Published:Updated:

இன்ஜினியரிங், விமானப் பராமரிப்பு... இன்னும் ஏராளமான வேலை வாய்ப்புத் தகவல்கள்! #JobVacancy

இந்தியா முழுவதும் பல நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்பு பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

Job Vacancy
Job Vacancy

பிளாஸ்மா ஆய்வு நிறுவனத்தில் வேலைப் பழகுநர்

குஜராத் மாநிலம், காந்திநகரில் இருக்கும் பிளாஸ்மா ஆய்வு நிறுவனத்தில் (Institute for Plasma Research) பொறியியல் பட்டதாரி (Engineering Graduate) மற்றும் தொழில்நுட்பப் பணியாளர் (Technician) போன்ற 18 வேலைப்பழகுநர் (Apprenticeship) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வேலைப்பழகுநர் பணியிடங்கள்

பொறியியல் பட்டதாரிகளுக்கு... (Engineering Graduate) - 10

(Computer Engineering – 1,

Electrical Engineering – 3,

Electronics & Telecommunication – 2,

Mechanical Engineering – 3,

Instrumentation & Control Engineering – 1)

தொழில்நுட்ப உதவியாளர் - 8

(Civil Engineering – 1, Electrical Engineering – 2, Electronics & Telecommunication – 2, Mechanical Engineering – 2, Instrumentation & Control Engineering – 1).

வயது வரம்பு: 26

ஓபிசி – 3, எஸ்சி, எஸ்டி – 5, மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு.

Job
Job

கல்வித் தகுதி

பொறியியல் பட்டதாரி (Engineering Graduate) வேலைப்பழகுநருக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் பொறியியல் பட்டப் படிப்பிலும் (B.E / B.Tech), தொழில்நுட்பவியலாளர் வேலைப்பழகுநருக்கு பொறியியல் பட்டயப் படிப்பிலும் (Diploma Enginerring) முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action எனும் இணையப் பக்கத்தில் பதிவு செய்துகொண்டு, இந்த நிறுவனத்தின் http://www.ipr.res.in/advertisements.html எனும் இணையப் பக்கத்துக்குச் சென்று, விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 25.9.2019.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

கூடுதல் தகவல்களுக்கு...

http://www.ipr.res.in/advertisements.html எனும் இணைய முகவரியைப் பார்க்கலாம்.

ஏர் இந்தியா இன்ஜினீயரிங் நிறுவனத்தில் உதவி மேற்பார்வையாளர் (Assistant Supervisors) பணி

விமானப் பராமரிப்பு (Aircraft Maintenance), பழுதுபார்த்தல் மற்றும் முழுமையாகச் சோதனை செய்து செப்பனிடுதல் (Repair and Overhaul) உள்ளிட்ட பணிகளைச் செய்துவருவது, இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா இன்ஜினீயரிங் நிறுவனம் (Air India Engineering Services Ltd). இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கும் 170 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் ஒதுக்கீடு

பொதுப்பிரிவினர் - 72

எஸ்சி – 23

எஸ்டி -15

ஓபிசி – 43

ஈடபிள்யூஎஸ் – 17

வயது வரம்பு (1.8.2019 அன்று)

பொதுப்பிரிவினர் – 33

ஓபிசி – 36

எஸ்சி, எஸ்டி – 38 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Job
Job

கல்வித் தகுதிகள்

அ) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவதொரு பட்டம் மற்றும் ஆறுமாத காலத்துக்குக் குறைவில்லாத கணினிப் பாடப்பிரிவு ஒன்றில் பட்டயம் / சான்றிதழ் அல்லது BCA / B.Sc IT / Graduate IT பட்டம் அத்துடன் ஏதாவது ஒரு நிறுவனத்தில் தரவு உள்ளீடு (Data Entry) / கணினிப் பயன்பாடு (Computer Application) அல்லது கணினி தொடர்பான பணிகளில் குறைந்தது ஒரு வருட அனுபவம்.

(அல்லது)

ஆ) விமானப் பராமரிப்புப் பொறியியல் பட்டயம் (Diploma in Aircraft Maintenance Engineering) மற்றும் விமானப் போக்குவரத்துத் தொடர்புடைய மென்பொருள் பயன்பாட்டில் குறைந்தது ஒரு வருட அனுபவம்.

எப்படி விண்ணப்பிப்பது?

http://aiesl.assistantsupervisor.parakh.online/ எனும் இணையப் பக்கத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

செயலாக்கக் கட்டணம் (Processing Fee)

பொதுப் பிரிவினர், ஈடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.1,000/-

எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் படைவீரர் ரூ.500/ .

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 28-9-2019.

தேர்வு முறை

இணையவழியிலான திறன் தேர்வு (Online Skill Test) வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் தகவல்களுக்கு...

http://www.airindia.in/careers.html எனும் இணையதளத்தைப் பார்க்கவும்.

ராணுவப் பள்ளி ஆசிரியர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்... பணி வாய்ப்புகள்! #JobVacancy

இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (Oil India Limited) முதுநிலை அலுவலர் பணிகள்

இந்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது இந்திய எண்ணெய் நிறுவனம். இதில் காலியாக இருக்கும் முதுநிலை அலுவலர் (Senior Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் ஒதுக்கீடு

முதுநிலை அலுவலர் பணிகளில்

புவியியல் (Geology) – 13

புவி இயற்பியல் (Geophysics) – 8

ரிசர்வாயர் (Reservoir) – 6

டிரில்லிங் (Drilling) – 8

உற்பத்தி இயந்திரவியல் (Production / Mechanical) – 7

உற்பத்தி பெட்ரோலியத் தொழில்நுட்பம் (Production/Petrolium Engg/Tech) – 8

இட ஒதுக்கீடு

பொதுப்பிரிவினர் - 24

எஸ்சி – 7

எஸ்டி - 7

ஓபிசி – 6

ஈடபிள்யூஎஸ் – 4

வயது வரம்பு

27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஓபிசி – 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்டி – 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு. முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு 2 ஆண்டு கூடுதல் தளர்வு உண்டு.

job
job

கல்வித் தகுதி

முதுநிலை அலுவலர் பிரிவுகளுக்கேற்பக் கல்வித்தகுதி

புவியியல் (Geology) – முதுநிலை புவியியல் / பயன்முறைப் புவியியல் பட்டம் (PG Geology/Applied Geology) - 60% மதிப்பெண்கள்.

புவி இயற்பியல் (Geophysics) – முதுநிலை புவி இயற்பியல் / பயன்முறைப் புவி இயற்பியல் பட்டம் (PG Geophysics /Applied Geophysics) - 60% மதிப்பெண்கள்.

ரிசர்வாயர் (Reservoir) – இளநிலை பெட்ரோலியப் பொறியியல் (UG Petroleum Engineering) – 65% மதிப்பெண்கள் அல்லது முதுநிலை பெட்ரோலியப் பொறியியல் (PG Petroleum Engineering) – 60% மதிப்பெண்கள்.

டிரில்லிங் (Drilling) – இளநிலை இயந்திரவியல் பொறியியல் (UG Mechanical Engineering) - 65% மதிப்பெண்கள்.

உற்பத்தி இயந்திரவியல் (Production/Mechanical) - இளநிலை இயந்திரவியல் பொறியியல் (UG Mechanical Engineering) - 65% மதிப்பெண்கள் அல்லது முதுநிலை பெட்ரோலியப் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் (PG Petroleum Engineering/Technology) – 60% மதிப்பெண்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.oil-india.com/Current_openNew.aspx எனும் இணையப் பக்கத்துக்குச் சென்று, இந்தப் பணியிடங்களுக்கான `Apply Online’ வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 28.9.2019.

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு (Written Test), குழுக் கலந்துரையாடல் (Group Discussion) மற்றும் நேர்காணல் (Personal Interview), வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை (Physical Fitness).

கூடுதல் தகவல்களுக்கு...

https://www.oil-india.com/Current_openNew.aspx எனும் இணைய முகவரியைப் பார்க்கவும்.

டாக்டர் அம்பேத்கர் தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியரல்லாத பணிகள்

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் இருக்கிறது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் (Dr. B.R.Ambedkar National Institute of Technology Jalandhar). இதில், ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள்

1. தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) – 23

2. (SAS Assistant) – 1

3. இளநிலைப் பொறியாளர் (Junior Engineer) - 3

4. தொழில்நுட்பப் பணியாளர் (Technician) – 26

5. முதுநிலை தொழில்நுட்பப் பணியாளர் (Senior Techinician) - 8

6. இளநிலை உதவியாளர் (Junior Assistant) – 13

7. முதுநிலை உதவியாளர் (Senior Assistant) – 6

8. சுருக்கெழுத்தர் (Stenographer) – 2

9. முதுநிலைச் சுருக்கெழுத்தர் (Senior Stenographer) - 2

10. அலுவலக உதவியாளர் (Office Assistant) - 9

மொத்தப் பணியிடங்கள் - 93

இட ஒதுக்கீடு

பொதுப்பிரிவினர் – 53

ஓபிசி – 22,

எஸ்சி – 8

எஸ்டி - 4

ஈடபிள்யூஎஸ் – 6

வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறை

தகவல் குறிப்பேட்டில் பணிகளுக்கேற்றபடி தனித்தனியாகத் தரப்பட்டிருக்கின்றன.

Jobs
Jobs

எப்படி விண்ணப்பிப்பது?

www.nitj.ac.in எனும் இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

பொது, ஈடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ 500/- செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இணையதளத்தில் விண்ணப்பித்த பிறகு, தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து நிறுவன முகவரிக்கு ஒரு பிரதியை அஞ்சல்வழியில் அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 2.10.2019

கூடுதல் தகவல்களுக்கு...

http://www.nitj.ac.in/index.php/nitj_cinfo/pages/257 எனும் இணைய முகவரியிலிருக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹலோ ஸ்டூடண்ட்ஸ்... மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 13 படிப்புகளுக்கு அட்மிஷன் ஸ்டார்ட்!