகிறோம்’ என்ற விளம்பரங் களின் உண்மைத் தன்மையை அறியாமல், யாரிடமும் பணத்தைக் கொடுத்து ஏமாறாதீர்கள்.

* வேலைக்குச் சேரும்முன்பே, குழந்தையையும் குடும்பத்தாரையும் நீங்கள் இல்லாத சூழலை சமாளிக்கப் பழக்கிவிடுங்கள். பணியில் சேர்ந்த பிறகு, குடும்ப சூழலை காரணம் சொல்லி, அலுவலகத்தில் அடிக்கடி விடுப்பு அல்லது பர்மிஷன் கேட்பதைத் தவிருங்கள்.

* அலுவலக நேரத்தில் பர்னல் விஷயங்களை நினைத்துக் குழம்ப வேண்டாம். அநாவசிய போன், சோஷியல் மீடியா போன்றவற்றைத் தள்ளி வையுங்கள்.

ஆல் தி பெஸ்ட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism