Published:Updated:

எல்.ஐ.சி, அரசு இரும்பு ஆலைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்- விண்ணப்பிப்பது எப்படி?

பொக்காரோ இரும்பு ஆலை, டெல்லியில் உதவி ஆசிரியர் மற்றும் இளநிலைப் பணி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உதவியாளர் பணி விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

Job vacancies
Job vacancies ( pixabay )

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உதவியாளர் பணி

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (Life Insurance Corporation) இந்தியா முழுவதும் காலியாக இருக்கும் 8500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இட ஒதுக்கீடு

தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை 1 & 2, கோயம்புத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் என்று 8 கோட்ட அலுவலகங்கள் இருக்கின்றன. இந்த அலுவலகங்களில் பொது – 98, ஓபிசி – 70, எஸ்சி – 43, எஸ்டி – 4, ஈடபிள்யூஎஸ் – 20 என்று மொத்தம் 235 உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தியா முழுவதுமுள்ள 8 மண்டலங்களில் மொத்தம் 8500 பணியிடங்கள் காலி.

வயது வரம்பு

18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2-9-1989 முதல் 1-9-2001 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். ஓபிசி – 3, எஸ்சி, எஸ்டி – 5, மாற்றுத்திறனாளிகள் – 10, மாற்றுத்திறனாளிகள் (எஸ்சி,எஸ்டி) – 15 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் (ஓபிசி) – 13 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு. முன்னாள் ராணுவத்தினருக்கு பணியாற்றிய காலம் + 3 ஆண்டுகள் என்பதுடன் 45 வயதுக்கு மிகையில்லாமல் இருக்க வேண்டும்.

Career
Career

தகுதிகள்

1. ஏதாவதொரு இளநிலைப் பட்டம் (10+2+3) தேர்ச்சி. முன்னாள் ராணுவத்தினருக்கு மேல்நிலைக்கல்வி (Senior Secondary) மற்றும் 10 வருடப் பணி அல்லது பத்தாம் வகுப்பு மற்றும் 15 வருடப்பணி அல்லது பத்தாம் வகுப்புக்குக் குறைவாக இருப்பின் 15 வருடப் பணி மற்றும் இந்திய ராணுவச் சிறப்புச் சான்றிதழ் பயிற்சி அல்லது அதற்கு இணையான சான்றிதழ்.

எப்படி விண்ணப்பிப்பது?

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/licastaug19/ எனும் இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் ரூ.85/-, மற்ற பிரிவினர் ரூ.510/- தகவல் தெரிவிப்புக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 1-10-2019.

தேர்வு முறை

முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) மற்றும் முதன்மைத் தேர்வு (Main Examination) என்று இரு வகையான இணையவழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு

http://licindia.in/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆய்வு நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணிகள்

ஜார்கண்ட் (Jharkhand) மாநிலம், தன்பத்தில் (Dhanbad) அமைந்திருக்கும் மத்தியச் சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆய்வு நிறுவனத்தில் (Central Institute of Mining and Fuel Research) காலியாக உள்ள திட்ட உதவியாளர் (Project Assistants) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இட ஒதுக்கீடு

பல்வேறு நிலக்கரிச் சுரங்கங்களின் ஏற்றுதல் மற்றும் பதிவேற்றும் இடங்களில் மூன்றாம் தரப்பு தரக்கண்காணிப்புத் திட்டங்களில் (Third Party Coal Quality Monitoring Projects at different loading and uploading sites of collieries) திட்ட உதவியாளர் நிலை – 1 பணி - 23 இடங்கள், திட்ட உதவியாளர் நிலை – 2 பணி - 14 இடங்கள்

வயது வரம்பு,

திட்ட உதவியாளர் நிலை–1 - 28 வயது, நிலை-2 – 30 வயது. சட்டரீதியான இட ஒதுக்கீட்டுக் குழுவினர், பெண்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

வேலைத் தகவல்கள்
வேலைத் தகவல்கள்

தகுதிகள்

திட்ட உதவியாளர் நிலை–1 பணிகளில் 10 இடங்கள் - B.Sc., Chemistry, 8 இடங்கள் - B.Sc., Geology, 5 இடங்கள் – Diploma in Mechanical Engineering. 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

திட்ட உதவியாளர் நிலை–2 பணிகளில் 5 இடங்கள் – M.Sc., Chemistry / Applied Chemistry, 6 இடங்கள் – M..Sc., Geology / Applied Geology / Geo- Sciences, 2 இடங்கள் – B.E/B.Tech Mechanical Engineering, 1 இடம் – B.E/B.Tech Electrical & Electronics Engineering. 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

இரு பணியிடங்களும் நேர்காணல் மூலம் நிரப்பப்பட இருக்கின்றன. Mechanical Engineering படிப்பிற்கு 30-9-2019, Geology / Applied Geology / Geo- Sciences/ Electrical & Electronics Engineering படிப்புகளுக்கு 1-10-2019, Chemistry/Applied Chemistry படிப்புகளுக்கு 3-10-2019 அன்று காலை 10.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர்கள் ஒரு ஆண்டு காலத்திற்குத் தற்காலிக/ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். தேவைப்படின் 5 ஆண்டு காலம் வரை நீட்டிக்கப்படலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்நிறுவனத்தின் http://cimfr.nic.in/vacancies.html எனும் இணையப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் இப்பணியிடங்களுக்கான தகவல் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பத்துடன் தேவையான கல்வி, பணி அனுபவம் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு

http://cimfr.nic.in/vacancies.html எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

ஜாம்செட்பூர் தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியரல்லாத பணிகள்

ஜாம்செட்பூர் தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology Jamshedpur) காலியாக இருக்கும் மூன்று நிலைகளிலான பல்வேறு ஆசிரியரல்லாத பணியிடங்கள் (Non-Teaching Positions) நிரப்பப்பட உள்ளன.

இட ஒதுக்கீடு

1. குழு – அ (Group-A)

முதன்மை அறிவியல்/தொழில்நுட்ப அலுவலர் – 1, மேற்பார்வைப் பொறியியலாளர் – 1, துணை நூலகர் – 1, மருத்துவ அலுவலர் – 1 இந்த நான்கு இடங்களும் பொதுப்பிரிவுக்கானது.

2. குழு – ஆ (Group-B)

மேற்பார்வையாளர் – 5, தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலைப் பொறியாளர்/எஸ்ஏஎஸ் உதவியாளர் – 22

பொது – 15, ஓபிசி – 6, எஸ்சி – 3, எஸ்டி – 1, ஈடபிள்யூஎஸ் – 2

3. குழு – இ (Group-C)

முதுநிலை தொழில்நுட்பப் பணியாளர் – 11, தொழில்நுட்பப் பணியாளர் – 22, இளநிலை உதவியாளர் - 9

பொது – 24, ஓபிசி – 9, எஸ்சி – 4, எஸ்டி – 1, ஈடபிள்யூஎஸ் – 4 (42 இடங்களில் இரு இடங்கள் கருணை அடிப்படையிலானது)

Job
Job

வயது வரம்பு, தகுதிகள் & தேர்வு முறை

மேற்காணும் பணியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் தேவையான கல்வித்தகுதி, பணி அனுபவம், வயது வரம்பு போன்றவைகளுடன் பணிகளுக்குத் தேர்வு செய்யும் முறை பற்றிய விவரங்களும் இப்பணிகளுக்கான இணைப்பு – 1 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இந்நிறுவனத்தின் இணையதளத்தில்

www.nitjsr.ac.in/uploads/Annexure.%20-%20I.PDF எனும் பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

இப்பணியிடங்களுக்கு http://122.252.250.252/NTR/CandidateLogin/Login.aspx எனும் இணையப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக Group-A ரூ.2000/-, Group-B ரூ.1000/-, Group-C ரூ.500/- செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணமில்லை. இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 4-10-2019.

விண்ணப்பப்படிவத்தை அச்சிட்டு, அதனுடன் தேவையான கல்வி, பணி அனுபவம் உள்ளிட்ட சான்றிதழ் நகல்கள், பணம் செலுத்திய ரசீது போன்றவைகளுடன் உறையின் மேல் பகுதியில், “APPLICATION FOR THE POST OF ________________________________ & Application number_________________" என்பதைக் குறிப்பிட்டு, “Registrar, National Institute of Technology Jamshedpur, Jamshedpur-831014, Jharkhand, India” எனும் முகவரிக்கு பதிவு அஞ்சல்/ விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்திட வேண்டும். விண்ணப்பம் அலுவலகத்திற்குச் சென்றடையக் கடைசிநாள்: 15-10-2019

மேலும் கூடுதல் தகவல்களுக்கு

http://www.nitjsr.ac.in/uploads/index.php?id=2840&category=notifications எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

பொக்காரோ இரும்பு ஆலையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்திய அரசின் மகாரத்தின நிறுவனங்களில் ஒன்றான இந்திய எஃகு நிறுவனத்தின் (Steel Authority of India Limited) பொக்காரோ எஃகு ஆலையில் இயக்குபவர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் - பயிற்சியாளர் (Operator-cum-Technician Trainee), துணையாள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் - பயிற்சியாளர் (Attendant-cum-Technician Trainee) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இட ஒதுக்கீடு

1. Operator-cum-Technician Trainee

Mechanical - 80, Metallurgy - 100, Electrical - 80, Chemical - 10, Ceramics - 10, Instrumentation – 22 என்று மொத்தம் 302 இடங்கள்.

பொது – 121, ஓபிசி – 36, எஸ்சி - 36, எஸ்டி – 79, ஈடபிள்யூஎஸ் – 30. இவற்றுள் மாற்றுத்திறனாளிகள் – 12, முன்னாள் இராணுவத்தினர் – 44 இடங்கள்.

2. கொதிகலன் இயக்குபவர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் (Operator-cum-Technician (Boiler))

பொது – 3, ஓபிசி – 1, எஸ்சி - 1, எஸ்டி – 2, ஈடபிள்யூஎஸ் – 1 என்று மொத்தம் 8 இடங்கள். இவற்றுள் முன்னாள் இராணுவத்தினர் – 1 இடம்.

3. துணையாள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் - பயிற்சியாளர் (Attendant-cum-Technician Trainee)

பொது – 62, ஓபிசி – 18, எஸ்சி - 18, எஸ்டி – 40, ஈடபிள்யூஎஸ் – 15 என்று மொத்தம் 153 இடங்கள். இவற்றுள் மாற்றுத்திறனாளிகள் – 6, முன்னாள் இராணுவத்தினர் – 22 இடங்கள்.

வயது வரம்பு (11-10-2019)

1 மற்றும் 3 ஆம் பணியிடங்களுக்கு – 28 வயது. 2 ஆம் பணியிடத்திற்கு – 30. எஸ்சி – 5, ஓபிசி – 3, மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

தகுதிகள்

1. பத்தாம் வகுப்பு மற்றும் தொடர்புடைய பொறியியல் பிரிவில் மூன்று ஆண்டு கால அளவிலான பட்டயப்படிப்பு (Diploma Engineering) எஸ்சி, எஸ்டி – 40%, மற்ற பிரிவினர் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.

2. பத்தாம் வகுப்பு (Matriculation) மற்றும் மூன்று ஆண்டு கால அளவிலான பொறியியல் பட்டயப்படிப்பு (Diploma Engineering) எஸ்சி, எஸ்டி – 40%, மற்ற பிரிவினர் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் முதல் வகுப்புக் கொதிகலன் தகுதிச் சான்றிதழ் (1st Class Certificate of Boiler Competency).

3. பத்தாம் வகுப்பு (Matriculation) மற்றும் அகில இந்திய தொழிற்சான்றிதழ் தேர்ச்சி (All India Trade Test by NCVT) மற்றும் ஒருங்கிணைந்த எஃகு ஆலை ஒன்றில் தொழில் பழகுநர் பயிற்சி மற்றும் தேர்ச்சி.

 வேலைத் தகவல்கள்
வேலைத் தகவல்கள்

எப்படி விண்ணப்பிப்பது?

இப்பணியிடங்களுக்கு இந்திய எஃகு நிறுவனத்தின் www.sail.co.in/ எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 1 மற்றும் 2 ஆம் பணியிடங்களுக்கு ரூ.250/-, 3வது பணியிடத்திற்கு ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் போன்றோருக்கு விண்ணப்பக் கட்டணமில்லை. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 11-10-2019. தேர்வு முறை: Written Test, Skill Test/Trade Test

மேலும் கூடுதல் தகவல்களுக்கு https://www.sail.co.in/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

டெல்லியில் உதவி ஆசிரியர் மற்றும் இளநிலைப் பொறியாளர் பணிகள்

டெல்லி மாநிலக் கல்வி இயக்குநரகத் துறையின் (Directorate of Education) கீழான பள்ளிகளில் உதவி ஆசிரியர் (Assistant Teacher) பணியிடங்களும், டெல்லி நீர் வாரியத்தில் (Delhi Jal Board) இளநிலைப் பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களும் டெல்லித் துணைச் சேவைகள் தேர்வு வாரியம் (Delhi Subordinate Services Selection Board) மூலம் நிரப்பப்பட உள்ளன.

இட ஒதுக்கீடு

1. தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர்கள்

பொது – 332, ஓபிசி – 119, எஸ்சி – 115, எஸ்டி – 35, ஈடபிள்யூஎஸ் – 36, மொத்தம் - 637 (மாற்றுத் திறனாளிகள் - 29)

2. மழலையர்பள்ளி உதவி ஆசிரியர்கள்

பொது – 77, ஓபிசி – 26, எஸ்சி – 21, எஸ்டி – 9, ஈடபிள்யூஎஸ் – 8, மொத்தம் - 141 (மாற்றுத் திறனாளிகள் - 11)

3. இளநிலைப் பொறியாளர்கள் (குடிசார் பொறியியல்)

பொது – 55, ஓபிசி – 63, எஸ்சி – 39, எஸ்டி – 27, ஈடபிள்யூஎஸ் – 20, மொத்தம் - 204 (மாற்றுத் திறனாளிகள் - 8)

வயது வரம்பு

மூன்று பணிகளுக்கும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓபிசி – 3, எஸ்சி, எஸ்டி – 5, மாற்றுத்திறனாளிகள் – 10, மாற்றுத்திறனாளிகள் (எஸ்சி,எஸ்டி) – 15 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் (ஓபிசி) – 13 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு. டெல்லி மாநிலத்தவர் தவிர, பிற மாநிலத்தவர்கள் ஓபிசி பிரிவினராக இருப்பினும் பொதுப்பிரிவினராகவேக் கருதப்படுவர்.

வேலைத் தகவல்கள்
வேலைத் தகவல்கள்

தகுதிகள்

1. மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான தேர்வில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றுத் தேர்ச்சி மற்றும் Diploma in Elementary Education அல்லது Bachelor of Elementary Education படிப்பில் தேர்ச்சி மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) நடத்திய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test) தேர்ச்சி. மேல்நிலைக்கல்வியில் இந்தி, உருது, பஞ்சாபி அல்லது ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மேல்நிலைக்கல்வி (Senior Secondary) அல்லது அதற்கு இணையான தேர்வில் 45% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றுத் தேர்ச்சி மற்றும் இரண்டு ஆண்டு கால அளவிலான Diploma/Certificate in Nursery Teacher Education அல்லது B.Ed. (Nursery) தேர்ச்சி. பத்தாம் வகுப்பில் இந்திப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. B.E/B.Tech (Civil) அல்லது மூன்றாண்டு கால Diploma in Civil Engineering மற்றும் கட்டுமானப் பணிகள், திட்டமிடல், பராமரிப்புப் பணிகளில் இரண்டு ஆண்டு கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எப்படி விண்ணப்பிப்பது?இப்பணியிடங்களுக்கு http://dsssbonline.nic.in எனும் இணையப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் போன்றோருக்கு விண்ணப்பக் கட்டணமில்லை.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 15-10-2019.

தேர்வு முறைடெல்லித் துணைச் சேவைகள் தேர்வு வாரியம் (Delhi Subordinate Services Selection Board) நடத்தும் ஒரு அடுக்கு (தொழில்நுட்பம்) / இரண்டு அடுக்கு (தொழில்நுட்பம்) தேர்வு (One Tier (T)/Two Tier (T) Examination) மூலம் நிரப்பப்படும். இத்தேர்வுகள் டெல்லியில் மட்டுமே நடத்தப்பெறும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://dsssb.delhi.gov.in எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

இன்ஜினியரிங், விமானப் பராமரிப்பு... இன்னும் ஏராளமான வேலை வாய்ப்புத் தகவல்கள்! #JobVacancy