Published:Updated:

இ.பி.எப் ஆபீஸில் 421 வேலை ரெடி... விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

தொழிலாளர்
தொழிலாளர் ( pixabay )

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக இருக்கும் 421 செயலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி (Enforcement Officer / Accounts Officer) பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கைத் தேர்வு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் (Ministry of Labour & Employment) கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (Employees Provident Fund Organisation) காலியாக இருக்கும் 421 செயலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி (Enforcement Officer / Accounts Officer) பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கைத் தேர்வு அறிவிப்பினை, இந்திய அரசின் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) வெளியிட்டுள்ளது.

தொழிலாளர்
தொழிலாளர்
pixabay

காலியிடங்கள்:

இந்தியா முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகங்களில் காலியாக இருக்கும் செயலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி (Enforcement Officer / Accounts Officer) பணியிடங்கள் 421 காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்கள் பொது – 168, எஸ்சி – 62, எஸ்டி – 33, ஓபிசி – 116, ஈடபிள்யூஎஸ் – 42 என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் அல்லது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அதற்கு இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணியிடத்துக்கு விரும்பக்கூடிய தகுதிகளாக...

`எஸ்பிஐ வேலைவாய்ப்பு; 8,000 காலியிடங்கள்!' -விண்ணப்பிக்க கடைசித் தேதி ஜன.26 #JobReminder

1. இளநிலைச் சட்டப்படிப்பு, முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு, நிறுவனச் செயலர், கணக்கியல் படிப்புகள் (Bachelor’s degree in Law / Integrated Five years Degree in Law / Masters in Business Administration / Post Graduate Diploma in Management / Company Secretary / Chartered Accountants / Cost and Management Accountant) படித்திருத்தல்.

2. அரசு / தனியார் நிறுவனங்களில் நிர்வாகம் (Administration), கணக்குகள் (Accounts) மற்றும் சட்டம் (Legal) தொடர்பான பணிகளில் இரண்டு வருடங்கள் பணியாற்றியிருத்தல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி – 5 ஆண்டுகள், ஓபிசி – 3 ஆண்டுகள் என்று வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31-1-2020.
job
job
pixabay

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்திய அரசின் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://www.upsconline.nic.in/ எனும் இணையதளத்தில் `Application (ORA) for the posts of Enforcement Officer (EO) / Accounts Officer (AO) in Employee Provident Fund Organisation' என்பதை சொடுக்கி, அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளைப் பின்பற்றி, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 25/- செலுத்த வேண்டும். எஸ்சி. எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31-1-2020.

தேர்வுமுறை:

விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் முதலில் வேலைக்குச் சேர்ப்பதற்கான தேர்வு நடத்தப்படும். தேர்வில் வெற்றியடைந்தவர்களிலிருந்து குறுகிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்குப் நேர்காணல் நடத்தப்படும். வேலைக்கான தேர்வு மற்றும் நேர்காணல் 75:25 எனும் விகிதத்தில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, பணிக்குரியவர்கள் தேர்வுசெய்யப்படுவர்.

இந்தப் பணிக்குத் தேர்வுசெய்யப்படுபவர்கள் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் பணியமர்த்தப்படுவர். பணிக்குத் தகுதிகாண் பருவமாக (Probation Period) இரண்டு ஆண்டுக்காலம் இருக்கும். இரண்டாண்டு காலத்துக்குப் பின்பு நிரந்தரப் பணியிடத்தில் பணியமர்த்தப்படுவர். இந்திய அரசுப் பணிகளில் இந்தப் பணிகளுக்கு எட்டாம் நிலையிலான (Level -8, Entry Pay Rs. 47600/-) சம்பள ஏற்ற முறையில் சம்பளம் வழங்கப்படும்.

தமிழக அரசின் உயர் பணிகளுக்கான தேர்வு - விண்ணப்பிக்கத் தயாரா பட்டதாரிகளே?!

தேர்வு மையங்கள்:

வருகிற 4-10-2020 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் வேலைக்கான தேர்வுக்கு சென்னை மற்றும் மதுரை உட்பட இந்தியா முழுவதும் 45 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு பேனா மற்றும் தாள் வழித் தேர்வாக இருக்கும். இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் இந்தப் பணிகளுக்கான தகவல் குறிப்பேட்டில் தரப்பட்டுள்ளன.

கூடுதல் தகவல்கள்:

தேர்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://www.upsconline.nic.in/ எனும் இணையதளத்தினைப் பார்வையிடலாம்.

பின் செல்ல