Published:Updated:

ரயில்வே, கப்பற்படை, அரசு இரும்பாலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க ரெடியா?

இந்திய எஃகு நிறுவனத்துக்குச் (Steel Authority of India Limited) சொந்தமான உருக்காலைகளில் ஒன்றான பிலாய் எஃகு ஆலையில் (Bhilai Steel Plant) காலியாக இருக்கும் பல்வேறு நிலைகளிலான 296 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Bhilai
Bhilai

பிலாய் இரும்பு ஆலையில் பல்வேறு நிலைகளுக்கான பணிகள்

Steel Authority of India Limited-க்குச் சொந்தமான உருக்காலைகளில் ஒன்றான Bhilai Steel Plant-ல் காலியாக இருக்கும் பல்வேறு நிலைகளிலான 296 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிட விவரம்

1. Operator cum Technician (Trainee) (S-3) - 123

2. Attendant cum Technician (Trainee/Boiler Operator) (S-1) - 53

3. Mining Foreman (S-3) - 14

4. Mining Mate (S-1) - 30

5. Surveyor (S-3) - 4

6. Jr. Staff Nurse (Trainee) (S-3) - 21

7. Pharmacist (Trainee) (S-3) - 7

8. Sub Fire Station Officer (Trainee) (S-3) - 8

9. Fireman cum Fire Engine Driver (Trainee) (S-1) - 36

இந்தப் பணியிடங்களில்...

பொது – 131

ஈடபிள்யூஎஸ் – 29

ஓபிசி – 14

எஸ்சி - 40

எஸ்டி – 82

என்று இட ஒதுக்கீடு இடங்கள் இருக்கின்றன.

job
job

மேற்காணும் ஒவ்வொரு பணியிடத்துக்குமான கல்வித் தகுதி குறித்த விவரங்கள், தகவல் குறிப்பேட்டில் இடம்பெற்றிருக்கின்றன. அனைத்துப் பணியிடங்களுக்கும் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி – 5, ஓபிசி – 3, மாற்றுத்திறனாளிகள் - 10 ஆண்டுகள் என்று வயது தளர்வுகளும் உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய எஃகு நிறுவனத்தின் www.sail.co.in எனும் இணையதளத்தில் ‘Careers’ எனும் பக்கத்துக்குச் சென்று இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அனைத்துப் பிரிவினர்களும் S-3 பணிகளுக்கு ரூபாய் 250, S-1 பணிகளுக்கு ரூபாய் 150 விண்ணப்பக் கட்டணம். எஸ்சி, எஸ்டி, பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15-11-2019

தேர்வு முறை:

கூடுதல் தகவல்களுக்கு...

www.sail.co.in எனும் இணையதளத்துக்குச் செல்லலாம்.

இந்திய ரயில்வே டீசல் இன்ஜின் பணிமனையில் வேலை பழகுநர் பணிகள்

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள இந்திய ரயில்வே டீசல் இன்ஜின் பணிமனையில் (Diesel Locomotive Works) 374 வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தவர்களுக்காக (ITI) பிட்டர் – 107, கார்பெண்டர் – 3, பெயின்டர் (பொது) – 7, மெசினிஸ்ட் – 67, வெல்டர் (கேஸ்&எலெக்ட்ரிக்) – 45, எலெக்ட்ரீசியன் – 71 என்று ஆறு தொழிற்பிரிவுகளில் 300 வேலை பழகுநர் பணியிடங்கள் இருக்கின்றன. இந்தப் பணியிடங்களில் பொது – 151, ஓபிசி – 81, எஸ்சி – 45, எஸ்டி – 22 என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

job
job
pixabay

மேலும், தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்காதவர்களுக்கான பிரிவில் பிட்டர் – 30, மெசினிஸ்ட் – 15, வெல்டர் (கேஸ்-எலெக்ட்ரிக்) – 11, எலெக்ட்ரீசியன் – 18 என்று நான்கு தொழிற்பிரிவுகளில் 74 வேலை பழகுநர் பணியிடங்கள் இருக்கின்றன.

இந்தப் பணியிடங்களில் பொது – 37, ஓபிசி – 20, எஸ்சி – 12, எஸ்டி – 5 என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

கல்வித் தகுதி:

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கான வேலை பழகுநருக்கு, பத்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன், தொடர்புடைய தொழிற்பிரிவில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சி நிலையப் பயிற்சி பெறாதவர்களுக்கான வேலை பழகுநருக்கு, பத்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 15 வயதுக்குக் குறையாமலும், 24 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். தொழிற்பயிற்சி பெறாதவர்கள் 15 வயதுக்குக் குறையாமலும், 22 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி - 5 ஓபிசி–3, மாற்றுத்திறனாளிகள்–10 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த நிறுவனத்தின் www.dlw.indianrailways.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பச் சேவைக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21-11-2019

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தேர்வு செய்யப்படுவர். இந்திய ரயில்வே வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை பழகுநருக்கான உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு... www.dlw.indianrailways.gov.in

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் சிறப்பு அதிகாரி பணிகள்

இந்தியா முழுவதும் 4,650 கிளைகள் கொண்ட இந்தியப் பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் (Central Bank of India) 74 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

job
job
pixabay

பணியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு:

1. Information Technology (JMGS I) - 26

2. Security Officer (MMGS III) - 1

3. Security Officer (JMGS I) - 9

4. Risk Manager (MMGS III) - 6

5. Risk Manager (MMGS II) - 6

6. Financial Analyst / Credit Officer (MMGS II) - 10

7. Economist (MMGS II) - 1

8. CDO / Chief Data Scientist (SMGS IV) - 1

9. Data Analyst (MMGS III) - 3

10. Analytics - Senior Manager (MMGS III) - 2

11. Data Engineer (MMGS III) - 2

12. Data Architect (MMGS III) - 2

13. CA / Credit Officer (MMGS III) – 5

இந்தப் பணியிடங்களில்...

பொது – 31, ஈடபிள்யூஎஸ் – 8, ஓபிசி – 21, எஸ்சி -10, எஸ்டி – 4 என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

கல்வித் தகுதி:

மேற்காணும் ஒவ்வொரு பணியிடத்துக்குமான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு குறித்த விவரங்கள் தகவல் குறிப்பேட்டில் இடம்பெற்றிருக்கின்றன. எஸ்சி, எஸ்டி – 5, ஓபிசி – 3 ஆண்டுகள் என்று வயதுத் தளர்வுகளும் உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த வங்கியின் www.centralbankofindia.co.in எனும் இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அனைத்துப் பிரிவினர்களும் விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 500 மற்றும் தகவல் கட்டணம் ரூபாய் 50 என ரூபாய் 550 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தகவல் கட்டணம் ரூபாய் 50 மட்டும் செலுத்த வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21-11-2019

தேர்வு முறை:

இணைய வழியிலான எழுத்துத் தேர்வு முறையில் இந்தப் பணிகளுக்குத் தேர்வுசெய்யப்படுவர்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு... www.centralbankofindia.co.in

job
job
pixabay

கப்பல் படையின் போர்க் கப்பல் சீர் செய்யும் தளத்தில்

வேலை பழகுநர் பணிகள்

கர்நாடகா மாநிலம், கார்வாரில் அமைந்திருக்கும் கப்பல் படையின் போர்க் கப்பல் சீர்செய்யும் தளத்தில் (Naval Ship Repair Yard, Naval Base, Karwar) 145 வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பழகுநர் இடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு

கப்பல் தச்சர் (Shipwright) – 6, எலெக்ட்ரீசியன் – 12, எலெக்ட்ரானிக் மெக்கானிக் – 15, பிட்டர் – 4, தகவல் தொழில்நுட்பப் பராமரிப்பு – 4, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் – 4, மெசினிஸ்ட் – 2, கப்பல் எந்திர பிட்டர் – 6, கட்டடப் பராமரிப்புப் பணியாளர் – 3, டீசல் மெக்கானிக் – 11, மெசின் டூல் மெக்கானிக் – 3, மோட்டார் வெகிக்கிள் மெக்கானிக் – 12, ஏசி & ரெப்ரிஜிரேசன் மெக்கானிக் – 10, பெயின்டர் – 4, பைப் பிட்டர் – 10, டெய்லர் – 3, டர்னர் – 3 சீட் மெட்டல் ஒர்க்கர் – 6, வெல்டர் (கேஸ்&எலெக்ட்ரிக்) – 12 என்று ஒரு வருட காலப் பயிற்சிக்கு 130 இடங்களும், கப்பலில் பாய் முதலியவற்றைக் கட்டக்கூடிய Rigger – 5, கப்பல் தச்சர் (இரும்பு) – 10 என இரண்டு ஆண்டுக்காலப் பயிற்சிக்கு 15 இடங்கள் என்று மொத்தம் 145 இடங்கள் இருக்கின்றன.

இந்தப் பணியிடங்களில்

பொது – 61, ஈடபிள்யூஎஸ் – 14, ஓபிசி – 39, எஸ்சி – 21, எஸ்டி – 10 என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்களும், தொழிற்பயிற்சி நிலையங்களில் தொடர்புடைய தொழிற்பிரிவில் 65% மதிப்பெண்களுக்குக் குறையாமலும் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Rigger பழகுநருக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்திருந்தால் போதுமானது. இருப்பினும், பிட்டர் தொழிற்பிரிவு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு (1-4-2020)

14 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி / எஸ்டி - 5 ஓபிசி – 3, மாற்றுத்திறனாளிகள் – 10, ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு. உயரம் 150 செ.மீ, எடை 45 கிலோ, மார்பு விரிவு 5 செ.மீ, கண் 6/6 முதல் 6/9 வரை உடற்தகுதியும் இருக்க வேண்டும்.

job
job
pixabay

எப்படி விண்ணப்பிப்பது?

www.apprenticeship.gov.in எனும் இணையதளத்துக்குச் சென்று, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் செயல்பாட்டினைப் பின்பற்றி, வேலை பழகுநர் பணியைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், அந்த விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து `The Officer-in-Charge, Dockyard Apprentice School, NSRY, Naval Base PO, Karwar, Karnataka – 581 308' என்கிற முகவரிக்கு விரைவு / பதிவு அஞ்சலில் 1-12-2019க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் 2020-ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில், கார்வார் போர்க் கப்பல் சீர் செய்யும் தளத்தில் நடைபெறும் எழுத்து மற்றும் தொழில்திறன் தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்படுவர். இதற்கான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் / பேருந்துக் கட்டணம் அளிக்கப்படும். 3 அல்லது 4 நாள்கள் கார்வாரில் தங்குவதற்கான ஏற்பாடுகளைத் தாங்களாகவே செய்துகொள்ள வேண்டும்.

இந்தப் பழகுநர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வேலை பழகுநருக்கான உதவித்தொகையாக ரூபாய் 9,000/- மாதந்தோறும் வழங்கப்படும்.

ஏர் இந்தியாவில் இன்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாமா?